3. ராஜஸ்தான் ராயல்ஸ்
ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் தலைமையில் களமிறங்கிய இந்த அணி 2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றது. அதன்பின்னர் கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்த அணியிடமிருந்து பெரிதாக எந்த ஒரு செயல்பாட்டையும் நாம் பார்க்கவில்லை.
சென்ற வருடம் அஜின்கியா ரஹானே தலைமையில் களமிறங்கிய இந்த அணி ஐபிஎல் தொடரின் இறுதியில் நான்காவது இடத்தைப் பிடித்தது. ஆனால் திறமையான வீரர்களைக் கொண்டிருந்த ராஜஸ்தான் கோப்பையை வென்று இருக்க வேண்டும். கடைசிவரை படுபாதகமான சொதப்பிய ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி ஒரு சில போட்டிகளில் வென்று நான்காவது இடத்தைப் பிடித்தது என்பதே உண்மை நிலைமை. அந்த அணியின் கேப்டனாக இருந்த அஜின்கியா ரஹானே பேட்டிங், கேப்டன்ஷிப் என அனைத்திலும் கடுமையாகச் சொதப்பினார்.
அவரிடம் பார்ம் கையில் இல்லை, பேட்டிங்கில் பார்மில் இல்லாத காரணத்தால் சொதப்பினார். மேலும் 20 ஓவர் போட்டிகளுக்கு ஏற்ற அதிரடி ஆட்டம் அவரிடம் இல்லை. பேட்டிங்கில் பார்ம் இல்லாத்தால் அவரால் ஒரு அணியைத் தலைமை தாங்கி நடத்த முடியவில்லை. இதன் காரணமாக இந்த முறை அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் அந்த இடத்திற்காக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
பட்லர் கடந்த ஒரு வருடமாக நல்ல ஃபார்மில் இருக்கிறார். மேலும் சென்ற வருடம் ராஜஸ்தான் அணிக்காகத் தொடர்ந்து 6 அரை சதம் விளாசினார் டி20 கிரிக்கெட்டில் மிகவும் அமைதியாகவும் பொறுப்பான அதிரடியுடன் ஆடும் அவருக்குப் பேட்டிங் பற்றிப் பிரச்சனை இல்லை. அவர் ஒரு நல்ல கேப்டனாக இருப்பாரென நாம் நம்பலாம்.