விக்கெட் கீப்பர்
#6 ஜோஸ் பட்லர்(இங்கிலாந்து)
போட்டிகள் - 10
இன்னிங்ஸ் - 18
ரன்கள் - 760
சராசரி - 44
சதம் - 1
அரை சதம் – 6
விக்கெட் கீப்பர் என்பதை தாண்டி நல்ல பேட்ஸ்மேன் என்ற முறையில் இந்த XI ல் இடம் பிடித்துள்ளார் பட்லர். இந்த பேட்ஸ்மேன்கள் உள்ள ஒரு அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற அங்கீகாரம் அணிக்கு மிகவும் பக்க பலமாக இருக்கக்கூடும். 2018ம் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிராக இரண்டு அரை சதம் அடித்த பட்லர், அதன் பிறகு இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து ஐந்து போட்டிகளில் சொதப்பினார். இவரது டெஸ்ட் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிடும் என்ற நிலையில் நாட்டிங்காமில் இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதே போட்டியில் இரண்டாம் இன்னிங்சில் 69 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அதன் பின் இலங்கையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் 38, 35, 63, 34, 16 மற்றும் 64 ஆகிய ரன்களை அடித்தார்.
ஆல்ரவுண்டர்
#7 ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவு)
போட்டிகள் - 6
இன்னிங்ஸ் - 11
ரன்கள் - 336
சராசரி - 37
விக்கெட்ஸ் - 33
மேற்கிந்திய தீவுகள் கேப்டனான இவர், 2018 ஆம் ஆண்டில் அமைதியாய் சிறப்பாக செயல்பட்ட வீரர் என்று கூறலாம். ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக பேட்டிங் பௌலிங் என்று அணியை திறம்பட வழிநடத்தியுள்ளார். பேட்டிங்கை பொறுத்த வரை இவர் ஓரளவுக்கு நன்றாகவே விளையாடியுள்ளார். இவர் எடுத்த ரன்கள், 40, 39, 15, 15 நாட் அவுட் , 74, 15, 33, 33 நாட் அவுட், 1, 52 மற்றும் 19. ஆனால் பௌலிங்கில் தான் தனித்து விளங்குகிறார். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சும் சேர்த்து 60 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்களை எடுத்துள்ளார்.
அதேபோல் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 44-கு 5 மற்றும் 59-கு 6 என்று தொடரை 2-0 என்று வெல்வதற்கு காரணமா இருந்தார். தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகவும் ஐந்து விக்கெட்களை சாய்த்தார். இதிலே விராட் கோஹ்லி, ரஹானே, ராகுல் போன்ற அனுபவ வீரர்களும் அடங்கும்.
இந்த பட்டியலில் இடம் பிடிக்க இவருக்கு போட்டியாக அமைந்தவர்கள் - சாம் குர்ரான் (இங்கிலாந்து), ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) மற்றும் பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து).
சூழல் பந்துவீச்சாளர்கள்
#8 நாதன் லயன் (ஆஸ்திரேலியா)
போட்டிகள் - 9
இன்னிங்ஸ் - 18
சராசரி - 21
விக்கெட்ஸ் - 48
5 விக்கெட் - 2
இந்த வருடத்தில் ஒன்பது போட்டிகள் விளையாடியுள்ள லயன், நான்கு போட்டிகளில் ஐந்து மட்டும் அதற்கு மேல் விக்கெட்கள் எடுத்துள்ளார், இரண்டு போட்டிகளில் நான்கு விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். கடைசியாக பங்கேற்ற மூன்று போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் எட்டு விக்கெட்கள் சாய்த்துள்ளார். பெர்த்தில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வேகப்பந்துவீச்சிற்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தில் எட்டு விக்கெட்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற முழு காரணமாக இருந்தார். பொதுவாக இந்திய வீரர்கள் சூழல் பந்து வீச்சாளர்களை நன்கு விளையாடக்கூடியவர்கள். ஆனால் இவரது பந்து வீச்சில் அனுபவ வீரர்களும் திணறிவருகின்றனர்.