Create
Notifications
Favorites Edit
Advertisement

இந்த வருட ஐபிஎல் தொடரில் கேப்டனை மாற்ற வாய்ப்பிருக்கும் 4 அணிகள்!

  • திறமையான பல வீரர்கள் இருந்தும் வருடா வருடம் கோட்டைவிடும் அணிகள் இவை
Vignesh Kumar
CONTRIBUTOR
முதல் 5 /முதல் 10
Modified 20 Dec 2019, 19:49 IST

பெங்களூரின் விராட் கோலி மற்றும் ராஜஸ்தானின் ரகானே
பெங்களூரின் விராட் கோலி மற்றும் ராஜஸ்தானின் ரகானே

ஐபிஎல் என்ற கோளாகலத் திருவிழா 11 வருடம் நடந்து முடிந்துள்ள வேளையில் இந்த வருடம் வெகுசீக்கிரமாகச் செய்திகளில் அடிபடத் துவங்கிவிட்டது. 12வது ஐபிஎல் தொடர் அடுத்த வருட மார்ச் மாத மத்தியில் துவங்கி மே மாத 3ஆம் வாரம்வரை நடக்க உள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு செட் ஆகாத வீரர்களைக் கழற்றி விட்டு விட்டு அதற்கேற்ப வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. அவர்களுக்கான ஒப்பந்தத்தை முடித்துவிட்டு அடுத்த மாத மத்தியில் கோவாவில் நடக்கவுள்ள ஐபிஎல் ஏலத்தில் புதிய வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் அணிகள் களம் இறங்கும்.

வீரர்கள் மட்டுமல்லாது ஒரு சில அணிகளுக்குச் சரியான மற்றும் தகுதி வாய்ந்த கேப்டன்கள் இன்னும் அமையவில்லை. சொல்லப்போனால் கிட்டத்தட்ட ஒரு சில அணிகள் முதல் தொடரிலிருந்து தற்போது வரை சரியான ஒரு கேப்டன் இல்லாமல் கடுமையாகச் சோடை போவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். கிரிக்கெட் என்பது ஒரு கேப்டனுக்கான கேம் என சமீபத்தில் முன்னாள் இந்திய ஜாம்பவான் கங்குலி கூறியுள்ளதை கேட்டோம். கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு கேப்டன் தன் அணியை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதும் பரபரப்பான ஆட்டத்தில் சூட்டோடு சூடாக எப்படி சரியான முடிவுகளை எடுக்கிறார் என்பதில்தான் அணியின் வெற்றி பெரும்பாலும் அடங்கியிருக்கிறது.

ஐபிஎல் தொடரில் கேப்டன்களின் பங்கு மிகப் பெரியதாகவும், இன்றியமையாததாகவும் இருந்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளில் தங்களுக்கு கிடைத்த உள்ளூர் வீரர்களை வைத்துக்கொண்டே அற்புதமாகக் கேப்டன்ஷிப் செய்து தலைமைப் பண்பின் வழிநடத்தல் காரணமாகக் கோப்பையை வென்று குவித்துள்ளனர். ஆனால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் போன்ற அணிகளைப் பார்க்கும்போது அந்த அணியில் சிறந்த வீரர்கள் சூழ்ந்து இருப்பினும் கேப்டன் என்னும், ட்ரம்ப் கார்ட், சரியாக அமையாததால் தற்போது வரை அந்த அணிகளால் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை என்பது நிதர்சனம்.

தற்போது 12வதுஐபிஎல் தொடரில் தங்களது கேப்டன்களை மாற்ற வாய்ப்பு இருக்கும் அணிகளைப் பற்றிப் பார்ப்போம்


4. கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இஞ்சினியர்ங் மூலையை வைத்துக் கண்க்கிட்டு வெற்றி பெரும் அஸ்வின்
இஞ்சினியர்ங் மூலையை வைத்துக் கண்க்கிட்டு வெற்றி பெரும் அஸ்வின்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சென்ற வருட ஏலத்தில் பெரிது பெரிதாகக் காய்களை நகர்த்தியது. தன்னிடம் இருந்த அனைத்து வீரர்களையும் வெளியேற்றிவிட்டு அக்சர் பட்டேலை மற்றும் வைத்துக்கொண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிக்கொண்டிருந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை வாரிச் சுருட்டி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டது.

சென்ற வருட ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் அஸ்வின். நுணுக்கமான கிரிக்கெட் வித்தைகளைக் கற்று தேர்ந்தவர் அவர். எதையும் கணக்கிட்டு செய்து வெற்றி கொள்ளும் சுபாவம் உடையவர். தொடர் துவங்கும் முன்பே பலமுறை வாய் வார்த்தையில் விளையாடினார். நான் 'Unpredictable' கேப்டனாக இருக்கப்போகிறேன் என்றெல்லாம் கூறினார்.

அதே போன்று முதல் 5 போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் உண்மையிலேயே ஒரு அற்புதமான கேப்டன் என்னும் அளவிற்கு நன்றாகச் செயல்பட்டார். ஆனால் வெகுவேகமாக ஓடிய அந்த அணி கடைசி 8 போட்டிகளில் படு பாதாளத்தில் விழுந்தது.

Advertisement

இதற்கெல்லாம் காரணம் அஸ்வின் கேப்டன்ஷிப் தானெனக் கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சகர்களும் எழுதத் துவங்கினர். 32 வயதான அஸ்வின் கேப்டன்ஷிப்பில் சற்று சோடை போகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் தற்போது அந்த அணியின் ஆலோசகராக இருந்த விரேந்தர் சேவாக்கை நீக்கியுள்ளது. இதன் காரணமாக அஸ்வினின் கேப்டன்ஷிப் பறிபோக நிறைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் அந்த அணிக்குத் துவக்க ஆட்டக்காரராக அதிரடியாக விளையாடிப் பலமுறை வெற்றி வாய்ப்புகளை உருவாக்கிய கேஎல் ராகுலை தலைமையிடத்தில் அமர்த்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 / 4 NEXT
Published 14 Nov 2018, 21:15 IST
Advertisement
Fetching more content...