#4 விராட் கோஹ்லி (இந்தியா) (கேப்டன்)
போட்டிகள் - 12
இன்னிங்ஸ் - 22
ரன்கள் - 1240
சராசரி - 56
சதம் - 5
அரை சதம் – 4
விராட் கோஹ்லிக்கு 2018 ஆம் ஆண்டு ஒரு போர்க்களமாக அமைந்தது. ஆண்டிற்கு ஆண்டு பல சாதனைகளை தகர்த்து வருகிறார். இந்த ஆண்டில் டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டியில் 1000 ரன்களை கடந்து அசத்தினார். இந்த ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தென் அப்பிரிக்காவிற்கு எதிராக சென்டுரியனில் அமைந்தது. இந்திய அணி அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் விராட் 153 ரன்கள் குவித்தார். அதன் பின் நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றியை சுவைத்தது. இவரது பங்களிப்பாக தலா 55 மற்றும் 41 ரன்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஓய்வெடுத்த கோஹ்லி, அதன் பின் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற இருந்த போட்டியில் எப்படி செயல் பட போகிறார் என்று அனைவரும் ஆவலாக இருந்தனர். பல விமர்சனம் மற்றும் எதிர்பார்ப்பை தாண்டி 149 மற்றும் 51 ரன்கள் முதல் டெஸ்டில் அடித்தார். இருப்பினும் அந்த போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. 4-1 என்று தொடரை இழந்தாலும் ஒரே ஆறுதலாக விராட் கோஹ்லி அவர்கள் அந்த தொடரில் மொத்தம் 593 ரன்கள் அடித்தார். 2018 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் விராட் கோஹ்லி என்பது கூடுதல் தகவல்.
#5 கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)
போட்டிகள் - 6
இன்னிங்ஸ் - 10
ரன்கள் - 601
சராசரி - 67
சதம் - 2
அரை சதம் – 3
நியூஸிலாந்து அணியின் கேப்டனான இவர், இந்த ஆண்டில் வெறும் 6 போட்டிகளில் தான் பங்கேற்றுள்ளார். இந்த ஆண்டில் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த வில்லியம்சன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடினார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் உடன் விளையாட துபாய் சென்றது நியூஸிலாந்து அணி. கேப்டன் பொறுப்புடன் சிறப்பாக செயல்பட்ட இவர் ரன்கள் சேர்ப்பதிலும் கவனமாக இருந்தார். இவர் அடித்த ரன்கள் வருமாறு, 63, 37,28,30,89 மற்றும் 139. தன் துடிப்பான கேப்டன்ஷிப்பால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி தரும் வகையில் இரண்டாம் போட்டியில் பாகிஸ்தான் பெரிய வெற்றியை அடைந்தது. தொடரை நிர்ணயிக்கும் மூன்றாம் போட்டியில் அணியின் தேவைக்கேற்ப பொறுப்பாக விளையாடியது மட்டுமில்லாமல் சிறப்பான தலைமை மூலம் பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார். இதன் மூலம் 2-1 என்று தொடரை வென்ற நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணியை 49 ஆண்டுகள் கழித்து அந்நியமண்ணில் வீழ்த்தி சாதனை படைத்தது.