விராட் கோலி தலைமையில் பங்கேற்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை நடைபெற்ற 11 சீசனில் கோப்பை வென்றதில்லை, இருப்பினும் இம்முறை பல புதிய முகங்களுடன் களம் காண்பதால் முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
2018 ஆம் ஆண்டு, 11 ஆம் சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னரே வெளியேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இம்முறை அணியில் பல மாற்றங்களை கொண்டு களமின்றகுகின்றனர். முதலாவதாக அணியின் தலைமை பயிற்சியாளரான வெட்டோரி அணியிலிருந்து நீக்கப்பட்டார். பின்பு தென்னாப்பிரிக்கா அணியின் குயின்டன்டிகாக் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். மந்தீப் சிங் கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்கும் ஸ்டாயினிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் மாற்று வர்த்தகம் நடைபெற்றது.
15 பேரை மட்டும் கொண்டிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் பெரும்பாலான வீரர்களை எடுக்கும் முனைப்பில் இருந்தது. ஏலத்தில் தனது குறிக்கோளான ஹெட்மையரை வெற்றிகரமாக தன்வசப்படுத்தியது பெங்களூரு நிர்வாகம். மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ஹெட்மையரை 4.2 கோடிக்கு வாங்கியது. பின்பு தென்னாப்பிரிக்கா அணியின் கிளாஸ்ஸனை 50 லட்சத்திற்க்கு பெற்றனர்.
இந்திய வீரர்களில் சிவம் டுபேவை 5 கோடிக்கு பெற்றனர். மும்பை அணிக்காக விளையாடும் ஆல்ரவுண்டரான இவர் அதிரடி ஆட்டதிற்க்கு பெயர் போனவர். இவர்களை தவிர பர்மன், குர்கீராட் சிங், மிலிட் குமார், ஹிம்மட் சிங், அக்ஷ்தீப் நாத் மற்றும் படிக்கல் போன்ற வீரர்களை பெற்றார்கள்.
2019ஆம் ஆண்டிற்கான 25 பேர் கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி :
விராட் கோலி (கேப்), டிவில்லியர்ஸ், ஹெட்மையர், ஹிம்மட் சிங், மிலிட் குமார், தேவ்டுட் படிக்கல், மோயின் அலி, கோலின்டி கிராண்ட்ஹோம், பவான் நெகி, வாஷிங்டன் சுந்தர், ஸ்டாய்னிஸ், சிவம் டுபே, குர்கீராட் சிங், அக்ஷ்தீப் நாத், பார்திவ் படேல், கிளாஸ்ஸன், உமேஷ் யாதவ், சவுதி, நாதன் கூல்டர்நைல், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, யுசி சாகல், பர்மான், கெஜ்ரோலியா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் பல ஆல்ரவுண்டர்கள் மற்றும் திறமையான வெளி நாடு வீரர்கள் இருப்பதால் விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமே.
இவற்றில் உத்தேச அணியை பற்றி பார்க்கலாம் :
டாப் ஆர்டர் (1-3):
பார்திவ் படேல், வாஷிங்டன் சுந்தர், விராட் கோலி.
ஆர்சிபி அணிக்கு துவக்க வீரர்கள் இல்லாத காரணத்தால் சுந்தர் மற்றும் பார்திவ் துவக்கம் தருவது நிலையாக இருக்கும், அதன் பின்பு கோலி வழக்கம் போல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது உறுதி. சுந்தர் வழக்கமான துவக்க வீரர் இல்லை எனினும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கைகொடுக்கும் அதுமட்டுமின்றி பவர்ப்ளேயில் வேகமாக ரன் சேர்க்கலாம்.
மிடில் ஆர்டர் (4-7):
டிவில்லியர்ஸ், ஹெட்மையர், டுபே, ஸ்டாய்னிஸ்.
மிடில் ஆர்டரில் வழக்கம் போல் டிவில்லியர்ஸ் தொடரலாம், பின்பு ஹெட்மையர் ரன் வேகத்தை கட்டுப்படுத்துவதுடன் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தலாம். ஆல்ரவுண்டர்களான டுபே மற்றும் ஸ்டாய்னிஸ் பினிஷர்களாக கடைசி கட்ட ஓவர்களில் செயல்படலாம். இவர்களின் பந்துவீச்சு அணிக்கு கூடுதல் பலம்.
பந்துவீச்சாளர்கள் (8-11):
சவுதி, உமேஷ் யாதவ், சிராஜ், சாகல்
சுழற்பந்துவீச்சில் சகால் சுந்தர் உடன் இணையலாம். வேக பந்துவீச்சில் சிராஜ் கடைசி கட்ட ஓவர்களிலும் சவுதி மற்றும் உமேஷ் பவர்ப்ளே ஓவர்களிலும் பலம் சேர்க்கலாம்.