#4 ரோகித் சர்மா (61 பந்துகளில் 111 ரன்கள்), லக்னோ, 2018
ரோகித் சர்மா தனது 4வது சர்வதேச டி20 சதத்தினை லக்னோ மைதானத்தில் நடந்த முதல் சர்வதேச போட்டியில் விளாசினார். டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து தனது அதிரடி பேட்டிங்கை அவரே தானாக வடிவமைத்தார். சிறந்த பேட்டிங் ஜாம்பவனாக ரோகித் சர்மா இப்போட்டியில் திகழ்ந்தார். எதிரணி கேப்டனுக்கு எத்திசையில் ஃபீல்டிங் செட் செய்வது என தெரியாமல் விழித்தார். இடையிடையே பல பவுண்டரிகளை விளாசி பௌலர்களிடம் தனது விக்கெட்டை விட்டுத் தராமல் ரோகித் சர்மா விளையாடினார். இம்மைதானத்தில் இவரை தவிர வேறு யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இப்போட்டியில் இவர் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசி சர்வதேச டி20யில் 4 சதத்தை விளாசிய முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். மேற்கிந்திய தீவுகள் ரோகித் சர்மாவின் ரன்களை கூட தொடாமல் சுருண்டது.
#3 லென்டல் சிம்மன்ஸ் (51 பந்துகளில் 82 ரன்கள்), மும்பை, 2016
2016ல் இந்தியாவிற்கு எதிரான அரையிறுதியில் 190 என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர் லெண்டல் சிம்மன்ஸ் அதிரடி சேஸிங்கைத் தொடங்கினார். அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 19 என்று இருந்த சமயத்தில், மீட்டெடுக்கும் பொறுப்பு சிம்மன்ஸ் வசம் வந்தது. சமீபத்திய கரேபியன் கிரிக்கெட் வரலாறு யாரும் அறிந்திராத மற்றும் குறைந்து மதிப்பிடப்பட்ட இன்னிங்ஸாக லெண்டல் சிம்மன்ஸின் இன்னிங்ஸ் உள்ளது. இவரது அடித்தளம் மூலமே மேற்கிந்தியத் தீவுகள் 2016 உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. சிம்மன்ஸ் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவத்தை இப்போட்டியில் வெளிபடுத்தினார். இவர் இப்போட்டியில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசி மேற்கிந்தியத் தீவுகளை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இருப்பினும் சிம்மன்ஸின் அதிர்ஷ்டம் காரணமாக இரு முறை நோ பாலில் அவுட் ஆனார். அத்துடன் ரவீந்திர ஜடேஜா இவரது கேட்சை பவண்டரி லைனில் நின்று பிடித்து தவறு செய்தார். சிம்மன்ஸ் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு ஆட்டத்தின் இறுதி வரை ஆன்ரிவ் ரஸலுடன் நின்று மேற்கிந்தியத் தீவுகளை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.