கிரிக்கெட் போட்டிகளில் கலந்த கொள்ளும் வீரர்கள் சராசரி உயரம் மற்றும் பருமனுடன் இருப்பது அவசியம். பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மிகவும் உயரமாகவோ அல்லது குள்ளமாகவோ இல்லாமல் சராசரி உயரத்துடன் காணப்படுகின்றனர். உயரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இதனை விளையாடுவது அவ்வளவு எளிதல்ல என கருதி அவர்களை தேர்வு செய்ய மாட்டார்கள். இருந்தாலும் ஒரு சில வீரர்கள் தங்களது உயரத்திற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என நிரூபித்துள்ளார். அவ்வாறு உயரம் மிகவும் குறைவாக இருந்து சர்வதேச போட்டிகளில் கலக்கி வந்த டாப் 5 கிரிக்கெட் வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
#5) பார்திவ் பட்டேல்
உயரம் : 5 அடி 3 அங்குலம்
இந்திய அணியில் பல ஆண்டுகளாக விளையாடிவரும் பார்ட்டிவ் பட்டேல் இந்த பட்டியலில் ஐந்தாம் இடம் வகிக்கிறார். இவர் 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அப்போது இவருக்கு வயது வெறும் 17 தான். அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக மிக குறைந்த வயதில் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக அறிமுகமான வீரரும் இவரே. இவர் அறிமுகமான முதலாவது போட்டியிலேயே 19 ரன்கள் குவித்து இந்திய அணி போட்டியை ட்ரா செய்ய காரணமாக அமைந்தார். அதன் பின் 2002-03 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான தொடரில் இவர் சொதப்பவே இவருக்கு பதிலாக அந்த இடத்தில தினேஷ் கார்த்திக் மற்றும் தோணியை நாடியது அணி நிர்வாகம். அதன் பின் இவர் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கவே இல்லை. இருந்தாலும் முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல முறை இந்திய அணிக்கு மேம்படும் அழைக்கப்பட்டார். ஆனால் சர்வதேச போட்டிகள் இவருக்கு சிறப்பாக அமையாததால் இன்றளவும் அணியில் தனக்கான இடத்திற்க்காக காத்துள்ளார் இவர்.
#4) முஷ்பிகுர் ரஹீம்
உயரம் : 5 அடி 3 அங்குலம்
தற்போதைய காலங்களில் கிரிக்கெட் வீரர்களில் உயரம் குறைவான வீரராக கருதப்படுபவர் முஷ்பிகுர் ரஹீம். வங்கதேச அணியின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் இவர் பல முக்கிய அணிகளை எதிர்த்து தனியாளாக போராடி தன் அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார். அந்த அணியின் விக்கெட் கீப்பராக விளங்கும் இவர் 1 முதல் 6 வரையிலான அனைத்து இடங்களிலும் களமிறங்கி விளையாடியுள்ளார். இவர் 2005 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமானார். அதன் பின் இவரது சிறப்பான ஆட்டத்தை கண்ட அணி நிர்வாகம் இவரை 2011 ஆம் ஆண்டு இவரை வங்கதேச அணியின் கேப்டனாக நிர்ணயித்தது. டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணிக்காக இரட்டை சதமடித்த முதல் வீரரும் இவரே. அந்த அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ள இவர் உயரத்திற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என நிரூபித்துள்ளார்.
#3) அல்பேர்ட் பெர்சி பிரீமேன்
உயரம் : 5 அடி 2 அங்குலம்
உயரம் வெறும் 5 ஆடி 2 அங்குலம் மட்டுமே உடையே இவர் கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த லெக் பிரேக் பந்துவீச்சாகராக திகழ்கிறார். அதுபோக முதல்தர போட்டிகளில் ஒரே சீசனில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகிறார் இவர். தொடர்ந்து ஆறு சீசன்களில் ( 1928- 1933) மொத்தம் 1673 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதில் அனைத்து சீசன்களிலும் குறைந்தது 250 விக்கெட்டுகளையாவது வீழ்த்தியுள்ளார் . டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸ்-ல் 10 விக்கெட்டுகளை மூன்று முறை வீழ்த்தியுள்ளார். அதுபோக 140க்கும் மேற்பட்ட போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முதல்தர போட்டிகளில் எவராலும் நெருங்க முடியாத சாதனையையும் படைத்துள்ளார் பிரீமேன் . இங்கிலாந்து அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 66 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.