#6 கிறிஸ் கெய்ல் (66 பந்துகளில் 98 ரன்கள்), பார்படாஸ், 2010
பௌலர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வென்ற மகேந்திர சிங் தோனி மேற்கிந்தியத் தீவுகளை முதலில் பேட் செய்ய அழைத்தார். கெய்ல் மற்றும் சந்தர்பால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி அற்புதமான தொடக்கத்தை அளித்தனர். அத்துடன் இந்திய பௌலர்களுக்கு சாதகமாக ஏதும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர்.
அதிரடி டி20 பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் ஒரு கணிக்கமுடியாத பேட்டிங்கை வெளிபடுத்த ஆரம்பித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 150ற்கு குறையாமல் பார்த்துக் கொண்டார். இருப்பினும் இவரது பேட்டிங் கடைசி ஓவர் வரை தொடரவில்லை. இந்திய பௌலரின் மாயாஜால பௌலிங் மூலமாகவும், சரியான ஃபீல்டிங் மூலமாகவும் கெய்ல் ரன் அவுட் செய்யப்பட்டு சதமடிக்கும் வாய்ப்பினை இழந்தார். கடைசி 5-6 ஓவர்கள் வரை இவர் மட்டுமே சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி வந்தார். இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் 165 ரன்களை அடைந்தது. இப்போட்டியில் கெய்ல் 5 பவுண்டரிகள் 7 சிக்ஸர்களை விளாசித் தள்ளினார்.
மேலும் இந்த இலக்கே இந்திய அணிக்கு போதுமானது என மேற்கிந்தியத் தீவுகள் நிரூபிக்கும் வகையில் சிறப்பான பந்து வீச்சை வெளிபடுத்தி 14 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
#5 எவின் லிவிஸ் (49 பந்துகளில் 100 ரன்கள்), லாடர் ஹீல், 2016
அமெரிக்காவில் நடந்த முதல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இம்மைதானம் முழுவதும் பேட்டிங்கிற்கே சாதகமானதாகும். லிவிஸ் மற்றும் சார்லஸ் இனைந்து முதல் 8 ஓவரிலேயே 100 ரன்களை கடந்து அசத்தினர்.
லிவிஸ் தனது முதல் சர்வதேச டி20 சதத்தினை விளாசி மேற்கிந்தியத் தீவுகளின் ரன் இலக்கை 200ஆக மாற்றினார். இப்போட்டியில் லிவிஸ் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிறப்பான சிகஸர்களை விளாசினார். குறிப்பாக 11வது ஓவரில் ஸ்டுவர்ட் பின்னி வீசிய முதல் 5 பந்துகளில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை லிவிஸ் விளாசினார். அப்போட்டியை காண வந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமைந்தது.