பன்னிரண்டாவது உலக கோப்பை தொடர் கடந்த மாதம் முடிவடைந்தது. இம்முறை உலக கோப்பை தொடரை வென்று இங்கிலாந்து அணி சாம்பியன் ஆனது. பலரும் எதிர்பார்த்திராத வகையில், இந்த தொடரின் இறுதிப்போட்டி பிரம்மாண்டமாகவும் சற்று சுவாரசியமாகவும் முடிந்தது. இந்த உலக கோப்பை தொடர் முடிந்ததற்கு டெஸ்ட் சேம்பியன்ஷிப் இம் மாதம் முதல் துவங்கியுள்ளது. நவீன டி20 சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒருநாள் போட்டிகளை இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எதிர்நோக்கி காத்திருக்கிறோம். வெறும் இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் இருதரப்பு தொடர்களில் ஒருநாள் போட்டிகள் நடைபெற்றால் உலக கோப்பை போன்ற நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடத்தும் மிகப்பெரிய மிகப்பெரிய தொடர்களில் மட்டுமே சுவாரசியம் எஞ்சியிருக்கும். ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு கட்டியுள்ளது. இனிவரும் காலங்களில் ஐசிசி சார்பாக நடத்தப்படும் 50 ஓவர் உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சர்வதேச டி20 உலக கோப்பை என வெறும் மூன்று மிகப்பெரிய தொடர்களை நடத்தப்பட உள்ளன. இருப்பினும், பல்வேறு தலைசிறந்த அணிகளை உள்ளடக்கி தலா 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடரை கிரிக்கெட் உலகிற்கு ஐசிசி அறிமுகப்படுத்த வேண்டும் என பலதரப்பட்ட கிரிக்கெட் ரசிகர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனவே, இவ்வாறு பல அணிகளை உள்ளடக்கிய ஒரு நாள் தொடரினை ஐசிசி நடத்த வேண்டும் என்பதற்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#3.தலைசிறந்த அணிகள் இடையே நிலவும் போட்டியை காண விரும்பும் ரசிகர்கள்:
எவ்வகை போட்டியாக இருந்தாலும் சரி அவைகளின் முக்கிய நாயகர்களாக ரசிகர்கள் திகழ்கின்றார்கள். கிரிக்கெட் போட்டிகளிலும் அவ்வாறு ரசிகர்கள் ஆட்டத்தின் நாயகர்களாக வலம் வருகின்றனர். பொதுவாக இரு தரப்பு போட்டிகளில் ஓரளவுக்கு ஆர்வம் காட்டும் ரசிகர்கள், உலக கோப்பை போன்ற மிகப்பெரும் தொடர்களில் உலகின் தலைசிறந்த அணிகளுக்கு இடையே நிலவும் போராட்டங்களை காண மிகவும் ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் மைதானத்திற்கு நேரடியாகவே சென்று ஆட்டத்தை ரசிக்கின்றனர். அவ்வகை மைதானங்களில் எவ்வளவு பணம் செலவாகினாலும் சரி நிச்சயம் நேரிலேயே காண துடிக்கின்றனர். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரிலும் கூட இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது அரையிறுதி போட்டியில் ஹாட்ஸ்டார் மூலம் ஆட்டத்தை கண்டு ரசித்த ரசிகர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டரை கோடியாகும். ஆம், நிச்சயம் இந்திய அணி உலகின் தலைசிறந்த அணிகளோடு போட்டியிடும்போது ஆட்டத்தை காண்போரின் எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ளது. எனவே, கூடுதலாக ஒரு தொடரை ஐசிசி நடத்துவதற்கு ரசிகர்களின் பங்கும் போற்றத்தக்க கூடிய வகையில் அமைந்துள்ளது.
#2.ஒருநாள் போட்டிகளுக்கு தேவைப்படும் கூடுதலான பரபரப்பு:
டி20 போட்டிகளை போலவே ஒரு நாள் போட்டிகளிலும் தற்போது அனல் பறந்து கொண்டிருக்கிறது. மிடில் ஓவர்களான 15 முதல் 40 ஓவர்களில் சற்று மெதுவாக செல்லக் கூடிய இந்த நேரத்தில் கூடுதலான பொழுதுபோக்கு அம்சத்தை இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கின்றனர். இருதரப்பு தொடர்களை பொறுத்தவரை தொடரை நடத்தும் சொந்த மண்ணைச் சேர்ந்த அணி மட்டுமே தனது ஆதித்தனை பெரும்பாலான போட்டிகளில் வெளிப்படுத்தக் கூடும். எனவே, பயிற்சி ஆட்டங்களில் தவிர்த்து மற்ற ஆட்டங்களில் இதுபோன்று நடப்பது பலமுறை நிரூபணம் ஆகி உள்ளது. சிறந்த அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடும் போது பலம் குறைந்த அளவே காணப்படுகிறது, ஆப்கானிஸ்தான் அணி. எனவே உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் ஐசிசி செயல்பட்டு வரும் இவ்வேளையில் இது போன்ற காரணங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும். உண்மையில், பல்வேறு அணிகளின் உள்ளடக்கி நடத்தப்படும் தொடர் சிறப்பாகவே நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி எதிர்காலங்களில் இதுபோன்ற தொடர்கள் நடத்துவதற்கு பல்வேறு சாத்தியக் கூறுகள் உள்ளன
#1.சிறந்த பார்வையாளர்களை உள்ளடக்கிய தொடர்:
பொதுவாக மற்ற இரு தரப்பு மற்றும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர்களை காட்டிலும் உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களை காண உலகெங்கும் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல, மைதானங்களிலும் கூட்டம் அலைமோதி உள்ளதை தற்போது நடந்து முடிந்துள்ள உலக கோப்பை தொடரிலும் கண்டுள்ளோம். எனவே, உலகமயமாக்கப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டிகளில் லட்சக்கணக்கான ரசிகர்களின் வருகையால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க பெருவாரியான வாய்ப்புகள் உள்ளன. உலகெங்கும் கிரிக்கெட் போட்டிகளை பிரபலமடைய செய்வதற்கும் வசூலிக்கப்படும் பணம் உதவி புரியும். டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்களில் உலக கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகளை ஏறத்தாழ 2.6 பில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இதுவரை இல்லாத சாதனையை ரசிகர்கள் செய்துள்ளனர். கிரிக்கெட்டை ஒரு மதமாகவே போற்றக்கூடிய ரசிகர்கள் உள்ளமையால் இதுபோன்ற தொடரை நடத்தினால் ஐசிசி மிகுந்த பெறக்கூடும். இனியாவது இதுபோன்ற தொடர்களை ஐசிசி நடத்துவதற்கான வாய்ப்புகளில் இது முன்னிலையில் உள்ளது.
.
.