ஹைதெராபாத்-சென்னை-பெங்களூர் அணிகள் ஏலத்தில் எதிர்பார்க்கவேண்டிய மூன்று வீரர்கள் -ஒரு சிறப்பு கண்ணோட்டம்

மிச்சேல் ஸ்டார்க் மற்றும் டேவிட் வார்னர்
மிச்சேல் ஸ்டார்க் மற்றும் டேவிட் வார்னர்

#. பேன் லாப்லின் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பேன் லாப்லின்
பேன் லாப்லின்

இது எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் ஆச்சே என்று நீங்கள் நினைத்திருந்தால் அதற்கு பதில் ஆம் 2013-ஆம் ஆண்டு சென்னை அணிக்காக இவர் ஆடியிருந்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் உலகில் நடக்கும் பல்வேறு டி20 லீகுக்களில் பங்கேற்று வருகிறார். டி20 ஸ்பெஷலிஸ்ட்டான இவர் சென்னை அணிக்காக இரண்டு போட்டிகளில் களம் கண்டுள்ளார். பந்துவீச்சு மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் அடித்து ஆடுவார். கடந்த ஆண்டு இவரை ராஜஸ்தான் அணி ௹ 50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

ஸ்லோ பால் களின் மூலம் பேட்ஸ்மேனின் திசைதிருப்பும் யுக்தியில் இவர் வல்லமைமிக்கவர். தன் பந்துவீச்சில் ரன்களை கொடுத்தாலும் விக்கெட்களை மாய்ப்பதில் திறன் பெற்றவர். கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானிற்காக 7 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

விக்கெட் டேக்கிங் பவுலராக இருக்கும் இவர் பந்துவீச்சில் சொதப்பும் பெங்களூரு அணிக்கு பக்கபலமாக இருப்பார்.

மீதமுள்ள ஏலப்பணம் : ௹ 18.15 கோடி

பரிமாற்றம் : ஸ்டோய்னிஸே பஞ்சாபிடமிருந்து வாங்கிக்கொண்டு மந்தீப் சிங்கை விற்றுள்ளது. டி காக்கை மும்பைக்கு விற்றுள்ளது.

காலியிடங்கள் : மொத்தம் 10 --> (8 இந்திய வீரர்கள் ; 2 வெளிநாட்டு வீரர்கள்)

#. ஜெயதேவ் உனட்கட் - சென்னை சூப்பர் கிங்ஸ்

தோனி மற்றும் ஜெயதேவ் உனட்கட்
தோனி மற்றும் ஜெயதேவ் உனட்கட்

எல்லாம் அமைந்துவிட்டாலும் சென்னைக்கு பல காலமாக ஒரு குறை இருந்து வந்துள்ளது அது என்னவென்றால் - ஒரு சிறந்த இந்திய பந்துவீச்சாளர். ஆம் லட்சுமிபதி பாலாஜி-க்கு பிறகு சொல்லிக்கொள்ளும் வகையில் இந்திய பந்துவீச்சாளர்கள் சென்னை அணிக்கு அமையவில்லை.

மோகித் சர்மா போன்றோர் ஓரிரு போட்டிகளில் சிறந்த பங்காற்றினாலும் அதைத் தக்கவைத்துக்கொள்ள தவறினர்.அதன் காரணமாக அணியிலிருந்து கழட்டி விடப்பட்டனர்.

கடந்த சீசன் ஏலத்தில் சென்னைக்கு இவர் மீது ஒரு கண் இருந்தது. ஏனெனில் தோனி தலைமையில் புனே அணிக்கு சிறந்த பங்காற்றியிருந்தார். ஏலத்தில் இவரை எடுக்க சென்னை அணியும் பஞ்சாப் அணியும் படும் பாடுபட்டனர் இவரது விலையானது பல கோடிகள் தாண்டியது, இறுதியில் யாரும் எதிர்பாராதவிதமாக ராஜஸ்தான் இவரை ௹ 11.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இவர் விலைக்கேற்ப நல்ல பர்ஃபார்மன்ஸ் கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு தலைகீழாகவே அவர் பர்பாமன்ஸ் இருக்க ராஜஸ்தான் அணிக்கு ஒரு பேரிடியாக அமைந்தது.

எனினும் தோனி எத்தகைய வீரரையும் தனக்கான பாணியில் வழிநடத்த கூடியவர் .எனவே தோனியின் கீழ் புனே அணியில் ஆடிய இவரின் கை மேலோங்கியிருந்தது அதுவே இவரின் விலையின் சாட்சியம். சென்னை நிர்வாகம் இவரை இந்த முறையாவது ஏலத்தில் வெள்ள முனைப்போடு இருப்பர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

மீதமுள்ள ஏலப்பணம் : ௹ 8.40 கோடி

காலியிடங்கள்: மொத்தம் 2 ---> (2 இந்திய வீரர்கள் , 0 வெளிநாட்டு வீரர்கள)

வெளியேற்றம் : மார்க் வுட், கஷிட் சர்மா, கனிஷ்க் சேத்

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now