தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றன. முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 வெற்றிகளையும் ஆஸ்திரேலியா அணி 1 வெற்றியையும் பெற்றன. இதையடுத்து சிட்னி மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டி டிராவில் முடிந்தன, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இருப்பினும், இந்திய அணியிலுள்ள அனுபவ வீரர்களான விஜய் மற்றும் ராகுல் ஆகியோரின் ஃபார்மானது இந்திய ரசிகர்கள் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு ஏமாற்றமளிக்கிறது. விஜய் மற்றும் ராகுல் போன்றோருக்கு பதிலாக ரஞ்சி டிராபி போன்ற டொமஸ்டிக் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்வு செய்யலாம். சமீபத்தில் மயங்க் அகர்வால், விகாரி மற்றும் பாண்ட் போன்ற வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
இவற்றில், இந்திய டெஸ்ட் அணியில் விளையாட அதிக வாய்ப்புள்ள 5 டொமஸ்டிக் வீரர்களை பற்றி பார்க்கலாம்.
#5. சித்தேஷ் லட்:
சித்தேஷ் லட், இவர் இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் இல்லை எனினும் டொமெஸ்டிக் போட்டிகளை பின் தொடர்ந்து வருபவர்களுக்கு இவர் எப்படிப்பட்ட வீரர் என நன்கு தெரிந்திருக்கும். 26 வயதான இவர், ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார், இந்த 2018-19 ஆம் சீசனில் இவர் விளையாடிய 7 போட்டிகளில் இரண்டு சதம் மற்றும் 4 அரைசதங்கள் உட்பட 652 ரன்களை குவித்துள்ளார்.
இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வரும் இவரது சராசரியானது 50க்கும் மேல் ஆகும், சென்ற சீசனிலும் இவர் இதே அளவு ரன்களை குவித்து இருந்தாலும் சராசரி 60 ஆக இருந்தது. இவரது மொத்த சராசரி 54 ஆகும்.
#4. ரிக்கி புயி:
மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்தவர் ரிக்கி புயி, தனது சீராக ரன் சேர்க்கும் திறமையினால் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார், 22 வயதான இவர் தற்பொழுது இந்தியா ஏ அணிக்காக விளையாடி வருகிறார். டொமெஸ்டிக் ரஞ்சி டிராபியில் ஆந்திரா அணிக்காக விளையாடி வருகிறார், இந்த சீசனில் 7 போட்டிகளில் 766 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நேரம் நிலைத்து ஆடக்கூடிய இவர் 4 சதம் மற்றும் 1 அரைசதம் விளாசியுள்ளார். சென்ற சீசன் ரஞ்சி டிராபி தொடரில் சராசரி 60 உடன் 533 ரன்களை குவித்தார்.
இந்த சீசனில் இவரது சராசரி 70 ஆகும். 33 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் சராசரி 50 உடன் 2200 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 8 சதங்களும் 10 அரை சதங்களும் உள்ளடங்கும்
#3. அபிமன்யு ஈஸ்வரன்:
வங்காளம் அணிக்காக விளையாடி வரும் இவர் இந்த சீசன் ரஞ்சிடிராபி போட்டியில் ரன் மழை பொழிந்து வருகிறார், இவற்றில் சமீபத்தில் டெல்லி அணிக்கு எதிரான இவரது சதம் பல கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தது.
இந்த சீசனில் 653 ரன்களை குவித்துள்ள இவரது சராசரி 80 ஆகும். டெல்லி அணிக்கு எதிராக இவர் அடித்த சதம் மட்டுமில்லாமல் மற்றும் மூன்று அரை சதங்களை விளாசியுள்ளார். தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த இவர் தற்பொழுது இந்தியா ஏ அணிக்காக விளையாடி வருகிறார்.
41 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, சராசரி 47 ஆகும். இவற்றில் 9 சதங்களும் 16 அரை சதங்களும் உள்ளடங்கும்.
#2. பிரியன்க் பன்சால்:
28 வயதான பிரியன்க் பன்சால் அகமதாபாத்தை சேர்ந்தவர், இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே இவரை இந்திய அணியில் சேர்க்கும்படி வலைதளங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த ரஞ்சி டிராபி சீசனில் 8 போட்டிகளில் 887 ரன்கள் குவித்து அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் வகிக்கிறார்.
இந்த சீசனில் இவரது சராசரி 70 ஆகும், இவற்றில் 4 சதம் மற்றும் 5 அரை சதங்களும் உள்ளடங்கும். சென்ற சீசனில் 542 ரன்கள் குவித்த இவரது சராசரி 60 ஆகும். குஜராத் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக உள்ள இவர் 76 முதல் தர போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றுள்ளார்.
5400 ரன்களுக்கும் மேல் அடித்துள்ள இவர் 19 சதங்களையும் விளாசியுள்ளார், சமீபத்தில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 141 குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#1. ஷுப்மான் கில்:
டொமெஸ்டிக் தொடர்களில் மிகவும் பிரபலமான வீரர் கில், இதற்கு 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர் முக்கிய காரணமாகும், தனது ஆட்டத்தின் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார், இதன்மூலம் ஐபிஎல் தொடரில் நுழைந்தார் இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.
ரஞ்சி டிராபி தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இந்த சீசனில் இவர் 4 போட்டிகளில் இரண்டு சதங்கள் உட்பட 629 ரன்களை குவித்துள்ளார், இவரது சராசரி 125.80 ஆகும். தனது திறமையை வெளிப்படுத்திய கில் இந்தியா ஏ அணிக்கு உடனடியாக தேர்வாகினார். இவர் அதிகமான முதல்தர போட்டிகளில் பங்கேற்கவில்லை எனினும் 8 போட்டிகளில் 990 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.