2018-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற டாப் 5 அணிகள்

cricket stars
cricket stars

#3 வங்கதேசம்

Bangladesh Cricket Team
Bangladesh Cricket Team

வங்கதேச கிரிக்கெட் அணி பல ஆண்டுகளாக தனது முன்னேற்றத்தை இவ்வுலகிற்கு காண்பித்து கொண்டே வருகிறது, அதில் இவ்வருடமும் மாற்றம் இல்லை. வங்கதேசம், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே இடையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் நடைபெற்ற குரூப் சுற்றில் நான்கில் மூன்று போட்டிகளில் வெற்றியை பதிவு செய்து இறுதி போட்டிக்கு முன்னேறியது, இறுதி போட்டியில் இலங்கை அணியுடன் தோல்வியை தழுவியது. அதை தொடர்ந்து மேற்குஇந்திய தீவுகள் சென்ற வங்கதேசம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

அடுத்ததாக ஆசிய கோப்பையில் இரண்டாம் இடத்தை பிடித்தது, இறுதி போட்டியில் இந்திய அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. குரூப் சுற்றில் இலங்கையுடன் வெற்றியையும் ஆப்கானிஸ்தானுடன் தோல்வியை சந்தித்தது. அதையடுத்து சூப்பர் சிக்ஸ் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிடம் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

கடைசியாக ஜிம்பாப்வே அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்று எளிதில் வென்றது.

20 ஆட்டங்களில் 13 வெற்றியுடன், 65% வெற்றி சதவிகிதம் பெற்று இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது வங்கதேசம்.

#2 இந்தியா

Indian Cricket Team
Indian Cricket Team

இந்த ஆண்டின் துவக்கத்தில் தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் 2-1 என கணக்கில் தோல்வியுற்றாலும் ஒருநாள் தொடரில் சரியான பதிலடி கொடுத்தது. இந்திய அணியின் ஸ்பின்னர்கள் தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசினர். ஒரு போட்டியில் மட்டும் க்ளாஸன், மில்லர் ஜோடி இந்திய அணியின் வெற்றியை பறித்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்று சதங்களை விளாசினார், இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட தொடரை 5-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதுவே இந்திய அணி தென் ஆப்பிரிக்கா மண்ணில் பெற்ற முதல் தொடர் வெற்றியாகும். அதைத்தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து சென்றது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த போட்டிகளில் தனது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியடைந்தது.

அடுத்ததாக நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகள் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்தது. ஹாங்காங் அணியுடனான துவக்க போட்டியில் சற்றே தடுமாறினாலும் மற்ற போட்டிகளில் வெற்றியை பெற்று ஆப்கானிஸ்தான் உடன் டிரா செய்தது. கடைசியாக இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை வென்று ஏழாவது முறையாக கோப்பையை வென்றது.

அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும் மே.இ தீவுகள் அணி சற்று பயமுறுத்தியது. இத்தொடரின் மூலம் இந்திய அணி தனது நான்காம் வரிசை பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடுவை கண்டெடுத்தது.

இந்த ஆண்டில் வெறும் 4 ஒருநாள் தோல்விகளை சந்தித்த இந்திய அணி 20 போட்டிகளில் 14 வெற்றி பெற்று, 70% வெற்றி சதவிகிதம் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.