இந்தியாவில் மிகபிரமாண்டமாக நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்). இது 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இந்திய இளம் வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் பெரியளவில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதுவரை 11 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில் 12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் கடந்த 11 சீசன்களில் அதிக முறை பிளே-ஆஃப் போட்டிகள் விளையாடிய அணிகள் யார்யார் என இங்கு பார்ப்போம்.
#4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கொல்கத்தா அணி முதல் மூன்று சீசன்கள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. எனினும் கடைசி மூன்று சீசன்களாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று வருகிறது. கொல்கத்தா அணி முதன் முதலில் 2011 ஆம் ஆண்டு பிளே-ஆஃப் சுற்றில் மும்பை அணியுடன் மோதி தோல்வி அடைந்தது. எனினும் 2012 ஆம் ஆண்டு சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதே போல் 2014 ஆம் ஆண்டு கம்பீர் தலைமையில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள கொல்கத்தா அணி இதுவரை 10 போட்டிகள் விளையாடி உள்ளது.
#3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு
ஐபிஎல் அணிகளில் அதிஷ்டமே இல்லாத அணி என்றால் அது பெங்களுரு அணி தான். ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே-ஆஃப் சென்றுள்ள அணியில் முன்றாவதாக இருக்கும் பெங்களுரு அணி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இதுவரை மூன்று முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ள பெங்களுரு அணி மூன்று முறையும் தோல்வியே அடைந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஹைதெராபாத் அணிக்கு ஏதிரான இறுதி போட்டியில் நூலிழையில் தோல்வி அடைந்தது. இதுவரை 11 ப்ளே-ஆஃப் போட்டிகள் விளையாடி உள்ளது.
#2 மும்பை இன்டியன்ஸ்
ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் மும்பை அணி, இதுவரை மூன்று முறை சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. இந்த அணி 11 சீசன்களில் நான்கு முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதன் முதலில் சென்னை அணியுடன் இறுதி போட்டியில் மோதி தோல்வி அடைந்தது. 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதுவரை ஏழு சீசன்கள் ப்ளே-ஆஃப் சென்றுள்ள மும்பை அணி 14 பிளே-ஆஃப் போட்டிகள் விளையாடியுள்ளது.
#1 சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் வரலாற்றில் பங்கேற்ற அனைத்து சீசின்களும் பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்ற ஒரே அணி என்ற பெறுமை சென்னை அணிகே சேரும். ஏழு முறை இறுதி போட்டிக்கு சென்ற ஒரே அணியும் சென்னை அணி தான். இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018 ஆகிய ஆண்டுகள் இறுதிபோட்டிகள் சென்றதுள்ளது. 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. சென்னை அணி இதுவரை 19 பிளே-ஆஃப் போட்டிகள் விளையாடி உள்ளது.