Create
Notifications

மிகப்பெரும் பாடி பில்டர்களாக மாறிய கிரிக்கெட் வீரர்கள்

Bodybuilding has a huge following around the world
Bodybuilding has a huge following around the world
SENIOR ANALYST

கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெறும் ஜாம்பவான்கள் கூட தங்களது உடல் உழைப்பை பெரும் அளவிலும் நம்பியுள்ளனர். கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு தங்களது உடலை திடமாக மாற்றுவதால் எவ்வித சிரமமுமின்றி போட்டிகளில் ஈடுபட காரணமாய் அமைகின்றது. முன்பு இருந்தது போல் அல்லாமல் தகுந்த உடல் கட்டமைப்பைப் கொண்டுள்ள வீரர்களே தற்போதைய கிரிக்கெட் உலகில் பெருமளவு தேவைப்படுகிறார்கள். இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கூட தங்களது உடலை போதிய முறையில் பயிற்சி மேற்கொண்டு கட்டமைத்து வருகின்றனர். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட காலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பிறகு ஓய்வு பெற்று விடும் வீரர்கள் பெரும்பாலும் வர்ணனை மற்றும் பயிற்சியாளர் பதவிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். ஆனாலும் அவற்றில் வெகு சிலர் மட்டுமே பாடி பில்டராக மாறியுள்ளனர். இதன் மூலம், கிரிக்கெட் போட்டிகளில் மேற்கொண்ட பயிற்சிகளுக்கு மேல் பல புதிய பயிற்சிகளுக்கு தம்மை ஈடுபடுத்தி பழனி படிக்கட்டுகளை போல் தங்களது உடலை மாற்றியுள்ளனர். நிச்சயம் இவர்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போதும் கூட இவ்வகையான உணவு பழக்கத்தை மேற்கொண்டு இருக்கமாட்டார்கள். எனவே, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாடி பில்டர்கள் ஆக மாறிய வீரர்களை பற்றி இந்தத் தொகுப்பு எடுத்துரைக்கின்றது.

#1.டேவிட் லாரன்ஸ்:

David Lawrence is a renowned cricketer turned bodybuilder.
David Lawrence is a renowned cricketer turned bodybuilder.

1988 முதல் 1992 ஆண்டு இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்து அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளிலும் ஒரே ஒரு நாள் போட்டியிலும் களம் இறங்கி உள்ளார், டேவிட் லாரன்ஸ். இவரின் பெற்றோர் ஜமைக்காவில் சேர்ந்திருந்தாலும் இவர் பிறந்தது என்னவோ இங்கிலாந்தில் தான். ஆரம்ப காலகட்டத்தில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட விக்கெட்களை கைப்பற்றி உள்ளார், லாரன்ஸ். வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் துரதிஸ்டவசமாக தொடரில் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டார். இதன் காரணமாக, நிலை தடுமாறி களத்திலேயே இவர் விழுந்ததால் ஸ்ட்ரெச்சரின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதுமுதலே இங்கிலாந்து அணி சார்பாக கிரிக்கெட் போட்டிகளில் இவர் திரும்பவில்லை. 29வது வயதிலேயே தமது ஓய்வை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார், லாரன்ஸ். அதன் பின்னர், பாடிபில்டிங் துறையில் சாதிக்க ஆர்வம் காட்டியதால் தகுந்த பயிற்சி பழக்கவழக்கங்களை மேற்கொண்டு இத்துறையில் படிப்படியாக முன்னேறினார். தேசிய பாடிபில்டிங் அசோசியேசனின் இங்கிலாந்து மேற்கு மண்டலத்தில் 40 முறைக்கும் மேற்பட்ட சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார். தொடர்ச்சியாக மூன்று வருடங்களும் இவர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

#2.மார்ட்டின் போர்டு:

Martyn Ford
Martyn Ford

இந்த பட்டியலில் மேலும் ஒரு இங்கிலாந்து வீரராக இணைந்துள்ளார் மாட்டின் போர்டு. இவர் கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷிர் அணிக்காக விளையாடி உள்ளார். இவர் கிரிக்கெட் வீரராக இருந்த காலகட்டத்தில் ஒரு பயிற்சியை தவறுதலாக மேற்கொண்டதில் 12 மாத கால நீண்ட பிரச்சனைக்கு உள்ளானார். ஒருவித சுரப்பி இவரது உடம்பிலிருந்து சுரக்கத் தொடங்கியது. அதன் பின்னர், தமது கிரிக்கெட் கனவுக்கெல்லாம் முடிவு கட்டிவிட்டு ஏதாவது ஒரு துறையில் சாதிக்க திட்டம் தீட்டியுள்ளார். அதன் காரணமாகவே பாடிபில்டிங் துறையில் கால் பதித்தார், மார்டின்.

A post shared by Martyn Ford (@martynfordofficial) on Aug 10, 2019 at 1:54am PDT

இவரது விருப்ப கிரிக்கெட் போட்டிகளில் விலகிய பிறகு மிகுந்த தேடலாக இந்த துறை அமைந்தது. தற்போது 37 வயது ஆகியிருக்கும் மார்ட்டின் தகுந்த பயிற்சிகளை மேற்கொண்டும் ஒரு நாளுக்கு சராசரியாக 340 கிராம் புரோட்டீன் உணவுகளை உண்டும் வருவதால் தற்போதைய எடை 230 கிலோவாக உள்ளது. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெற்றி நடைபோட்ட போய்கா எனும் தொடரில் முக்கிய பாத்திரமாக நடித்து புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். தற்போது இவர் பிரபல உடற்பயிற்சி நிபுணராக விளங்கி வருகிறார்.

1 / 2 NEXT
Edited by Fambeat Tamil
Fetching more content...
App download animated image Get the free App now