#2 பிரவின் ஆம்ரி
பிரவின் ஆம்ரி உடனடி நட்சத்திர வீரராக இந்திய அணியில் ஜொலித்தார். 1992ல் டர்பனில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸிலேயே அந்நிய மண்ணில் சதம் விளாசி அசத்தினார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர் தொடர்ந்து சீரனா ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஆனால் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள தவறினார்.
மும்பையில் பிறந்த இவர் தனது அடுத்த 12 டெஸ்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து 3 அரைசதங்களை விளாசினார். ஆனால் 1993ல் இலங்கைக்கு எதிரான தொடரில் இவரது மோசமான ஆட்டத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
பிரவின் ஆம்ரி உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டும் அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதிக்கவில்லை. இந்தியாவிற்காக 13 டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடிய இவர் 42.50 என்ற அற்புதமான சராசரியுடன் 425 ரன்களை குவித்தார்.
#1 வினோத் காம்ளி
வினோத் காம்ளி ஒரே இரவில் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக உருவாகினார். 1993ல் நடந்த டெஸ்ட் தொடரில் வினோத் காம்ளி தன்னுடைய 5வது மற்றும் 6வது டெஸ்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து இரு இரட்டை சதங்களை விளாசித் தள்ளினார்.
டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வினோத் காம்ளி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவர் இந்திய அணிக்காக 21 டெஸ்ட் இன்னிங்ஸில் பங்கேற்று 54.20 என்ற அபூர்வமான சராசரியுடன் 1084 ரன்களை விளாசினார்.
இருப்பினும் 1995ல் இந்திய அணியிலிருந்து இவர் கழட்டிவிடப்பட்டார். அதன்பின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இந்திய தேர்வுக்குழு இவரைக் கண்டுகொள்ளவில்லை. வினோத் காம்ளி மும்பை அணிக்காக 9965 முதல் தர ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 59.20ஆக பிரம்மிப்பூட்டும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.