பெரிதும் ஆவலுடன் காத்திருந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக் விஜய் சங்கர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் 15 பேர் கொண்ட இந்திய அணியில் அணியில் இடம்பெற்றனர். அம்பத்தி ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அணியில் வெறும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்றதால் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவுக்கு கடும் கேள்விகளுக்கு உள்ளாகின. இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் வலைப்பயிற்சியில் ஈடுபடும் மேலும் நான்கு பந்துவீச்சாளர்களை இந்த குழு அறிவித்தது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் கே.எல்.ராகுல் ஒருவர் மட்டுமே மாற்று தொடக்க வீரராகஇடம்பெற்றுள்ளார். தொடக்க வீரர்களாக களம் காண வாய்ப்புள்ள 3 பேட்ஸ்மேன்களில் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.அஜிங்கியா ரஹானே :
இந்திய ஒருநாள் அணியின் ஒரு முக்கிய வீரராக திகழ்ந்தவர், ரகானே. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பார்ம் இன்றி தவித்ததால் சர்வதேச குறுகிய கால போட்டிகளிலும் இடம்பெறவில்லை. இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகளில் 24 அரை சதங்கள் 3 சதங்கள் உட்பட மொத்தம் 2900 ரன்களைக் குவித்துள்ளார். கிளாசிக் ஆட்டம் மற்றும் இங்கிலாந்து மண்ணில் இவரது அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் மாற்று தொடக்க வீரராக இவர் களமிறக்கப்படலாம். இவர் தற்போது ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார்.
#2.மயங்க் அகர்வால்:
கடந்த வருடம் தான் இவர் இந்திய சீனியர் அணியில் முதன்முறையாக இடம் பெற்றார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு முக்கிய இன்னிங்சை அளித்தார். இது மட்டுமல்லாது உள்நாட்டு தொடர்களில் உள்ள போட்டிகளிலும் கலந்துகொண்டு தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து வருகிறார். கர்நாடகா அணிக்காக லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இவர் இந்திய அணிக்கு மேலும் ஒரு மாற்று தொடக்க வீரராக களமிறங்கும் திறன் இவருக்கு உண்டு.
#1.பிருத்திவி ஷா :
இந்திய அணியின் வளர்ந்து வரும் இளம் வீரர்களின் கணக்கிட்டால் முதலாவதாக அனைவருக்கும் நினைவில் வருபவர், இந்த பிருத்திவி ஷா. தனது பத்தொன்பதாவது வயதிலேயே இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு முக்கிய அத்தியாயமாக விளங்கி வருகிறார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தி கோப்பையையும் வென்று கொடுத்தார். இதுமட்டுமல்லாது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரியும் சிக்ஸருமாய் பந்துவீச்சாளர்களை கருணையின்றி தாக்கும் திறன் இவரிடம் வெளிப்பட்டு வருகிறது. இதுபோன்ற காரணங்களால் இந்திய அணியின் மாற்று வீரராக இவர் களமிறங்கலாம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.