#8 விராட் கோலி (47 பந்துகளுக்கு 89 ரன்கள்), மும்பை, 2016
விராட் கோலி 2016ஆம் ஆண்டு மிகவும் அதிரடி ஆட்டத்திறன் கொண்டு விழங்கினார். 2016 டி20 உலகக்கோப்பையில் தனி ஒருவராக இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். இத்தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதன் அரையிறுதி போட்டியானது, 5 வருடங்களுக்கு முன்னர் 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றிய மைதானமான மும்பை வான்கடேவில் நடந்தது. இந்திய அணியின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. அத்துடன் மிகப்பெரிய இலக்கை அடையவேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது.
அஜீன்க்யா ரகானே சிறப்பான தொடக்கத்தை அளித்தனர், இதே ஆட்டத்திறனை விராட் கோலி களமிறங்கி தொடர்ந்து வெளிபடுத்தி வந்தார். இந்த போட்டியில் விராட் கோலி 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரை விளாசினார். இதன்மூலம் இந்திய அணிக்கு தேவைப்பட்ட அதிரடி ரன் இலக்காக 190 வந்தது.
#7 ஆன்ரிவ் ரஸல் (20 பந்துகளில் 43 ரன்கள்), மும்பை, 2016
2016 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தது. ஆன்ரிவ் ரஸல் களமிறங்கும்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு 7 ஓவர்களுக்கு 76 ரன்கள் தேவைப்பட்டது. இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு இந்தியா வசம் சற்று மாறிக் கொண்டிருந்தது. டி20 சூப்பர் ஸ்டார்களை கொண்ட மேற்கிந்தியத் தீவுகளிடமிருந்து ஒரு மாயஜால பேட்டிங் அச்சமயத்தில் தேவைப்பட்டது.
ஆன்ரிவ் ரஸல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு தேவையான அதிரடி ஆட்டத்துடன் தன் கிரிக்கெட் வாழ்வில் சிறந்த பேட்டிங்கையும் வெளிபடுத்தினார். ரஸல் 4 பவுண்டரிகள் மற்றும் 3 மிகப்பெரிய சிகஸர்களை விளாசி மேற்கிந்தியத் தீவுகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். சொந்த மண்ணில் இந்திய அணியின் மற்றொரு உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்தது.