நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்களின் மூலம் இந்தியா அணிக்கு நிகழ்ந்த மூன்று நன்மைகள் !

Mohamed shami
Mohamed shami

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போன்ற தொடர்களில் பங்கேற்று வருகின்றது. சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, இதன் பின்பு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 4-1 என்ற இன்று கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி மூன்றாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்தியா அணி தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கின்றது.

2019-ம் ஆண்டிற்கான உலக கோப்பை தொடர் தொடங்க சில நாட்களே மீதம் உள்ள நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் படுதோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, எஞ்சியிருக்கும் டி20 தொடரில் வெற்றி பெற்று பார்மிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் இத்தொடர்களின் மூலம் இந்தியா அணிக்கு நிகழ்ந்த மூன்று நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

#3 மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் :

ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணியானது பெரும்பாலும் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமாரை சார்ந்தே இருந்து வந்தது.

உலககோப்பையில் ஒரு அணி 9 முதல் 11 போட்டிகள் வரை பங்கேற்க வேண்டும் என்ற நிலை உள்ளதால் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்குவது சிரமமே, முதலிரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சோர்வடைந்தாலோ அல்லது காயம் அடைந்தாலோ மூன்றாவது வேகப்பந்துவீச்சாளரை கொண்டு பங்கேற்கலாம்.

இந்த மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு முகமது ஷமி சரியானவர் என்று நிரூபித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் 7 போட்டிகளில் பங்கேற்ற இவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் விக்கெட் சாய்ப்பதில் வல்லவர்.

சமீபத்தில், ஒருநாள் அரங்கில் குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இதுமட்டுமின்றி நியூசிலாந்து தொடரில் தொடர் நாயகன் விருதும் பெற்றார்.

#2 மிடில் ஆர்டர் :

Ambati Rayudu
Ambati Rayudu

இந்திய அணிக்கு நம்பர் 4 மற்றும் மற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களின் பார்ம் கவலைக்கிடமாகவே இருந்து வந்தது.

சமீபத்தில் முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் அம்பத்தி ராயுடு முதலிடம் பிடித்தார், இதன் மூலம் இந்திய அணியின் நீண்டநாள் பிரச்சனையான 'நம்பர் 4' இடத்தை அம்பத்தி ராயுடு நிரப்பியுள்ளார். குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது, அப்போது ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் ராயுடு இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர், இந்த போட்டியில் அம்பத்தி ராயுடு 90 ரன்களை குவித்தார்.

கேதர் ஜாதவ் தினேஷ் கார்த்திக் தோனி போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் நல்ல பார்மில் இருப்பது அணிக்கு கூடுதல் பலம்.

#1 தோனியின் பார்ம்

Ms dhoni
Ms dhoni

தோனியின் பார்ம் குறித்து சென்ற வருடம் கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கேள்விகள் எழுந்தன. ஆனால் இந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடரில் மூன்று போட்டிகளில் 3 அரைசதம் அடித்து தொடர் நாயகன் விருது பெற்றார். இந்த ஆட்டத்தின் மூலம் இவரது ஆட்டம் குறித்த கேள்விகளுக்கு தனது பேட்டின் மூலம் பதில் அளித்தார் எனலாம்.

இதன்பின்பு நடைபெற்ற நியூசிலாந்து தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை தோனி வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இந்த இந்த பார்ம் மற்றும் ரன் வேட்டையை உலகக்கோப்பை வரை தொடரும் பட்சத்தில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக தோனி இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஆஸ்திரேலியா தொடரில் 3 போட்டியில் விளையாடிய இவர் 193 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தொடரில் 3 போட்டியில் விளையாடிய தோனி இரண்டு போட்டிகளில் மட்டுமே பேட்டிங் செய்தார் ஒரு போட்டியில் டக் அவுட் ஆனாலும் மற்றொரு போட்டியில் கடைசி கட்டத்தில் 49 ரன்களை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

App download animated image Get the free App now