Create
Notifications
Favorites Edit
Advertisement

இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் நடைபெறவிருக்கும் தனிப்பட்ட போர்கள்

SENIOR ANALYST
வதந்திகள்
99   //    13 Aug 2019, 07:54 IST

England v Australia - 1st Specsavers Ashes Test: Day Five
England v Australia - 1st Specsavers Ashes Test: Day Five

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் தொடரை பல்வேறு தலைமுறைகள் கடந்தும் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் பிரசித்தி பெற்றுள்ளன. 1882-ஆம் ஆண்டு முதல் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடர் மிகவும் பிரபலம் அடைந்த தொடராகும். அவ்வகையில், இந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியுள்ள இந்தப் பெருமை மிக்க தொடரின் முதல் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் அடுத்தடுத்து இரு இன்னிங்சிலும் சதம் அடித்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாய் திகழ்ந்தார்/ இந்த போட்டியின் முதல் நாளில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணி தவித்துக் கொண்டிருந்த வேளையில், தனது அபார சதத்தின் மூலம் 284 என்ற கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார், ஸ்டீவன் ஸ்மித். அதன் பின்னர். களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் பெருமளவில் சோபிக்க தவறிய போதிலும் அறிமுகம் கண்ட அந்த அணியின் ரோரி பர்ன்ஸ் அற்புதமாக சதம் கண்டதால் 90 ரன்கள் முன்னிலை கண்டது, இங்கிலாந்து.

மேலும், தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது, ஆஸ்திரேலிய அணி. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை நொறுக்கி எடுத்த ஸ்மித் மீண்டும் ஒரு முறை சதம் கண்டதால் 7 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இதன் பின்னர், 397 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விரைவிலேயே தங்களது விக்கெட்களை இழந்து மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது, சொந்த மண்ணைச் சேர்ந்த இங்கிலாந்து அணி. பந்து வீச்சுக்கும் பேட்டிங்கிற்கும் போராட்ட களமாக விளங்கும் இவ்வகை போட்டிகளில் தனிப்பட்ட முறையில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு இடையே அவ்வப்போது போர்கள் நடக்கும். அவ்வாறு, இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு இடையே நடைபெறும் தனிப்பட்ட போர்களைப் பற்றி சுவாரசியமான முறையில் எடுத்துரைக்கின்றது இந்த தொகுப்பு.

#1.ஸ்டீவன் ஸ்மித் Vs சோப்ரா ஆர்ச்சர்:

Can Jofra Archer deliver the goods?
Can Jofra Archer deliver the goods?

கடந்த டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து சதம் கண்ட ஸ்டீவன் ஸ்மித் தனது பேட்டிங் பார்மின் உச்சகட்டத்தில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாது, ஓராண்டு கால தடைக்குப் பின்னர், ஒருநாள் போட்டியில் மீண்டும் விளையாடி தொடங்கிய ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் அறிமுகம் கண்டு தனது ஆக்ரோஷத்தை பேட்டிங் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். இவரின் ஆட்டத்தால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி கடந்த டெஸ்டில் வெற்றி பெற்றது என்று கூறினால் அது மிகையல்ல. மறுமுனையில் ,24 வயதான சோப்ரா ஆர்ச்சர், கடந்த டெஸ்ட் போட்டியில் காயம் கண்ட ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பதிலாக அணியில் தற்போது இணைக்கப்பட்டு உள்ளார். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன்படைத்த இவர், நிச்சயமாக ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. 2019 உலக கோப்பை தொடரை வென்ற இங்கிலாந்து அணியில் அறிமுகம் கண்டு அந்த அணியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார், சோப்ரா ஆர்ச்சர். இவரின் துல்லியமான யார்கர் வகை பந்துவீச்சால் ஸ்டீவன் ஸ்மித்தை விரைவிலேயே கபளீகரம் செய்ய முயல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சோப்ரா ஆச்சார் தனது பந்து வீச்சால் ஸ்டீவன் ஸ்மித்தை சோதனைக்கு உள்ளார் என முன்னாள் வீரரான மைக்கேல் ஆத்தர்டன் எச்சரித்துள்ளார். இவர் மட்டுமல்லாது, சோப்ரா ஆர்ச்சரின் சக வீரரான ஜோஸ் பட்லர் கூட தனது பேட்டியில், தற்போது அறிமுகம் காண உள்ள சோப்ரா ஆர்ச்சர் சில அதிசயங்களை நிகழ்த்த கூடும் எனவும் கூறியுள்ளார். ஐபிஎல் சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் இருவரும் விளையாடி உள்ளனர். எனவே, ஸ்டீவ் ஸ்மித்தின் பலவீனங்களை அறிந்திருந்தால் அவருக்கு எதிரான வியுகங்களை வலிமையாக வகுத்து இந்த இரண்டாவது டெஸ்டில் செயலாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.1 / 2 NEXT
Advertisement
Advertisement
Fetching more content...