#2) வால்டர் லேட்டர் கோர்ன்போர்ட்
உயரம் : 5 அடி
வால்டர் லேட்டர் கோர்ன்போர்ட் அனைவராலும் " டிச் கோர்ன்போர்ட் " என் அழைக்கப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் பெரிய இதயம் கொண்ட சிறிய மனிதர் எனவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றுள்ளார். இவர் கிரிக்கெட்டில் பேட்டிங்கை காட்டிலும் விக்கெட் கீப்பிங்-ன் மூலம் அனைவரிடமும் அறியப்பட்டவர். இங்கிலாந்து நாட்டின் சுசெக்ஸ் அணிக்காக விளையாடிய இவர் மொத்தத்தில் 953 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார். இதில் 636 கேட்ச் மற்றும் 314 ஸ்டம்பிங்-ம் அடங்கும். அதுபோக தனது பேட்டிங்கின் மூலம் 6327 ரன்களும் குவித்துள்ளார். இவர் சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவை அனைத்துமே நியூஸிலாந்து அணிக்கெதிராக. அதில் இவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்த போது இவரால் ஒரே இன்னிங்ஸ்-ல் 57 எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கியது இங்கிலாந்து அணி. அப்போதைய காலகட்டத்தில் இதுவே அதிகபட்சமாக இருந்தது. இதற்கெல்லாம் காரணம் இவர் தான் என்பதால் அதன் பின் இவருக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினையே அந்நாட்டு வாரியம் வழங்கவில்லை.
#1) குர்கெர் வான் வைக்
உயரம் : 4 அடி 9 அங்குலம்
136 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் உயரம் குறைவான வீரராக கருதப்படுபவர் குர்கெர் வான் வைக் தான். இவரின் உயரம் 4 அடி 9 அங்குலம் அதாவது வெறும் 1.45 மீட்டர் தான். தென்னாபிரிக்க நாட்டில் பிறந்த இவர் அந்நாட்டு உள்ளூர் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளங்கிவந்துள்ளார். அப்போதைய காலகட்டங்களில் தென்னைப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பரான மார்க் பௌச்சர் இருக்கும் வரை இவருக்கு அந்நாட்டு அணியில் இடம் கிடைக்காது என்பதனை உணர்ந்து நியூஸிலாந்து அணிக்கு குடிபெயர்ந்து அங்கும் தனது கிரிக்கெட்டினை தொடர்ந்துள்ளார். அங்கு இவரின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே 2012 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இவரால் டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சோபிக்க முடியாமல் போனது. 9 போட்டிகளில் விளையாடிய இவர் வெறும் 341 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.