மிகப்பெரும் பாடி பில்டர்களாக மாறிய கிரிக்கெட் வீரர்கள்

Bodybuilding has a huge following around the world
Bodybuilding has a huge following around the world

#3.கிறிஸ் டிரெம்லட்:

Chris Tremlett boasts of a monumental physique now.
Chris Tremlett boasts of a monumental physique now.

இப்பட்டிலில் உள்ள மற்றுமொரு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளராக உள்ளார், கிறிஸ் டிரெம்லட். இவர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளிலும் 15 ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார். அதுமட்டுமல்லாமல், 2010 - 11 காலகட்டங்களில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதற்கு இவரும் ஒரு காரணமாய் அமைந்தார். அந்த தொடரில் இவர் பங்கேற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை சாய்த்து அணியின் தொடர் வெற்றிக்கு காரணமாய் அமைந்தார். 2005ம் ஆண்டு நடைபெற்ற சர்ரே அணிக்காக களம் இறங்கியது தான் இவரது இறுதி முதல் தர போட்டியாக அமைந்தது.

6 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட டிரெம்லட், கடினமான தரையிலும் கூட கூடுதல் பவுன்சர்களை கொண்டு தாக்கும் வல்லமை பெற்றவர். தனது 15 வயதில் இருந்தே முதல் தர போட்டிகளில் விளையாடி வரும் இவர், 459 விக்கெட்டுகள் சாய்த்து உள்ளார். 2015 ஆம் ஆண்டில் தமது ஓய்வினை அறிவித்தார். 37-வது வயதிலேயே கடுமையான பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டார். இதன் காரணமாக தமது தசைகளை பெருமளவில் வலு சேர்த்து உள்ளார். அவ்வப்போது தமது பெருத்த கட்டமைப்பைக் கொண்ட தனது உடலை சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வழக்கத்தை மேற்கொண்டு வருகிறார், கிறிஸ். இதோ உங்களது பார்வைக்காக இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட உள்ள ஒரு படத்தை இங்கு நான் வெளியிட்டுள்ளேன்.

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications