2.டெல்லி டேர்டெவில்ஸ்
முதல் ஐபிஎல் தொடரிலிருந்து தற்போது வரை பெரிதாக ஏதும் சாதிக்காமல் ஓரணி இருக்குமென்றால் அது டெல்லி டேர்டெவில்ஸ் அணியேயாகும். ஒவ்வொரு ஆண்டும் அணியை மாற்றியும் கேப்டனை மாற்றியும் பல வியூகங்களை வகுத்துப் பார்த்தும் இந்த அணிக்கு ஒன்றும் கைகூடவில்லை.
ஆனால் இந்த அணியில் பல இளம் வீரர்களும் அதிரடியான திறமை வாய்ந்த வீரர்களும் வருடா வருடம் வந்து குவிந்து விடுவார்கள். அவர்களது தனிப்பட்ட ஆட்டம் அற்புதமாக அமையும். ஆனால், ஒரு அணியாக டெல்லி டேர்டெவில்ஸ் என்றால் பெரிதாக ஏதும் சாதிக்கமுடியவில்லை.
சென்ற வருடம் கௌதம் காம்பீர் இந்த அணிக்குக் கேப்டனாக முதலில் பொறுப்பேற்றார். ரிக்கிபாண்டிங் பயிற்சியாளராக இருந்தார். முதலில் சில போட்டிகள் கவுதம் கம்பீர் தலைமையில் தோற்க ரிக்கி பாண்டிங் மற்றும் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் ஆகிய இருவருக்கும் பனிப்போர் ஏற்பட்டு கவுதம் காம்பீர் தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் அணியிலிருந்தும் ஓரம் கட்டப்பட்டார். லெவனில் இருந்தும் அவர் நகர்த்தப்பட்டு புதிய வீரர் சேர்க்கப்பட்டார்.
அதன் பின்னர் இந்தியாவின் இளம் வீரர் ஷ்ரேயஸ் கேப்டனாக இணைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டார். இதன் பின்னர் டெல்லி அணி ஓரளவிற்கு நன்றாக ஆடியது. பேட்டிங்கை போல் ஸ்ரேயசால் கேப்டன்ஷிப்பில் அனைவரையும் ஈற்க முடியவில்லை. மேலும் அவருக்குப் போதிய அனுபவமும் இல்லை. இந்த வருட ஏலத்திற்கு முன் நடக்கும் மாற்றங்களில் தவான் டெல்லி அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார் தற்போது டெல்லி அணிக்குத் திரும்பியுள்ள சிகர் கேப்டன் பொறுப்பை ஏற்கலாமெனத் தெரிகிறது.