1. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
என்னதான் இந்திய அணிக்கு மிகச்சிறந்த கேப்டனாகவும் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் என முடிசூடா மன்னனாக வலம் வந்தாலும் விராட் கோலி ஐபிஎல் தொடர்களின்போது தனது அணியைப் பெரிதாக வெற்றி பெற வைக்க முடியவில்லை என்பதே நிதர்சமான உண்மை. பெங்களூர் அணியிடம் அனைத்தும் இருக்கிறது விராட் கோலிக்கு உறுதுணையாகச் சிறந்த பயிற்சியாளர், அற்புதமான வீரர்கள், ஆல்ரவுண்டர்கள் நுணுக்கமான சுழற்ப்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் என அனைவருமே வருடாவருடம் அவரது அணியில் வந்து குவிகின்றனர்.
ஆனால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அவரால் ஒரு சிறந்த கேப்டனாகத் தற்போது வரை செயல்பட முடியவில்லை. கடந்த 11 வருடமாக அந்த அணியில் ஆடி வரும் கோலி ஏழு வருடங்களாகக் கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார். மொத்தம் 96 போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டனாக இருந்து உள்ள கோலி 44 போட்டிகளில் வெற்றி 47 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளார். 2 டை, 3 முடிவில்லை.
சென்ற வருட ஐபிஎல் தொடரில் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 6வது இடத்தைப் பிடித்தது. இந்த வருடம் விராட் கோலி கேப்டனாக மாற்றப்பட பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் என்ற இரண்டு பாரங்களையும் சுமக்கும் அவர் ஒரு பாரத்தை தற்போது ஓய்வுபெற்றுள்ள ஏபிடி வில்லியர்ஸ் இடம் கொடுக்கலாம். இதுகுறித்து முன்னதாகச் செய்திகளும் வந்துள்ளது. அதனைத் தாண்டி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் உலக கோப்பை தொடர் கையோடு தொடங்குகிறது. இதனால் விராட் கோலிக்கு ஓய்வு தேவை இதன் காரணமாக இந்த வருடம் அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு ஏபிடி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.