#2. பில்லி ஸ்டான்லேக் (சன் ரைஸர்ஸ் )
24 வயதான பில்லி ஸ்டான்லேக் வேகமாக பந்து வீசுவதிலும், கொடிய பௌன்சர்கள் வீசுவதிலும் வல்லமை பெற்றவர். ஆஸ்திரேலியாவின் மிக உயரமான கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றவர் ஸ்டான்லேக்.
டி20 போட்டிகளில் 17 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் ஸ்டான்லேக், மற்றும் நடந்து வரும் பிக் பாஷ் தொடரில் அடிலெய்டு ஸ்ட்ரைகர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் 11 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் 2017-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாடினார், 2018-ல் இருந்து ஹைதராபாத் அணிக்கு விளையாடி வருகிறார். மொத்தம் 6 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். கடந்த முறை விரலில் காயம் ஏற்பட்டதால் அவரால் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது.
ஐபிஎல் தொடர்களில் சிறந்த பௌலிங் அணியாக திகழ்ந்து வரும் சன் ரைஸர்ஸ் அணிக்கு பில்லி திரும்பினாள் இன்னும் அசச்சுறுத்தலாக விளங்கும். ஸ்டான்லேக் அவரது பௌன்சர்களால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவார். இந்த ஆண்டின் ஐபிஎல் இவருக்கு தன் திறமையை வெளிப்படுத்த மிகவும் உதவும்.
#1. ஆண்ட்ரூ டை (கிங்ஸ் லெவன் பஞ்சாப் )
32 வயதாகும் ஆண்ட்ரூ டை ஆங்கிலத்தில் நக்கிள் பால் எனப்படும் தனது கணு விரல்களை பயன்படுத்தி பந்து வீசுவதில் வல்லவர் மற்றும் யார்க்கர்கள் வீசுவதிலும் வல்லவர் ஆவர்.
கடந்த 2018-ல் டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 31 விக்கெட்டுகளை எடுத்தார். மொத்தமாக 26 போட்டிகளில் 37 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.இந்த ஆண்டின் பிக் பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்சேர்ஸ் அணிக்காக விளையாடும் இவர் 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் டை குஜராத் லயன்ஸ் (2017) மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2018-தற்போது வரை) விளையாடி வருகிறார். இவர் விளையாடிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே ஹாட்-ட்ரிக் விக்கெட் எடுத்ததோடு 5 விக்கெட்களையும் கைப்பற்றி முதல் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
கடந்த சீசனில் 24 விக்கெட்டுகள் எடுத்து பர்பிள் தொப்பியையும் வென்றார், மொத்தம் 20 போட்டிகளில் 36 விக்கெட்டுகளை வீழ்த்திஇருந்தார் டை.
இந்த ஆண்டிலும் பழையபடி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறார் ஆண்ட்ரூ டை.
எழுத்து : அப்சல்
மொழியாக்கம் : காமாட்சி சுந்தரம்