ஆஸ்திரேலியா vs. இந்தியா : முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த மூன்று நகைச்சுவை தருணங்கள்

கோலியின் நகைச்சுவைத் தருணம்
கோலியின் நகைச்சுவைத் தருணம்

#2. ரவிச்சந்திரன் அஸ்வின் ரோஹித் ஷர்மாவை புறக்கணித்தது

தனது முதல் ஸ்பெல்லில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசினார். 34 ஓவர்களில் 3 விக்கெட்களை சாய்த்திருந்தார். இவரின் சிறப்பான பங்களிப்பால் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு சுருண்டது.

பதினோராவது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான ஆரோன் பின்ச் ரிஷப் பன்டிடம் கேட்ச் ஆனார். மொத்த அணியும் அஸ்வினை பாராட்ட அவரை சூழ்ந்து இருந்தது. அந்த வெற்றிகரமான ஓவர் போட்டபின் அஸ்வினை பாராட்ட ரோஹித் ஷர்மா அவரை நெருங்கி வந்தார். அந்த சமயத்தில் அஸ்வின் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்க ரோஹித்தை கவனிக்கத் தவறினார்.

இந்த வீடியோவும் இணையதள வாசிகளால் வைரல் ஆனது.

#1. ரவி சாஸ்திரியின் நக்கலான கருத்து.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும், போட்டியின் கடைசி தருணங்களில் ஆட்டம் களைகட்டியது என்றே கூறலாம். வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்குமே இருந்தது. இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா கடைசி வரிசை பேட்ஸ்மேன்களை வெளியேற்ற மிகவும் போராட வேண்டியிருந்தது.

ஆஸ்திரேலிய அணியின் ஒன்பதாவது விக்கெட் விழும் தருவாயில், அவர்கள் 74 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது,மீதமுள்ள ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்தியா எளிதில் வெற்றியை பெறும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் திகைத்துப் போயினர். கடைசி விக்கெட்டில் சேர்ந்த ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் நாதன் லியொன் ஜோடி 42 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை மேம்படுத்தியது. அஸ்வின், பும்ரா, இஷாந்த் என மாறி மாறி பந்து வீசினாலும் கடைசி விக்கெட் விடுபடாமல் இருந்தது. ஒருவழியாக அஸ்வின் வீசிய சூழலில் ஹேசல்வுட் சிக்கவே இந்திய அணி வெற்றியை கண்டது.

விருவிருப்பான ஆட்டம் முடிவடைந்தபின், தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி "ஸச் போலே தோ கோட்டி முஹ் மெஹ் ஆகயே தே" என்று ஹிந்தியில் கூறினார்

தமிழாக்கம் - "சிறிது நேரம் முன் (இந்தியா கடைசி விக்கெட்டை எடுக்க போராடிக் கொண்டிருந்தபோது), பந்துகள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்காமல் வாய்க்கே வந்துவிட்டது” என்று கூறவே அரங்கம் சிரிப்பலையில் மிதந்தது.

Quick Links

Edited by Fambeat Tamil