ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே போட்டியாக மெல்போர்ன் நகரில் நடந்துவருகிறது. இதில் இன்று இரண்டாவது ஆட்டம் இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கியது.
சிறப்பான பார்ட்னெர்ஷிப்:
முதல் நாள் முடிவில் இந்தியா அணி இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து, விராட் மற்றும் புஜாரா ஆகியோர் களத்தில் இருந்தனர். இவர்கள் இருவரும் இன்றும் தங்களது நேர்த்தியான ஆட்டத்தால், கணிசமான முறையில் ரன்களை சேகரித்தனர். உணவு இடைவேளைக்கு முன்பு புஜாரா தனது சதத்தை கடந்தார். இடைவேளைக்கு பின்பு களமிறங்கிய இந்த இணை ரன் வேகத்தை அதிகரிக்க முயற்சித்தது. அனால் எதிர்பாராத விதமாக கோஹ்லி மற்றும் புஜாரா அடுத்தடுத்த ஆட்டமிழந்து வெளியேறினர்.
ரோஹித்தின் நேர்த்தியான ஆட்டம் :
பின்பு ரஹானே உடன் களமிறங்கினார் ரோஹித் ஷர்மா. இவர் முதுகு வலி காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணை ஆஸ்திரேலியா பௌலர்களை சமாளித்து 50 ரன்கள் சேகரித்தது.
ஆடுகளம் சற்று மந்தமான நிலையில் காணப்பட்டதால், பௌலர்கள் விக்கெட் வீழ்த்த மிகவும் சிரமப்பட்டனர். அதுமட்டுமல்லாது, அவ்வப்போது இந்தியா வீரர்கள் கொடுத்த கேட்சையும் கோட்டைவிட்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.
பெய்னின் சீண்டல்:
இதனால் மிகவும் துவண்டுபோன அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன், வழக்கமான ஆஸ்திரேலியர்கள் பாணியில் சீண்டல் முறையில் விக்கெட் வீழ்த்த முயன்றார்.
நாதன் லயன் பந்தை எதிர்கொண்ட ரோஹித் ஷர்மா கவனமாக பேட்டிங் செய்து வந்தார். அப்போது டிம் பெய்ன் அருகில் நின்று கொண்டிருந்த பின்சீடம் , " கொஞ்ச நாளாவே நான் ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு சப்போர்ட் பண்றதா இல்ல மும்பை இந்தியன்ஸ்க்கு சப்போர்ட் பண்றாதுன்னு குழப்பத்தில் இருக்கிறேன். இப்ப மட்டும் ரோஹித் ஒரு சிக்ஸர் அடித்தால் என் சப்போர்ட் கண்டிப்பாக மும்பை இந்தியன்ஸ்க்கு தான்" என ரோஹித்தை உசுப்பேற்றுவது போல கூறினார்.
ஆனால் இதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கவனமாக பேட்டிங் செய்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இப்படி ரோஹித்தை வம்பிழுத்த இந்த நிகழ்வை பற்றி பின்ச் கூறும்போது, "ஆம்,அவ்வாறு கூறியது உண்மைதான், அப்படியாவது ரோஹித் தனது நிலையை மாற்றி தனது விக்கெட்டை இழப்பார் என எண்ணினோம். அவ்வளவு தான் மேலும் கிரிக்கெட்டில் இதெல்லாம் நடப்பது சகஜமே" என கூறினார்.
இதைப்பற்றி இரு ஐபிஎல் அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நக்கலான பதிவுகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளன.
சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ரோஹித் ஷர்மா தனது அரைசதத்தை கடந்து 63 ரன்களில் ஆட்டமிளக்காமல் கடைசி வரை காலத்தில் இருந்தார். பின்பு 443 ரன்களில் இந்தியா அணி டிக்ளேர் செய்தது.
இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் 10 அரைசதத்தை விளாசியுள்ளார். ஆனால் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் அரைசதம் அடிப்பது இதுவே முதல்முறையாகும்.
மேலும் சிக்ஸர் விளாச சொன்ன டிம் பெய்ன் இதுவரை 12 சிக்ஸர்கள் மட்டுமே விளாசியுள்ளார். ஆனால் ரோஹித் சர்மா 2 மாதங்களில் மற்றும் 28 சிக்ஸர்கள் பறக்கவிட்டுள்ளார். டெஸ்ட் போட்டியில் நிரந்தர இடத்தை பிடிக்க போராடும் ரோஹித்திற்கு இது ஒரு நல்ல இன்னிங்ஸ்சாக அமைந்துள்ளது எனலாம்.
ஆனால், பெய்ன் அப்படி கூறியதற்கு காரணம் முதல் போட்டியில் லயன் ஓவரில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு தனது விக்கெட்டை இழந்து இருந்தார் ரோஹித். மீண்டும் ஒருமுறை இந்த தவறை செய்யாமல் அமைதிகாத்து நின்றார் ரோஹித்.