நன்றாக ஆடிக்கொண்டிருந்த தல தோனிக்கு திடீர் ஓய்வு எதற்கு? கேப்டன் விராட் கோலியின் பதில் இதுதான்!

New Zealand v India - ODI Game 2
New Zealand v India - ODI Game 2

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கிட்டத்தட்ட பாதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏன் வரலாற்றுத் தொடர் என்று கூறுகிறோம் என்றால், இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் இந்திய அணி இதுவரை செய்யாத பல சாதனைகளை நியூசிலாந்து மண்ணில் நிகழ்த்தக்கூடும்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் சேவாக் தலைமையிலான இந்திய அணி, அங்கு வெற்றி பெற்றது. அதன் பின்னர் இந்திய அணியால் பெரிதாக வெற்றிகளை குவிக்க முடியாமல் தவித்து வந்தது. 2014ம் ஆண்டு தோனி தலைமையில் சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நான்கில் தோற்று ஒரு போட்டியில் ட்ரா செய்து படுமோசமாக வெளியேறியது

தற்போது அசுர பலத்தில் இருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் சென்று, தனது திறமையை நிரூபித்துக் காட்டி வருகிறது. தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று விட்டால் பல சாதனைகளை இந்திய அணி படைத்துவிடலாம். இதற்காக இந்திய அணி தீவிர பயிற்சி செய்து இன்று காலை களமிறங்கியது.

இந்திய அணியை பொருத்தமட்டில் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், வெற்றி பெற வேண்டும் என்பது விராட் கோலியின் தார்மீக குறிக்கோள் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் முதல் இரண்டு போட்டிகளில் தோற்று விட்டு சற்று மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இதற்கு முன்னதாக வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை தூசுதட்டி துவம்சம் செய்து தொடரை வென்றது. ஆனால், இந்திய அணியிடம் நியூசிலாந்து அணியின் பாட்சா பலிக்கவில்லை. இதனால் எப்படியாவது இந்த போட்டியில் வென்று தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று கடுமையான போராட்டத்துடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி.

இன்றைய போட்டியில் இந்தியாவின் சார்பில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது.

1.ஒன்று "தோனியின் ஓய்வு.."

2. இரண்டு "விஜய் சங்கருக்கு பதில் ஹர்திக் பாண்டியா..."

இரண்டாவது மாற்றத்தை நம் அனைவருக்கும் எளிதாக புரிந்து விடும். விஜய் சங்கருக்கு பதில் எப்போதும் ஹர்திக் பாண்டியாதான் ஆடுவார். ஏனெனில் இந்தியாவின் முதன்மை ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாதான். அவர் இல்லாத பட்சத்தில் மட்டுமே, விஜய் சங்கருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். இதனால் ஹர்திக் பாண்டியா ஆட்டோமேட்டிக்காக அணிக்குள் நுழைந்துவிடுவார்.

ஆனால் எப்போதும் அணிக்குள் இருக்கும் தோனிக்கு ஏன் ஓய்வு கொடுக்கப்பட்டது என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றது. குறிப்பாக கடந்த சில போட்டிகளாக அற்புதமாக ஆடி வரும் மகேந்திர சிங் தோனிக்கு ஏன் ஓய்வு கொடுக்கப்பட்டது என்ற முறையில் பல தரப்பிலிருந்தும் அம்புகளாக கேள்விக்கனைகள் பாய்ந்து வந்துகொண்டிருக்கிறது

Australia v India - ODI: Game 3
Australia v India - ODI: Game 3

இந்நிலையில் டாஸ் போடுவதற்கு முன்பாக பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி தோனிக்கு கொடுக்கப்பட்ட ஓய்வு குறித்து குறிப்பாக பேசினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது....

தோனிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால் இந்த போட்டியில் அவர் ஆடமாட்டார் இதன் காரணமாக தினேஷ் கார்த்திக் மீண்டும் அணிக்குள் வருகிறார் என்று கூறினார்.

இதனால் தோனி ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். இந்த தசை பிடிப்பு அடுத்த போட்டிகள் குணமாகிவிடும் என்று தெரிகிறது. மீண்டும் களத்திற்குள் வந்து அற்புதமான ஆட்டத்தை ரசிகர்களுக்கு விருந்தாக படைப்பார் தோனி.