#2.ஆடம் கில்க்ரிஸ்ட் குவித்த 149 ரன்கள்:
அனைத்துக் கால கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிரிஸ்ட், 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அற்புதமான ஒரு இன்னிசை அளித்தார். 13 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 149 ரன்கள் குவித்த இவரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 38 ஓவர்கள் முடிவில் 281 ரன்களை குவித்திருந்தது. இதன் பின்னர், மழை குறுக்கிட்டதன் காரணத்தால், தாமதமாக களமிறங்கிய இலங்கை அணியால் 36 ஓவர்களில் 215 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த இறுதிக் கட்டத்தின் ஆட்டநாயகன் விருதை கில்கிறிஸ்ட் வென்றார். இதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
#1.மகேந்திர சிங் தோனி குவித்த 91* ரன்கள்:
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் முதலாவதாக பேட்டிங் செய்த இலங்கை அணி மஹேலா ஜெயவர்த்தனவேவின் அற்புதமான சதத்தால் 274 என்ற கௌரவமான ஸ்கோரை அடைந்தது, இலங்கை அணி. இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான விரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் விக்கெட்களை விரைவிலேயே இழந்த நிலையில் கௌதம் கம்பீர் அணியை தமது ஆட்டத்தால் மீட்டெடுத்தார். 97 ரன்களை இவர் அடைந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர், கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர் நாயகனான யுவராஜ் சிங்குடன் இணைந்தார். 79 பந்துகளில் 91 ரன்களை குவித்து இறுதியில் சிக்ஸர் அடித்ததன் மூலம் இந்திய அணியை வெற்றி பெற உதவினார். இதனால், 28 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.