கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்னும் சாதனைக்கு சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கர், சர்வதேச போட்டிகளில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 100 சதங்களும் அடக்கமாகும். அதுமட்டுமல்லாது, 62 முறை ஆட்டநாயகன் விருதுகளையும் 15 முறை தொடர் நாயகன் விருதுகளையும் வென்றுள்ளார் சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர் புரிந்த சாதனைகள் அனைத்தையும் முடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே.
1989ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் கண்டு தொடர்ந்து 24 ஆண்டுகள் சர்வதேச காலத்தில் தம்மை நிலை நிறுத்தினார். 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு சர்வதேச போட்டிகளிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார். அவருக்கு சரிசமமாய் சர்வதேச களத்தில் சில ஜாம்பவான்கள் போட்டியிட்டனர். இருப்பினும், அவர்களையெல்லாம் தோற்கடித்து சாதனைகள் பலவற்றிற்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார், சச்சின் டெண்டுல்கர். எனவே, சச்சின் டெண்டுல்கர் அறிமுகமான பிறகு தமது கிரிக்கெட் வாழ்வை தொடங்கி அவருக்கு முன்னரே ஓய்வு பெற்ற சில ஜாம்பவான்களைப் பற்றிய தொகுப்பு இது.
#1.ரிக்கி பாண்டிங்:
1995-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார், ஆஸ்திரேலிய சேர்ந்த ரிக்கி பாண்டிங். பேட்டிங்கிலும் சரி கேப்டன்சியிலும் சரி தனக்கென தனி பாணியை கடைபிடித்து சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்தார். 230 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்ட இவர், அதிக ஒருநாள் போட்டிகளை வழிநடத்திய கேப்டன் எனும் தனி பெரும் சாதனை படைத்துள்ளார். தமது தலைமையில் 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை வென்று ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தடுத்து பெருமை சேர்த்தார் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடியதே அவரது இறுதி ஒரு நாள் போட்டியாக அமைந்தது.
#2.பிரையன் லாரா:
1990ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார், வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த பிரையன் லாரா. 2004-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்சில் 400 ரன்களைக் குவித்து தனிப் பெரும் சாதனையைப் படைத்தார், பிரையன் லாரா. இதுநாள் வரை இத்தகைய சாதனையை புரிந்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் என்னும் சாதனை பட்டியலில் நீடித்து வருகிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தலா 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவராக உள்ளார். 2001ஆம் ஆண்டு விஸ்டம் வெளியிட்ட 100 சிறந்த இன்னிங்ஸ் கொண்ட பட்டியலில் பிரையன் லாராவின் மூன்று இன்னிங்ஸ்களில் முதல் பதினைந்து இடத்திற்குள் இருந்தன. இறுதியாக 2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார், பிரையன் லாரா.
#3.சனத் ஜெயசூர்யா:
1989ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை துவங்கிய சனத் ஜெயசூர்யா, ஒருநாள் போட்டிகளின் தொடக்க ஓவர்கள் முதலே எதிரணியின் பந்துவீச்சை பிரித்தெடுக்கும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார். அர்ஜுன ரணதுங்கா வழி நடத்திய இலங்கை அணி, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. அத்தகைய உலக கோப்பை தொடரின் "தொடர் நாயகன்" விருதை சனத் ஜெயசூர்யா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச ஒருநாள் போட்டியில் பேட்டிங் 10,000க்கும் மேற்பட்ட ரன்களையும் பந்துவீச்சில் 300 விக்கெட்களையும் பீல்டிங்கில் 100 கேட்சுக்களையும் பிடித்த முதல் மற்றும் ஒரே வீரர் என்னும் அரியதொரு சாதனையை படைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, ஒருநாள் போட்டிகளில் அதி வேகமான 50, 100 மற்றும் 150 ரன்களை கடந்த பல்வேறு சாதனைகளை தனதாக்கி உள்ளார். இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேனாக 13,430 ரன்களும் ஒரு பவுலராக 323 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.
சச்சின் டெண்டுல்கர் காலத்தில் மேற்குறிப்பிட்ட மூன்று வீரர்களும் தங்களது நாட்டுக்காக சர்வதேச களத்தில் போராடி பல வெற்றிகளை பெற்றுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு நாட்டு வீரர்களும் சச்சின் டெண்டுல்கருக்கு பின்னர், அறிமுகமாகி அவருக்கு முன்னரே ஓய்வு பெற்று வர்ணனையாளராக பயிற்சியாளராகவும் பல்வேறு தளங்களில் தங்களது பணியை துவங்கினர். எனவே, இப்பட்டியலில் இருந்திருக்க வேண்டிய பிரபலங்களை பற்றி உங்களுக்கு ஏதேனும் அறிந்திருந்தால் கமெண்ட் செய்யவும்.