ஐபிஎல் சீசன்-12 ஆனது வருகின்ற மார்ச் 23ஆம் தேதி துவங்கவிருக்கிறது, இந்த தொடரானது இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அனைவருக்கும் அவர்களது திறமையை வெளிப்படுத்த ஓர் சிறந்த மேடையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வீரர்களில் ஆஸ்திரேலியாவின் வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் முக்கிய பங்கு அளித்து வருகின்றனர்
மைகேல் ஹஸ்ஸி, டேவிட் வார்னர், ஷேன் வாட்சன் போன்றோர் சிறப்பாக விளையாடி பல சாதனைகளையும் படைத்துள்ளனர்.
இதுவரை 11 தொடர்களில் ஆஸ்திரேலியாவின் வீரர்கள் தலைமை வகித்த அணிகள் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுருக்கிறது. மற்றும் ஆஸ்திரேலியாவின் வீரர்கள் இதுவரை 5 முறை ஆரஞ்சு தொப்பிகளும், ஒருமுறை பர்பிள் தொப்பியையும் பெற்றுள்ளனர். மேலும் நான்கு முறை தொடரின் மிகுந்த மதிப்புள்ள வீரர் விருதையும் பெற்றுள்ளனர்.
இந்த சீசனில் 12 ஆஸ்திரேலிய வீரர்கள் பல்வேறு அணிகளுக்கிடையே ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர், எனினும் ஷான் மார்ஷ் , ஆடம் ஜாம்பா , உஸ்மான் கவாஜா போன்ற சிறந்த வீரர்கள் ஏலத்தில் விலை போகவில்லை.
ஐபிஎல் போட்டிகளில் பெரிதாக முத்திரை பதித்த ஆஸ்திரேலியா வீரர்கள் பெரும்பாலும் பேட்ஸ்மேன் அல்லது ஆள்-ரௌண்டர்களாகவே இருப்பார்கள். பௌலிங் பொறுத்தவரை ஷேன் வார்னே முதல் சீசனில் 18 விக்கெட்டுகளை எடுத்தார் மேலும் ஆண்ட்ரூ டை கடந்த வருடம் பர்பிள் தொப்பியை வென்றார்.
இக்கட்டுரையில் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் நாம் கவனிக்கவேண்டிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி காண்போம் .
#3. நாதன் கூல்டர் நைல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
31 வயதாகும் நாதன் கூல்டர் நைல் வலதுக்கை வேகப்பந்து வீச்சாளர், மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு விளையாடுபவர் கூல்டர் நைல். இதுவரை 22 ஒருநாள் போட்டிகளில் 38 விக்கெட்டுகள் மற்றும் 26 டி20 போட்டிகளில் 30 விக்கெட்டுகளையும் ஏடுத்துள்ளார்.
தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்சேர்ஸ் அணிக்காக விளையாடி வரும் கூல்டர் நைல் 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்துள்ளார், எகானமி ரேட் 7.45. மேலும் கீழ்வரிசையில் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமையும் கொண்டவர்.
ஐபிஎல், பொறுத்தவரை கூல்டர் நைல் மும்பை இந்தியன்ஸ் (2013), டெல்லி டேர்டெவில்ஸ் (2014-2016), கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் (2017) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (2018-தற்போது) விளையாடி உள்ளார். கடந்த வருடம் பெங்களூர் அணிக்கு சென்ற கூல்டர் நைல் காயம் காரணமாக ஒரு போட்டியிலும் கலந்து கொள்ள்ளவில்லை.
2017 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணியில் இருந்த கூல்டர் நைல் 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் . மற்றும் மொத்தம் 26 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
இந்த ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாடவிருக்கும் கூல்டர் நைல் அந்த அணியின் வேகப்பந்து வீச்சிற்கு பெரிதும் வலு சேர்ப்பார். இவரை அணியில் எடுத்தால் நிச்சயமாக பெங்களூரு அணிக்கு வெற்றியை தேடித்தருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
#2. பில்லி ஸ்டான்லேக் (சன் ரைஸர்ஸ் )
24 வயதான பில்லி ஸ்டான்லேக் வேகமாக பந்து வீசுவதிலும், கொடிய பௌன்சர்கள் வீசுவதிலும் வல்லமை பெற்றவர். ஆஸ்திரேலியாவின் மிக உயரமான கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றவர் ஸ்டான்லேக்.
டி20 போட்டிகளில் 17 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் ஸ்டான்லேக், மற்றும் நடந்து வரும் பிக் பாஷ் தொடரில் அடிலெய்டு ஸ்ட்ரைகர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் 11 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் 2017-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாடினார், 2018-ல் இருந்து ஹைதராபாத் அணிக்கு விளையாடி வருகிறார். மொத்தம் 6 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். கடந்த முறை விரலில் காயம் ஏற்பட்டதால் அவரால் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது.
ஐபிஎல் தொடர்களில் சிறந்த பௌலிங் அணியாக திகழ்ந்து வரும் சன் ரைஸர்ஸ் அணிக்கு பில்லி திரும்பினாள் இன்னும் அசச்சுறுத்தலாக விளங்கும். ஸ்டான்லேக் அவரது பௌன்சர்களால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவார். இந்த ஆண்டின் ஐபிஎல் இவருக்கு தன் திறமையை வெளிப்படுத்த மிகவும் உதவும்.
#1. ஆண்ட்ரூ டை (கிங்ஸ் லெவன் பஞ்சாப் )
32 வயதாகும் ஆண்ட்ரூ டை ஆங்கிலத்தில் நக்கிள் பால் எனப்படும் தனது கணு விரல்களை பயன்படுத்தி பந்து வீசுவதில் வல்லவர் மற்றும் யார்க்கர்கள் வீசுவதிலும் வல்லவர் ஆவர்.
கடந்த 2018-ல் டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 31 விக்கெட்டுகளை எடுத்தார். மொத்தமாக 26 போட்டிகளில் 37 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.இந்த ஆண்டின் பிக் பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்சேர்ஸ் அணிக்காக விளையாடும் இவர் 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் டை குஜராத் லயன்ஸ் (2017) மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2018-தற்போது வரை) விளையாடி வருகிறார். இவர் விளையாடிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே ஹாட்-ட்ரிக் விக்கெட் எடுத்ததோடு 5 விக்கெட்களையும் கைப்பற்றி முதல் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
கடந்த சீசனில் 24 விக்கெட்டுகள் எடுத்து பர்பிள் தொப்பியையும் வென்றார், மொத்தம் 20 போட்டிகளில் 36 விக்கெட்டுகளை வீழ்த்திஇருந்தார் டை.
இந்த ஆண்டிலும் பழையபடி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறார் ஆண்ட்ரூ டை.
எழுத்து : அப்சல்
மொழியாக்கம் : காமாட்சி சுந்தரம்