2018-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற டாப் 5 அணிகள்

cricket stars
cricket stars

#1 இங்கிலாந்து

England Cricket Team
England Cricket Team

2015-ல் உலக கோப்பையை வெளியேறியதால் வீறுகொண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது இங்கிலாந்து. முதலாக ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து 5 ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றியை பெற்றது, முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று நான்காம் போட்டியில் சற்று தடுமாறியது பின்பு கடைசி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. அதையடுத்து நியூஸிலாந்து சென்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என கைப்பற்றியது. இதில் ஐந்தாம் போட்டியில் வெல்லும் அணிக்கே கோப்பை என்றிருந்த நிலையில் இங்கிலாந்து அணி கோப்பையை தட்டி சென்றது.

வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை குவித்து வந்த நிலையில் தனது சொந்த மண்ணில் ஸ்காட்லாந்து அதிர்ச்சி அளித்தது. இங்கிலாந்திற்கு எதிராக 371 என்ற இமாலய ஸ்கோரை பதிவு செய்தது அயர்லாந்து, பின்பு துரத்தலை துவங்கிய இங்கிலாந்தால் 365 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

சற்றும் துவண்டு போகாத இங்கிலாந்து அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் வெற்றியை பெற்றது. இதில் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்கோரை குவித்த சாதனையை படைத்தது. இந்த போட்டியில் எதிரணியான ஆஸ்திரேலியா 242 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது.

இதை தொடர்ந்து இந்தியா உடனான 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என வெற்றியை பதிவு செய்தது. முதல் போட்டியில் தோல்வியுற்றாலும் அடுத்த இரண்டு போட்டியிலும் ரூட்டின் சதத்தால் வெற்றியை பெற்றது. ஸ்பின்னர்களான மொயின் அலி மற்றும் ஆதில் ரஷீத் இந்திய நடுவரிசை பேட்ஸ்மேன்களை தினறடித்தனர்.

கடைசியாக இலங்கை உடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற நிலையில் வெற்றியை பெற்றது. முதற்போட்டி ரத்தான நிலையில் அடுத்த 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியை பெற்று தொடரை வென்றது, கடைசி போட்டியில் 219 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தனது வெற்றிகரமான ஆண்டை தோல்வியுடன் முடித்தது.

24 ஆட்டங்களில் 17 வெற்றிகளுடன், 70.83% வெற்றி சதவிகிதம் பெற்று 2018ஆம் ஆண்டின் அதிக வெற்றி சதவீதத்தை பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் தான் பங்கேற்ற அனைத்து ஒருநாள் தொடரிலும் வெற்றியை பெற்றது இங்கிலாந்து. இவ்வாறே தொடர்ந்தால் இந்த அணி 2019 உலக கோப்பையை வெல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எழுத்து: தீபக் பாண்டா

மொழியாக்கம்: காமாட்சி சுந்தரம்