# 3 இம்ரான் நசீர் ( பாகிஸ்தான் அணி )

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை பாகிஸ்தானுக்கு ஒரு பேரழிவுகரமான உலகக் கோப்பையாக இருந்தது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் வூல்மர் மர்மமான சூழ்நிலையில் இறந்தார். இது பாகிஸ்தான் அணிக்கு அந்த ஆண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் அணி ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. இதன் பின் ஆப்பிரிக்க தேசத்திற்கு எதிராக ஒரு அற்புதமான சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் வீரர் இம்ரான் நசீர் தனது அணிக்கு உற்சாகத்தை அளித்தார். தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய இம்ரான் நசீர் 8 சிக்ஸர்கள் மற்றும் 14 பவுண்டரிகளை அடித்தார், அவர் 121 பந்துகளில் 160 ரன்கள் எடுத்ததால் பாகிஸ்தான் ஒரு பெரிய ஸ்கோர் அடைவதற்கு காரணமாக இருந்தது.
மழை குறுக்கிட்டதால் 20 ஓவர்களாக குறைக்கப்பட்டு 193 ரன்கள் இலக்காக ஜிம்பாப்வே அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இத்ன பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் ஆரம்பத்தில் தங்களது விக்கெட்களை இழந்தனர். இறுதியில், டி / எல் முறை மூலம் பாகிஸ்தான் இந்த ஆட்டத்தை 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றனர், மேலும் இம்ரான் நசீர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.எனவே, இது இம்ரான் நசீரின் கடைசி உலகக் கோப்பை தொடராக இருந்தது.