2018-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற டாப் 5 அணிகள்

cricket stars
cricket stars

2018 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சில உணர்வூட்டும் செயல்களை தனிநபராகவும் ஒட்டுமொத்த அனியாகவும் பலர் வெளிப்படுத்தினர். இந்த வருடத்தில் தான் இருமுறை உலக கோப்பை சாம்பியன் ஆன மேற்குஇந்திய தீவுகள் அணி 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்குகொள்ள தகுதி சுற்றில் விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது, கத்துக்குட்டியான ஸ்காட்லாந்து ஜாம்பவான் ஆன இங்கிலாந்தை தோர்க்கடித்தது மேலும் உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டியின் அதிகபடியான ஸ்கோரை குவித்தது இங்கிலாந்து மற்றும் கிரிக்கெட் உலகை மிரட்டி வரும் ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் மேற்குஇந்திய தீவுகள் அணிகளை வீழ்த்தி உலக கோப்பை தகுதி சுற்றை வென்றது. இந்த ஆண்டு சில தனிநபர் திறமைகளையும் பார்த்தது மற்றும் புதிய வீரர்கள் தங்களது திறமையை இவ்வுலகிற்கு பதிவு செய்தனர்.

இந்த ஆண்டு நிறைவு பெறும் நேரத்தில் அனைத்து அணிகளும் உலக கோப்பை போட்டிக்கு தயாராகி வருகிறது. இன்னும் ஆறே மாதங்கள் எஞ்சிய நிலையில் அணிகள் அனைத்தும் கோப்பையை வெல்ல மும்முரமாக உள்ளது. தற்போது மும்முரமாக முயற்சித்து வரும் மற்றும் 2018ல் அதிக ஒருநாள் போட்டிகளை வென்ற டாப் 5 அணிகளை காண்போம்

#5 தென் ஆப்பிரிக்கா

South African Team
South African Team

இவ்வருடம் புரோட்டியஸ் இந்தியா உடனான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, ஆனால் அதே வெற்றியை ஒருநாள் போட்டிகளில் தொடர முடியவில்லை. தென் ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் இந்தியாவிடம் முதல்முறையாக தோற்றது ஆறு போட்டிகள் கொன்ற தொடரில் 5-1 என படுதோல்வி அடைந்து இந்த ஆண்டில் மிகவும் சுமாரான துவக்கத்தையே அளித்தது.

அடுத்ததாக இலங்கைக்கு சென்ற தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவியது, இருப்பினும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றியை பெற்றது.

அடுத்ததாக ஜிம்பாப்வே அணியுடன் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அனைத்திலும் வெற்றியை பெற்றது. கடைசியாக இவ்வருடம் தென் ஆப்பிரிக்காவிற்கு இனிதாகவே அமைந்தது ஆஸ்திரேலியா சென்ற தென் ஆப்பிரிக்கா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் வெற்றியை பெற்றது.

17 ஆட்டங்களில் மொத்தம் 9 வெற்றிகள், 52.94% சதவிகிதம் வெற்றி பெற்ற நிலையில், தென்னாப்பிரிக்கா இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

#4 ஆப்கானிஸ்தான்

Afganistan Cricket Team
Afganistan Cricket Team

கத்துக்குட்டியாக இருந்து வந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஜாம்பவான் அணிகளையும் மிரட்டி வருவதுதான் இந்த தசாப்தத்தின் சிறந்த கதை. 2018-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகவும் சிறப்பான முறையில் அமைந்தது. 2019 உலக கோப்பைக்கான தகுதி சுற்றை வென்றது, துவக்கத்தில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஹாங்காங் அணிகளிடம் தோல்வியுற்றாலும் அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டுவந்து இறுதி போட்டியில் இருமுறை உலக சாம்பியன் ஆன மேற்குஇந்திய தீவுகள் அணியை வென்றதன் மூலம் கோப்பையை வென்று 2019 உலக கோப்பையிலும் இடம்பெற்றது.

அடுத்தது ஜிம்பாப்வே சென்ற ஆப்கானிஸ்தான் அணி அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் எளிதாக வென்றது. இதைத்தொடர்ந்து அயர்லாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று வெற்றியை பதிவு செய்தது.

அடுத்ததாக ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி தனது முழு திறமையை வெளிபடுத்தியது. குரூப் பிரிவில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தி தனது குரூபில் முதல் இடத்தை பெற்றது. அடுத்ததாக நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் சுற்றில் தன்னுடன் மோதிய சக அணிகளுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது, மற்ற அணிகளுடன் கடைசி ஓவர் வரை போராடி தோற்ற ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் ஒருபடி மேலே சென்று போட்டியை டிரா செய்தது.

20 ஆட்டங்களில் இருந்து 12 வெற்றிகள் 60 % சதவிகித வெற்றி விகிதத்தில், ஆப்கானிஸ்தான் 2018 ஆம் ஆண்டு அவர்களின் முன்னேற்ற ஆண்டு கருத்தில் கொள்ளலாம், அவர்களால் உலகில் சிறந்த அணிகளையும் எளிதாய் வெல்ல முடியும் என்பதை இவ்வுலகிற்கு காட்டினர். நிச்சியமாக வரும் உலக கோப்பை போட்டிகளில் தன்னுடன் மோதுகின்ற அணிகளுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என நம்பலாம்.

#3 வங்கதேசம்

Bangladesh Cricket Team
Bangladesh Cricket Team

வங்கதேச கிரிக்கெட் அணி பல ஆண்டுகளாக தனது முன்னேற்றத்தை இவ்வுலகிற்கு காண்பித்து கொண்டே வருகிறது, அதில் இவ்வருடமும் மாற்றம் இல்லை. வங்கதேசம், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே இடையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் நடைபெற்ற குரூப் சுற்றில் நான்கில் மூன்று போட்டிகளில் வெற்றியை பதிவு செய்து இறுதி போட்டிக்கு முன்னேறியது, இறுதி போட்டியில் இலங்கை அணியுடன் தோல்வியை தழுவியது. அதை தொடர்ந்து மேற்குஇந்திய தீவுகள் சென்ற வங்கதேசம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

அடுத்ததாக ஆசிய கோப்பையில் இரண்டாம் இடத்தை பிடித்தது, இறுதி போட்டியில் இந்திய அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. குரூப் சுற்றில் இலங்கையுடன் வெற்றியையும் ஆப்கானிஸ்தானுடன் தோல்வியை சந்தித்தது. அதையடுத்து சூப்பர் சிக்ஸ் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிடம் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

கடைசியாக ஜிம்பாப்வே அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்று எளிதில் வென்றது.

20 ஆட்டங்களில் 13 வெற்றியுடன், 65% வெற்றி சதவிகிதம் பெற்று இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது வங்கதேசம்.

#2 இந்தியா

Indian Cricket Team
Indian Cricket Team

இந்த ஆண்டின் துவக்கத்தில் தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் 2-1 என கணக்கில் தோல்வியுற்றாலும் ஒருநாள் தொடரில் சரியான பதிலடி கொடுத்தது. இந்திய அணியின் ஸ்பின்னர்கள் தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசினர். ஒரு போட்டியில் மட்டும் க்ளாஸன், மில்லர் ஜோடி இந்திய அணியின் வெற்றியை பறித்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்று சதங்களை விளாசினார், இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட தொடரை 5-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதுவே இந்திய அணி தென் ஆப்பிரிக்கா மண்ணில் பெற்ற முதல் தொடர் வெற்றியாகும். அதைத்தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து சென்றது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த போட்டிகளில் தனது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியடைந்தது.

அடுத்ததாக நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகள் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்தது. ஹாங்காங் அணியுடனான துவக்க போட்டியில் சற்றே தடுமாறினாலும் மற்ற போட்டிகளில் வெற்றியை பெற்று ஆப்கானிஸ்தான் உடன் டிரா செய்தது. கடைசியாக இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை வென்று ஏழாவது முறையாக கோப்பையை வென்றது.

அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும் மே.இ தீவுகள் அணி சற்று பயமுறுத்தியது. இத்தொடரின் மூலம் இந்திய அணி தனது நான்காம் வரிசை பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடுவை கண்டெடுத்தது.

இந்த ஆண்டில் வெறும் 4 ஒருநாள் தோல்விகளை சந்தித்த இந்திய அணி 20 போட்டிகளில் 14 வெற்றி பெற்று, 70% வெற்றி சதவிகிதம் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

#1 இங்கிலாந்து

England Cricket Team
England Cricket Team

2015-ல் உலக கோப்பையை வெளியேறியதால் வீறுகொண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது இங்கிலாந்து. முதலாக ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து 5 ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றியை பெற்றது, முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று நான்காம் போட்டியில் சற்று தடுமாறியது பின்பு கடைசி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. அதையடுத்து நியூஸிலாந்து சென்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என கைப்பற்றியது. இதில் ஐந்தாம் போட்டியில் வெல்லும் அணிக்கே கோப்பை என்றிருந்த நிலையில் இங்கிலாந்து அணி கோப்பையை தட்டி சென்றது.

வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை குவித்து வந்த நிலையில் தனது சொந்த மண்ணில் ஸ்காட்லாந்து அதிர்ச்சி அளித்தது. இங்கிலாந்திற்கு எதிராக 371 என்ற இமாலய ஸ்கோரை பதிவு செய்தது அயர்லாந்து, பின்பு துரத்தலை துவங்கிய இங்கிலாந்தால் 365 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

சற்றும் துவண்டு போகாத இங்கிலாந்து அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் வெற்றியை பெற்றது. இதில் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்கோரை குவித்த சாதனையை படைத்தது. இந்த போட்டியில் எதிரணியான ஆஸ்திரேலியா 242 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது.

இதை தொடர்ந்து இந்தியா உடனான 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என வெற்றியை பதிவு செய்தது. முதல் போட்டியில் தோல்வியுற்றாலும் அடுத்த இரண்டு போட்டியிலும் ரூட்டின் சதத்தால் வெற்றியை பெற்றது. ஸ்பின்னர்களான மொயின் அலி மற்றும் ஆதில் ரஷீத் இந்திய நடுவரிசை பேட்ஸ்மேன்களை தினறடித்தனர்.

கடைசியாக இலங்கை உடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற நிலையில் வெற்றியை பெற்றது. முதற்போட்டி ரத்தான நிலையில் அடுத்த 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியை பெற்று தொடரை வென்றது, கடைசி போட்டியில் 219 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தனது வெற்றிகரமான ஆண்டை தோல்வியுடன் முடித்தது.

24 ஆட்டங்களில் 17 வெற்றிகளுடன், 70.83% வெற்றி சதவிகிதம் பெற்று 2018ஆம் ஆண்டின் அதிக வெற்றி சதவீதத்தை பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் தான் பங்கேற்ற அனைத்து ஒருநாள் தொடரிலும் வெற்றியை பெற்றது இங்கிலாந்து. இவ்வாறே தொடர்ந்தால் இந்த அணி 2019 உலக கோப்பையை வெல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எழுத்து: தீபக் பாண்டா

மொழியாக்கம்: காமாட்சி சுந்தரம்

Edited by Fambeat Tamil