ஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள் 2018: இந்த வருடத்தின் சிறந்த XI டெஸ்ட் அணி வீரர்கள்

Melbourne Cricket Ground
Melbourne Cricket Ground

2018 ஆம் ஆண்டு சர்வதேச அணிகளுக்கு மிக சவாலான ஆண்டாகவே அமைந்தது. இந்த வருடம் முடிவுக்கு வரும் நிலையில் இந்த ஆண்டின் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற சிறந்த XI வீரர்களை பற்றிய விவரங்களை காணலாம். இந்த ஆண்டு மொத்தம் 45 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மூன்று பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து ஆண்டின் முடிவில் மொத்தம் 48 போட்டிகள் முடிவுக்கு வந்திருக்கும்.

இந்திய அணியை பொறுத்தவரை பதிமூன்று போட்டிகள் விளையாடி உள்ளது. அதில் 6ல் வெற்றியும் 7ல் தோல்விகளையும் சந்தித்துள்ளது. இருப்பினும் தரவரிசை பட்டியலில் முதலாம் இடத்திலே நீடித்துள்ளது.

தேர்ந்தெடுப்பதற்கான வரைகூறு

1. வீரர்கள் 2018ம் ஆண்டில் விளையாடியது மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

2. முந்தய சாதனை மற்றும் செயல்பாடுகள் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

3. எதிரணியின் பலம், ஆடுகள தண்மை போன்றவை முக்கியம் என்றாலும், ஒரு நபரின் சிறந்த செயல்பட்டால் அது எடுத்துக் கொள்ளப்படவில்லை.

4. டெஸ்ட் விளையாடும் அனைத்து அணிகளையும் எந்த பாரபட்சமின்றி கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

5. தற்போது நடைபெற்று வரும் பாக்ஸிங் டே போட்டியின் செயல்திறன் கணக்கிட படவில்லை.

தொடக்க ஆட்டக்கார வீரர்கள்

#1 டிமுத் கருணாரத்ன (இலங்கை)

டிமுத் கருணாரத்ன
டிமுத் கருணாரத்ன

போட்டிகள் - 8

இன்னிங்ஸ் - 15

ரன்கள் - 736

சராசரி - 52

சதம் - 1

அரை சதம் - 1

இலங்கை வீரரான இவர், 2018ம் ஆண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டின் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர், வேகப்பந்து வீச்சாளர்களை திறம்பட எதிர்கொள்ள கூடியவர். இந்த ஆண்டின் முதல் தொடராக வங்கதேச அணிக்கு எதிராக ஆடினார். வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்த கருணாரத்ன, அதன் பின் தென் அப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற தொடரில் விஸ்வரூபம் எடுத்தார்.

இந்த தொடரில் அவர் அடித்த ரன்கள் 158 நாட் அவுட், 60, 53 மற்றும் 85. காலேவில் நடைபெற்ற முதல் போட்டியில் மொத்த இலங்கை அணி எடுத்த ரன்களை கணக்கிடுகையில் இவர் மட்டுமே தன் பங்கிற்கு 45% ரன்கள் எடுத்துள்ளார். அந்த தொடரில் தொடர்நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். அதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்தாலும், இவர் மட்டும் சிறப்பாக விளையாடி 256 எடுத்தார். இவரை தவிர டீன் எல்கர், டாம் லாதம், ஐடென் மார்க்ரம் போன்ற வீரர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

#2 குசால் மென்டிஸ் (இலங்கை)

குசால் மென்டிஸ்
குசால் மென்டிஸ்

போட்டிகள் - 11

இன்னிங்ஸ் - 21

ரன்கள் - 941

சராசரி - 47

சதம் - 3

அரை சதம் - 3

கருணாரத்னவிற்கு துணையாக ஒரு சிறந்த தொடக்க வீரராக மெண்டிசை தேர்வு செய்யலாம். இவர் ஒரு முழு நேர தொடக்க ஆட்டக்காரர் இல்லை என்றாலும், பின் வருபவர்களை கணக்கில் கொண்டு இவர் XI ல் இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் அடித்த 941 ரன்களில் 377 ரன்கள் தொடக்க வீரராக சேர்த்துள்ளார். சென்ற வாரம் வெல்லிங்டனில் நடைபெற்ற நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேத்தியூசுடன் ஜோடி சேர்ந்து நான்காம் நாள் முழுவதும் ஆட்டமிழக்காமல் இருந்து போட்டியை ட்ரா செய்ய உதவினார்.

இந்த வருடத்தின் தொடக்கத்தை மிகச்சிறப்பாக தொடங்கிய மெண்டிஸ், வங்கதேசத்திற்கு எதிராக தொடக்க வீரராக இறங்கி 196 ரன்கள் குவித்தார். பின்பு மேற்கிந்திய அணிக்கு எதிராக நடந்த தொடரில் மீண்டும் ஒரு சதம் அடித்து அசத்தினார். இருந்தாலும் இவரது சிறப்பான ஆட்டமாக கருதப்பட்டது இங்கிலாந்து அணிக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற ஆட்டம். பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் நான்காம் இன்னிங்ஸில் 86 ரன்கள் அடித்தார்.

நடுநிலை ஆட்டக்காரர்கள்

#3 ஜோ ரூட் (இங்கிலாந்து)

ஜோ ரூட்
ஜோ ரூட்

போட்டிகள் - 13

இன்னிங்ஸ் - 24

ரன்கள் - 948

சராசரி - 41

சதம் - 2

அரை சதம் – 6

மெண்டிசை போல் ஜோ ரூட்டும் 2018 ஆண்டை சிறப்பாக தொடங்கினார். சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 83 மற்றும் 58 நாட்அவுட் ரன்கள் எடுத்தார். ஆனால் இவரது சிறப்பான ஆட்டம் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் நடந்தது. பிர்மிங்காமில் நடந்த இந்த ஆட்டத்தில் இவர் அடித்த 80 ரன்கள் அந்த போட்டியை வெற்றிபெற உதவியது.

ரூட்டின் இன்னொரு மிக முக்கியான ஆட்டம் இலங்கை அணிக்கு எதிராக நடந்தது. இலங்கையில் நடைபெற்ற இரண்டாம் டெஸ்டில் 46 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. 109 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்த இங்கிலாந்தை இவரது சிறப்பான சததால் 300 ரன்கள் எடுத்தால் இலங்கை அணிக்கு வெற்றி என்ற சூழ்நிலைக்கு கொண்டுவந்தார். இறுதியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்ற இங்கிலாந்து, அந்த தொடரையும் வென்றது.

#4 விராட் கோஹ்லி (இந்தியா) (கேப்டன்)

விராட் கோஹ்லி
விராட் கோஹ்லி

போட்டிகள் - 12

இன்னிங்ஸ் - 22

ரன்கள் - 1240

சராசரி - 56

சதம் - 5

அரை சதம் – 4

விராட் கோஹ்லிக்கு 2018 ஆம் ஆண்டு ஒரு போர்க்களமாக அமைந்தது. ஆண்டிற்கு ஆண்டு பல சாதனைகளை தகர்த்து வருகிறார். இந்த ஆண்டில் டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டியில் 1000 ரன்களை கடந்து அசத்தினார். இந்த ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தென் அப்பிரிக்காவிற்கு எதிராக சென்டுரியனில் அமைந்தது. இந்திய அணி அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் விராட் 153 ரன்கள் குவித்தார். அதன் பின் நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றியை சுவைத்தது. இவரது பங்களிப்பாக தலா 55 மற்றும் 41 ரன்கள் எடுத்தார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஓய்வெடுத்த கோஹ்லி, அதன் பின் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற இருந்த போட்டியில் எப்படி செயல் பட போகிறார் என்று அனைவரும் ஆவலாக இருந்தனர். பல விமர்சனம் மற்றும் எதிர்பார்ப்பை தாண்டி 149 மற்றும் 51 ரன்கள் முதல் டெஸ்டில் அடித்தார். இருப்பினும் அந்த போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. 4-1 என்று தொடரை இழந்தாலும் ஒரே ஆறுதலாக விராட் கோஹ்லி அவர்கள் அந்த தொடரில் மொத்தம் 593 ரன்கள் அடித்தார். 2018 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் விராட் கோஹ்லி என்பது கூடுதல் தகவல்.

#5 கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)

கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்

போட்டிகள் - 6

இன்னிங்ஸ் - 10

ரன்கள் - 601

சராசரி - 67

சதம் - 2

அரை சதம் – 3

நியூஸிலாந்து அணியின் கேப்டனான இவர், இந்த ஆண்டில் வெறும் 6 போட்டிகளில் தான் பங்கேற்றுள்ளார். இந்த ஆண்டில் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த வில்லியம்சன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடினார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் உடன் விளையாட துபாய் சென்றது நியூஸிலாந்து அணி. கேப்டன் பொறுப்புடன் சிறப்பாக செயல்பட்ட இவர் ரன்கள் சேர்ப்பதிலும் கவனமாக இருந்தார். இவர் அடித்த ரன்கள் வருமாறு, 63, 37,28,30,89 மற்றும் 139. தன் துடிப்பான கேப்டன்ஷிப்பால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி தரும் வகையில் இரண்டாம் போட்டியில் பாகிஸ்தான் பெரிய வெற்றியை அடைந்தது. தொடரை நிர்ணயிக்கும் மூன்றாம் போட்டியில் அணியின் தேவைக்கேற்ப பொறுப்பாக விளையாடியது மட்டுமில்லாமல் சிறப்பான தலைமை மூலம் பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார். இதன் மூலம் 2-1 என்று தொடரை வென்ற நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணியை 49 ஆண்டுகள் கழித்து அந்நியமண்ணில் வீழ்த்தி சாதனை படைத்தது.

விக்கெட் கீப்பர்

#6 ஜோஸ் பட்லர்(இங்கிலாந்து)

ஜோஸ் பட்லர்
ஜோஸ் பட்லர்

போட்டிகள் - 10

இன்னிங்ஸ் - 18

ரன்கள் - 760

சராசரி - 44

சதம் - 1

அரை சதம் – 6

விக்கெட் கீப்பர் என்பதை தாண்டி நல்ல பேட்ஸ்மேன் என்ற முறையில் இந்த XI ல் இடம் பிடித்துள்ளார் பட்லர். இந்த பேட்ஸ்மேன்கள் உள்ள ஒரு அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற அங்கீகாரம் அணிக்கு மிகவும் பக்க பலமாக இருக்கக்கூடும். 2018ம் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிராக இரண்டு அரை சதம் அடித்த பட்லர், அதன் பிறகு இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து ஐந்து போட்டிகளில் சொதப்பினார். இவரது டெஸ்ட் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிடும் என்ற நிலையில் நாட்டிங்காமில் இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதே போட்டியில் இரண்டாம் இன்னிங்சில் 69 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அதன் பின் இலங்கையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் 38, 35, 63, 34, 16 மற்றும் 64 ஆகிய ரன்களை அடித்தார்.

ஆல்ரவுண்டர்

#7 ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவு)

ஜேசன் ஹோல்டர்
ஜேசன் ஹோல்டர்

போட்டிகள் - 6

இன்னிங்ஸ் - 11

ரன்கள் - 336

சராசரி - 37

விக்கெட்ஸ் - 33

மேற்கிந்திய தீவுகள் கேப்டனான இவர், 2018 ஆம் ஆண்டில் அமைதியாய் சிறப்பாக செயல்பட்ட வீரர் என்று கூறலாம். ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக பேட்டிங் பௌலிங் என்று அணியை திறம்பட வழிநடத்தியுள்ளார். பேட்டிங்கை பொறுத்த வரை இவர் ஓரளவுக்கு நன்றாகவே விளையாடியுள்ளார். இவர் எடுத்த ரன்கள், 40, 39, 15, 15 நாட் அவுட் , 74, 15, 33, 33 நாட் அவுட், 1, 52 மற்றும் 19. ஆனால் பௌலிங்கில் தான் தனித்து விளங்குகிறார். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சும் சேர்த்து 60 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்களை எடுத்துள்ளார்.

அதேபோல் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 44-கு 5 மற்றும் 59-கு 6 என்று தொடரை 2-0 என்று வெல்வதற்கு காரணமா இருந்தார். தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகவும் ஐந்து விக்கெட்களை சாய்த்தார். இதிலே விராட் கோஹ்லி, ரஹானே, ராகுல் போன்ற அனுபவ வீரர்களும் அடங்கும்.

இந்த பட்டியலில் இடம் பிடிக்க இவருக்கு போட்டியாக அமைந்தவர்கள் - சாம் குர்ரான் (இங்கிலாந்து), ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) மற்றும் பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து).

சூழல் பந்துவீச்சாளர்கள்

#8 நாதன் லயன் (ஆஸ்திரேலியா)

நாதன் லயோன்
நாதன் லயோன்

போட்டிகள் - 9

இன்னிங்ஸ் - 18

சராசரி - 21

விக்கெட்ஸ் - 48

5 விக்கெட் - 2

இந்த வருடத்தில் ஒன்பது போட்டிகள் விளையாடியுள்ள லயன், நான்கு போட்டிகளில் ஐந்து மட்டும் அதற்கு மேல் விக்கெட்கள் எடுத்துள்ளார், இரண்டு போட்டிகளில் நான்கு விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். கடைசியாக பங்கேற்ற மூன்று போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் எட்டு விக்கெட்கள் சாய்த்துள்ளார். பெர்த்தில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வேகப்பந்துவீச்சிற்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தில் எட்டு விக்கெட்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற முழு காரணமாக இருந்தார். பொதுவாக இந்திய வீரர்கள் சூழல் பந்து வீச்சாளர்களை நன்கு விளையாடக்கூடியவர்கள். ஆனால் இவரது பந்து வீச்சில் அனுபவ வீரர்களும் திணறிவருகின்றனர்.

#9 டைஜூல் இஸ்லாம் (வங்காளதேசம்)

டைஜூல் இஸ்லாம்
டைஜூல் இஸ்லாம்

போட்டிகள் - 7

இன்னிங்ஸ் - 13

சராசரி - 23

விக்கெட்ஸ் - 43

5 விக்கெட் - 4

10 விக்கெட் - 1

வங்காளதேச வீரரான இவர், இடது கை சூழல் பந்து வீச்சாளர். 2018 ஆம் ஆண்டு அந்த அணியின் மிகச்சிறப்பான வீரர் என கூறலாம். தரவரிசையில் கீழிடத்தில் உள்ள இலங்கை,ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரே போட்டிகள் விளையாடி இருந்தாலும், இவரது பங்களிப்பை நிச்சயம் குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்ற வங்காளதேசம், வரலாற்றில் முதல்முறையாக இன்னிங்ஸ் வெற்றி அடைந்தது. இந்த தொடரில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், வீழ்த்தப்பட்ட 40 விக்கெட்களையும் சூழல் பந்துவீச்சாளர்களே எடுத்தது தான்.

வேகப்பந்து வீச்சாளர்கள்

#10 காகிஸோ ரபாடா (தென் ஆப்ரிக்கா)

காகிஸோ ரபாடா
காகிஸோ ரபாடா

போட்டிகள் - 9

இன்னிங்ஸ் - 18

சராசரி - 20

விக்கெட்ஸ் - 46

5 விக்கெட் - 2

10 விக்கெட் - 1

தென் ஆப்ரிக்கா வீரரான ரபாடா, வலது கை வேகப்பந்து வீச்சாளர். இந்த ஆண்டின் தொடக்கத்தில்,இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 15 விக்கெட்களை வீழ்த்தினார். விராட் கோஹ்லி இவரது பந்தில் சற்று திணறியது மட்டுமில்லாமல், இரண்டு முறை பௌல்டு ஆகினார். அதை தொடர்ந்து இவரது சிறப்பான பந்துவீச்சு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் தொடர்ந்தது.

நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்று வென்ற தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு மிக முக்கிய பங்குவகித்தார் ரபாடா. இறுதியில் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

#11 முகமத் அப்பாஸ் (பாகிஸ்தான்)

முகமத் அப்பாஸ்
முகமத் அப்பாஸ்

போட்டிகள் - 7

இன்னிங்ஸ் - 13

சராசரி - 23

விக்கெட்ஸ் - 38

5 விக்கெட் - 3

10 விக்கெட் - 1

அயர்லாந்து அணிக்கு எதிராக இந்த ஆண்டின் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அப்பாஸ், அந்த போட்டியில் 9 விக்கெட்களை வீழ்த்தினார். அதை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்கள் எடுத்து, பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தன் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவந்த அப்பாஸ், இரண்டு போட்டியில் 17 விக்கெட்களை சாய்த்தார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இதே போன்று ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய அப்பாஸ், காயம் காரணமாக மூன்றாவது போட்டியில் இருந்து விலகினார். இவரது பங்களிப்பை பாகிஸ்தான் அணி தவறியது என்பது நன்கு உணரப்பட்டது.

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications