#2.டேவிட் வார்னர் Vs ஸ்டுவர்ட் பிராடு:
ஸ்டீவன் ஸ்மித்தை போலவே ஓராண்டுக்காலம் தடைக்குப் பின்னர், மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ள டேவிட் வார்னர் கடந்த டெஸ்ட் போட்டியில் ரன்களைக் குவிக்க சற்று சிரமப்பட்டதை நன்கு காண முடிந்தது. தற்போதைய இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லாததால் தமது ஆக்ரோஷத்தினை மிக சிறப்பாக அளிக்கத் துடிக்கும் ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக டேவிட் வார்னர் விளையாடுவது மிகவும் சிரமப்பட்ட காரியமாகும். கடந்த போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் எல்பிடபிள்யூ மூலமும் இரண்டாவது இன்னிங்ஸில் கேட்ச் கொடுத்தும் தமது விக்கெட்களை இழந்து உள்ளார்ம் டேவிட் வார்னர், அவற்றில் குறிப்பிட வேண்டியவை என்னவென்றால்ம் இவர் இரு முறை இழந்த விக்கெட்டுகளும் ஸ்டுவர்ட் பிராட்டின் ஓவரில் கைப்பற்றப்பட்டவை ஆகும். எனவே ,தடுமாறிக் கொண்டிருக்கும் டேவிட் வார்னருக்கு எதிராக மிகச்சிறந்த தாக்குதலைத் தொடுத்து வரும் பிராட், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை தொடர்வார் என எதிர்பார்க்கலாம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் எப்போதும் சுறுசுறுப்பாக திகழும் பிராட், கடந்த போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3.ஜேசன் ராய் Vs நாதன் லயன்:
2019 உலக கோப்பை தொடரில் தனது ஆக்ரோச பாணியை கடைபிடித்த ஜேசன் ராய் பெரும் வெற்றி கண்டுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் டெஸ்ட் போட்டிகளுக்கு முதல்முறையாக அழைக்கப்பட்டுள்ளார். கடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகம் கண்ட ஜேசன் ராய், அனைவரும் எதிர்பார்த்த வகையில் விளையாடாமல் மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளா.ர் முதலாவது இன்னிங்சில் ஜேம்ஸ் பேட்டிசனின் ஓவரில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து பெவுலியன் திரும்பினார், ஜேசன் ராய். இரண்டாவது இன்னிங்சிலாவது சிறப்பாக செயல்படுவார் என நம்பிய வேளையில், நாதன் நயனின் சுழற்பந்து வீச்சில் தமது விக்கெட்டை பறிகொடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணியாக இது அமைந்தது. ஒட்டுமொத்தமாக இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்களை கைப்பற்றிய நாதன் பையன் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எட்பங்க்ஸ்டன் மைதானத்தில் வெற்றி பெறுவதற்கு மிகவும் உதவியது. எனவே, டெஸ்ட் போட்டிகளில் இதுவரையிலும் சிறப்பாக செயல்படாத ஜாசன் ராயை இந்த போட்டியிலும் கூட லயன் தமது சுழலில் சிக்க வைப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.