நியூசிலாந்து அணி பாகிஸ்தானிற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி திகில் வெற்றிபெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 24ஆம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்களில் டிக்ளெர் செய்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை சேர்த்தது. பின்னர் தொடர்ந்து மளமளவென விக்கெட்டுகள் சரியத் தொடங்கின, மொத்தமாக 75 நிமிடங்களில் 10 விக்கெட்டுகளை இழந்து வெறும் 90 ரன்களுக்கு ஃபாலோ ஆன் ஆனது நியூசிலாந்து அணி.
இப்போட்டியில் பாகிஸ்தான் பௌலர் யாசிர் ஷா சிறப்பாக செயல்பட்டு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டம் ஆரம்பித்த முதல் செஷனில் நான்கு விக்கெட்டுகளையும் இரண்டாவது செஷனில் வெறும் 36 நிமிடங்களில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இப்போட்டியில் நியூசிலாந்து அணியை புரட்டி எடுத்தது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணி 6 கோல்டன் டக் விக்கெட்டுகளை இப்போட்டியில் எடுத்து உலகசாதனையை சமன் செய்துள்ளது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மட்டும் கடைசி வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் 28 ரன்களை சேர்த்தார்.
நியூசிலாந்து பேட்டிங் விவரம்
11 : 54 AM உள்ளுர் நேரம் : நியூசிலாந்து 50-1 , (பேட்ஸ்மேன்)ஜீட் ரவல் 31 -- (பௌலர்) யாசிர் ஷா
12 : 15 PM :நியூசி 61-2, (பேட்ஸ்மேன்) டாம் லேதம் 22 - (கேட்ச்) இமாம்- உல்- ஹயூ , (பௌலர்) யாசிர் ஷா
12 : 21 PM : நியூசி 61-3 (பேட்ஸ்மேன்) ராஸ் டெய்லர் 0- (பௌலர்) யாசிர் ஷா
12 : 24 PM : நியூசி 61-4 (பேட்ஸ்மேன்) ஹன்றி நிக்கோல்ஸ் 0 , (பௌலர்) யாசிர் ஷா
12:29 முதல் 01:09 வரை மத்திய உணவு இடைவேளை
01 : 10 PM : நியூசி 63 -5 ( பேட்ஸ்மேன்) பி ஜே வாட்லிங் 1,( ரன் அவுட்)
01 : 18 PM : நியூசி 69-6( பேட்ஸ்மேன்) காலின் தி கிராந்தோம் 0, (பௌலர்) ஹசன் அலி (LBW)
01 : 27 PM : நியூசி 72-7 ( பேட்ஸ்மேன்) ஷ் சோதி 0,( கேட்ச்) சர்ஃப்ரஸ் அகமது, (பௌலர்) யாசிர் ஷா
01 : 31 PM : நியூசி 72-8 (பேட்ஸ்மேன்) நீல் வாக்னர் 0 , (பௌலர்) யாசிர் ஷா (LBW)
01 : 41 PM :நியுசி 90-9 (பேட்ஸ்மேன்) அஜஜ் படேல் 4, ( பௌலர்) யாசிர் ஷா
01 : 45 PM நியசி 90- ஆல் அவுட் ( பேட்ஸ்மேன்) ட்ரென்ட் போல்ட் , (ஸ்டம்பிங்) சர்ஃப்ரஸ் அகமது , (பௌலர்) யாசிர் ஷா.
எழுத்து : ஆம்னி ஸ்போர்ட்ஸ்
மொழியாக்கம் : சதீஸ்குமார்