ஒரு வரலாற்று வெற்றியை இந்தியா அணி ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் சுவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இதுவரை நடைபெற்றிருக்கும் டெஸ்ட் தொடர்களில் இந்தத் தொடரில் தான் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியைக் கண்டுள்ளது. இந்த வெற்றியானது இந்த ஆண்டின் மூன்றாவது அந்நிய மண்ணில் கண்ட வெற்றியாகும். ஆசிய அணிகளில் இந்தியா அணி மட்டுமே ஒரே ஆண்டில் மூன்று வெளிநாட்டு வெற்றியைக் கண்ட அணியாக இவ்வெற்றியின் மூலம் பதிவு செய்துள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் போட்டியில் சொல்லிக்கொள்ளும் வகையில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சோபிக்கவில்லை. அணியின் தூணாக இருக்கும் விராட் கோலியும் விரைவில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். துணைக் கேப்டனாக இருக்கும் ரஹானேவும் சொதப்பியதால் ரன்களில் பின்தங்கி இருந்தது இந்திய அணி. ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா ஆகியோரின் பங்களிப்பு மற்றும் புஜாராவின் சதத்தால் இந்திய அணி மதிக்கத்தக்க ஸ்கோரான 235 ரன்களை எடுத்திருந்தது.
செகண்ட் இன்னிங்சை பொறுத்தவரை இந்திய அணி நல்ல தொடக்கத்தை பெற்றது. முரளி விஜய் மற்றும் கே.எல்.ராகுல் 50+ பார்ட்னர்ஷிப்பை எடுத்து நல்ல தொடக்கத்தை தந்தனர். பின்பு இருவரும் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்சில் சதம் அடித்து இருந்த புஜாரா மற்றும் கேப்டன் கோலி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
கோலியும் அவுட்டாகப் பின்பு இறங்கிய துணை கேப்டன் ரஹானே அரை சதத்தைக் கடந்து ஆஸ்திரேலியாவுக்கு வலுவான இலக்கு அமையும்படி ஆடி இருந்தார்.
323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் சுருண்டது. ஆரம்பகட்டத்தில் விக்கெட்டுகளை இந்தியா வேகமாக எடுத்திருந்தாலும் கடைசி 4 விக்கெட்டுகளை எடுக்கத் திணறியது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு வழியாகச் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியைச் சுவைத்தது.
#3. விராட் கோலியின் நடனம்
விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக இருப்பது நாம் அனைவரும் அறிவோம். அவர் தன் உணர்ச்சிகளை வெளிப்படையாக வெளிப்படுத்தும் வீரர். உலகில் எந்தப் பகுதியில் ஆடினாலும் கோலிக்கான தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கோலி களத்தில் இறங்கும்போது ஆரவாரமாக இருக்கும் ஷாட்களும் அனல் பறக்கும்.
அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியை 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கினர், அதாவது இந்திய அணியின் ஸ்கோரை விட 15 ரன்கள் குறைவு.
இதையடுத்து இந்தியா பந்துவீச்சாளர்களின் பர்ஃபார்மன்ஸை கண்டு மகிழ்ச்சி அடைந்த கோலி ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்தபோது தானாக நடனமாடினார். அவர் ஆடிய நடனம் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. பிடித்த பாடல்களை இந்த வீடியோவில் பதிவிட்டு ரசிகர்கள் இன்றளவும் பகிர்ந்து வருகின்றனர்.
கோலி நடனம் ஆடியதை ஒரு தொலைக்காட்சி பேட்டியின் நடுவே ஆஸ்திரேலியா ஜாம்பவானான ஷேன் வார்னே கூப்பிட்டு காண்பிக்கவே கோலி எல்லை இல்லாப் புன்னகையே வெளிப்படுத்தினார். இப்போட்டியில் கோலி ரன் எடுக்கத் தவறியிருந்தாலும், வெற்றியின் உத்வேகத்துடன் அடுத்த போட்டியில் ஒரு கலக்கு கலக்குவார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.