இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி ஆகஸ்ட் 3 அன்று ஃப்ளோரிடோவில் உள்ள லான்ரில் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் 11 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 5 முறை வெற்றி பெற்றுள்ளன.
இந்த இரு அணிகளும் மோதிய கடந்த கால டி20 போட்டிகளில் பல சிறந்த இன்னிங்ஸ்கள் வெளிபட்டுள்ளன. ஜமைக்காவில் எவின் லிவிஸின் அற்புதமான பேட்டிங், ஃப்ளோரிடோவில் லோகேஷ் ராகுலின் அதிரடி பேட்டிங் மற்றும் மும்பையில் ஆன்ரிவ் ரஸலின் தாறுமாறான பேட்டிங் போன்றன இதற்கு சான்றாக கூறலாம். இந்த இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி எப்பொழுதும் ஒரே ஆரவாரத்துடன் காணப்படும். நாம் இங்கு இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய டி20 போட்டிகளின் டாப் 10 பேட்டிங் பற்றி காண்போம்.
#10 ரோகித் சர்மா ( 28 பந்துகளில் 63 ரன்கள்), லாடர்ஹீல், 2016
246 என்ற மிகப்பெரிய டி20 இலக்கை துரத்திய இந்திய அணிக்கு டாப் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக இருத்தல் அவசியமாக இருந்தது. ரோகித் சர்மா இதனை உணர்ந்து அதிரடி தொடக்க பேட்டிங்கை வெளிபடுத்த ஆரம்பித்தார். அச்சமயத்தில் அதிரடி ஹீட்டிங் மற்றும் சில சிறப்பான ஷாட்களை விளாசி வான வேடிக்கை நிகழ்த்தி கொண்டிருந்தார் ரோகித் சர்மா.
பவர் பிளே ஓவரை சிறிதும் தவற விடாமல் சரியாக பயன்படுத்தி விளையாடினார் ரோகித் சர்மா. அத்துடன் முதல் 10 ஓவர்களுக்கு ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார். இந்த இன்னிங்ஸில் இவர் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசி பின்வரும் பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்து கொடுத்தார்.
#9 டுவைன் பிராவோ, (33 பந்துகளில் 66 ரன்கள்), லார்ட்ஸ், 2009
2009 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிகச் சுமாரான இலக்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக வந்தது. இப்போட்டியில் 153 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் குவிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 42 ரன்களை எடுத்து தடுமாறியது. கிறிஸ் கெய்லும் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
ராம் நரேஷ் சர்வான் மற்றும் ஷீவ் நரைன் சந்தர்பால் போன்ற அனுபவ பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது டுவைன் பிராவோ-வை சற்று முன்னதாக களமிறக்கியது மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்வாகம். இந்த நகர்வை சரியாக பயன்படுத்தி கொண்ட டுவைன் பிராவோ சிறப்பான பேட்டிங்கை லார்ட்ஸ் மைதானத்தில் வெளிபடுத்தினார். இவர் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி 19வது ஓவரிலேயே மேற்கிந்தியத் தீவுகளை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
#8 விராட் கோலி (47 பந்துகளுக்கு 89 ரன்கள்), மும்பை, 2016
விராட் கோலி 2016ஆம் ஆண்டு மிகவும் அதிரடி ஆட்டத்திறன் கொண்டு விழங்கினார். 2016 டி20 உலகக்கோப்பையில் தனி ஒருவராக இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். இத்தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதன் அரையிறுதி போட்டியானது, 5 வருடங்களுக்கு முன்னர் 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றிய மைதானமான மும்பை வான்கடேவில் நடந்தது. இந்திய அணியின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. அத்துடன் மிகப்பெரிய இலக்கை அடையவேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது.
அஜீன்க்யா ரகானே சிறப்பான தொடக்கத்தை அளித்தனர், இதே ஆட்டத்திறனை விராட் கோலி களமிறங்கி தொடர்ந்து வெளிபடுத்தி வந்தார். இந்த போட்டியில் விராட் கோலி 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரை விளாசினார். இதன்மூலம் இந்திய அணிக்கு தேவைப்பட்ட அதிரடி ரன் இலக்காக 190 வந்தது.
#7 ஆன்ரிவ் ரஸல் (20 பந்துகளில் 43 ரன்கள்), மும்பை, 2016
2016 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தது. ஆன்ரிவ் ரஸல் களமிறங்கும்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு 7 ஓவர்களுக்கு 76 ரன்கள் தேவைப்பட்டது. இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு இந்தியா வசம் சற்று மாறிக் கொண்டிருந்தது. டி20 சூப்பர் ஸ்டார்களை கொண்ட மேற்கிந்தியத் தீவுகளிடமிருந்து ஒரு மாயஜால பேட்டிங் அச்சமயத்தில் தேவைப்பட்டது.
ஆன்ரிவ் ரஸல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு தேவையான அதிரடி ஆட்டத்துடன் தன் கிரிக்கெட் வாழ்வில் சிறந்த பேட்டிங்கையும் வெளிபடுத்தினார். ரஸல் 4 பவுண்டரிகள் மற்றும் 3 மிகப்பெரிய சிகஸர்களை விளாசி மேற்கிந்தியத் தீவுகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். சொந்த மண்ணில் இந்திய அணியின் மற்றொரு உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்தது.
#6 கிறிஸ் கெய்ல் (66 பந்துகளில் 98 ரன்கள்), பார்படாஸ், 2010
பௌலர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வென்ற மகேந்திர சிங் தோனி மேற்கிந்தியத் தீவுகளை முதலில் பேட் செய்ய அழைத்தார். கெய்ல் மற்றும் சந்தர்பால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி அற்புதமான தொடக்கத்தை அளித்தனர். அத்துடன் இந்திய பௌலர்களுக்கு சாதகமாக ஏதும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர்.
அதிரடி டி20 பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் ஒரு கணிக்கமுடியாத பேட்டிங்கை வெளிபடுத்த ஆரம்பித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 150ற்கு குறையாமல் பார்த்துக் கொண்டார். இருப்பினும் இவரது பேட்டிங் கடைசி ஓவர் வரை தொடரவில்லை. இந்திய பௌலரின் மாயாஜால பௌலிங் மூலமாகவும், சரியான ஃபீல்டிங் மூலமாகவும் கெய்ல் ரன் அவுட் செய்யப்பட்டு சதமடிக்கும் வாய்ப்பினை இழந்தார். கடைசி 5-6 ஓவர்கள் வரை இவர் மட்டுமே சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி வந்தார். இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் 165 ரன்களை அடைந்தது. இப்போட்டியில் கெய்ல் 5 பவுண்டரிகள் 7 சிக்ஸர்களை விளாசித் தள்ளினார்.
மேலும் இந்த இலக்கே இந்திய அணிக்கு போதுமானது என மேற்கிந்தியத் தீவுகள் நிரூபிக்கும் வகையில் சிறப்பான பந்து வீச்சை வெளிபடுத்தி 14 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
#5 எவின் லிவிஸ் (49 பந்துகளில் 100 ரன்கள்), லாடர் ஹீல், 2016
அமெரிக்காவில் நடந்த முதல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இம்மைதானம் முழுவதும் பேட்டிங்கிற்கே சாதகமானதாகும். லிவிஸ் மற்றும் சார்லஸ் இனைந்து முதல் 8 ஓவரிலேயே 100 ரன்களை கடந்து அசத்தினர்.
லிவிஸ் தனது முதல் சர்வதேச டி20 சதத்தினை விளாசி மேற்கிந்தியத் தீவுகளின் ரன் இலக்கை 200ஆக மாற்றினார். இப்போட்டியில் லிவிஸ் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிறப்பான சிகஸர்களை விளாசினார். குறிப்பாக 11வது ஓவரில் ஸ்டுவர்ட் பின்னி வீசிய முதல் 5 பந்துகளில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை லிவிஸ் விளாசினார். அப்போட்டியை காண வந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமைந்தது.
#4 ரோகித் சர்மா (61 பந்துகளில் 111 ரன்கள்), லக்னோ, 2018
ரோகித் சர்மா தனது 4வது சர்வதேச டி20 சதத்தினை லக்னோ மைதானத்தில் நடந்த முதல் சர்வதேச போட்டியில் விளாசினார். டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து தனது அதிரடி பேட்டிங்கை அவரே தானாக வடிவமைத்தார். சிறந்த பேட்டிங் ஜாம்பவனாக ரோகித் சர்மா இப்போட்டியில் திகழ்ந்தார். எதிரணி கேப்டனுக்கு எத்திசையில் ஃபீல்டிங் செட் செய்வது என தெரியாமல் விழித்தார். இடையிடையே பல பவுண்டரிகளை விளாசி பௌலர்களிடம் தனது விக்கெட்டை விட்டுத் தராமல் ரோகித் சர்மா விளையாடினார். இம்மைதானத்தில் இவரை தவிர வேறு யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இப்போட்டியில் இவர் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசி சர்வதேச டி20யில் 4 சதத்தை விளாசிய முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். மேற்கிந்திய தீவுகள் ரோகித் சர்மாவின் ரன்களை கூட தொடாமல் சுருண்டது.
#3 லென்டல் சிம்மன்ஸ் (51 பந்துகளில் 82 ரன்கள்), மும்பை, 2016
2016ல் இந்தியாவிற்கு எதிரான அரையிறுதியில் 190 என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர் லெண்டல் சிம்மன்ஸ் அதிரடி சேஸிங்கைத் தொடங்கினார். அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 19 என்று இருந்த சமயத்தில், மீட்டெடுக்கும் பொறுப்பு சிம்மன்ஸ் வசம் வந்தது. சமீபத்திய கரேபியன் கிரிக்கெட் வரலாறு யாரும் அறிந்திராத மற்றும் குறைந்து மதிப்பிடப்பட்ட இன்னிங்ஸாக லெண்டல் சிம்மன்ஸின் இன்னிங்ஸ் உள்ளது. இவரது அடித்தளம் மூலமே மேற்கிந்தியத் தீவுகள் 2016 உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. சிம்மன்ஸ் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவத்தை இப்போட்டியில் வெளிபடுத்தினார். இவர் இப்போட்டியில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசி மேற்கிந்தியத் தீவுகளை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இருப்பினும் சிம்மன்ஸின் அதிர்ஷ்டம் காரணமாக இரு முறை நோ பாலில் அவுட் ஆனார். அத்துடன் ரவீந்திர ஜடேஜா இவரது கேட்சை பவண்டரி லைனில் நின்று பிடித்து தவறு செய்தார். சிம்மன்ஸ் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு ஆட்டத்தின் இறுதி வரை ஆன்ரிவ் ரஸலுடன் நின்று மேற்கிந்தியத் தீவுகளை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
#2 லோகேஷ் ராகுல் (51 பந்துகளில் 110 ரன்கள்), லாடார்ஹீல், 2016
இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3வது அதிகபட்ச சர்வதேச டி20 இலக்கான 246ஐ இந்தியாவிற்கு நிர்ணயித்தது. ரோகித் சர்மா அதிரடி தொடக்கத்தை இப்போட்டியில் அளித்தார். இருப்பினும் இந்திய அணி வெற்றிபெற அச்சமயத்தில் 90 பந்துகளுக்கு 200 ரன்கள் தேவைப்பட்ட போது லோகேஷ் ராகுல் களமிறங்கினார்.
அச்சமயத்தில் இந்திய அணிக்கு தேவைப்பட்ட அற்புதமான அதிரடி இன்னிங்க்ஸை ரோகித் சர்மா அளித்தார். கே.எல்.ராகுலின் இந்த அற்புதமான இன்னிங்ஸின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்து வருங்கால இந்திய நம்பிக்கை நட்சத்திரம் என்று பெயர்பெற்றார். இவர் 200 ஸ்ட்ரைக் ரேட்டை சரியாக கடைபிடித்து 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசித் தள்ளினார். பிராவோவின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் தோனியின் விக்கெட் வீழ்த்தப்பட்டதன் காரணத்தால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சேஸிங் வெற்றியை இந்திய அணி இழந்தது.
#1 எவின் லிவிஸ் (62 பந்துகளில் 125 ரன்கள்), ஜமைக்கா, 2017
இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி மூலம் 191 ரன்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை அடைய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பல அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்த போதிலும், எவின் லிவிஸ் தனிஒருவராக நின்று மேற்கிந்தியத் தீவுகளை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
வீசப்பட்ட பந்தை சரியாக கணித்து ஆடுகளத்தின் வெளியே பறக்கவிட்டார் எவின் லிவிஸ். இந்திய பௌலிங்கை தனது பேட்டிங் மூலம் சிதைத்து 6 பவுண்டரிகள் மற்றும் 12 சிகஸர்களை விளாசினார். இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் 19வது ஓவரிலேயே வெற்றி பெற்றது.