ரோகித் சர்மா இந்நூற்றாண்டின் பாதியில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக வலம் வருகிறார். கிட்டத்தட்ட 8000 ரன்கள், மற்றும் 48ற்கும் மேலான சராசரியை ரோகித் தன் வசம் வைத்துள்ளார். சமீப காலமாக ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக ரோகித் சர்மா உள்ளார். தற்போதைய தலைமுறையில் ரோகித் சர்மாவை தவிர 4 பேட்ஸ்மேன்கள் இரட்டை சதம் விளாசியுள்ளனர். ரோகித் சர்மா மட்டும் 3 இரட்டை சதத்தினை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மாவின் ஆட்டநுணுக்கம் அவரை மேன்மேலும் பல உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இவர் ஆரம்பத்தில் மிகவும் பொறுமையாகவும், பின்னர் அதிரடியாகவும் விளையாடும் திறமை கொண்டவர். இவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணிக்கு கடும் நெருக்கடியை அளிப்பதில் வல்லவர்.
இந்திய அணி தனது முதல் 2019 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தை நாம் காண முடிந்தது. மிகவும் பொறுப்பான ஆட்டத்தை கையாண்டு இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இப்போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் ரோகித் சர்மா ஆட்டத்தை வழிநடத்தி சென்றார்.
ரோகித் சர்மா இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒரு முன்னணி வீரராக உள்ளார். நாம் இங்கு ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் சிறந்த 10 இன்னிங்ஸ்களை பற்றி காண்போம்.
#10 119 பந்துகளில் 111* ரன்கள் vs பாகிஸ்தான், துபாய், 2018
ஆசியக் கோப்பையில் விராட் கோலி பங்கேற்காத காரணத்தால் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்தினார். சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. குழு சுற்றில் இந்தியாவிற்கு பாகிஸ்தான் கண்டிப்பாக கடும் நெருக்கடியை அளிக்கும் என அனைவரும் நினைத்திருந்தனர்.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 238 என்ற இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்தது. ஆடுகளம் சேஸிங்கிற்கு சாதகம் அளிக்காமலும், சற்று வறண்ட ஆடுகளமாகவும் இருந்தது. அத்துடன் முகமது அமீர், ஷதாப் கான், ஹாசன் அலி போன்ற வலிமையான வேகப்பந்து வீச்சாளர்களை தன் வசம் வைத்திருந்தது பாகிஸ்தான்.
ஆனால் ரோகித் சர்மா பாகிஸ்தானை இந்திய இன்னிங்ஸிற்குள் சிறிது கூட வர முடியாமல் தடுத்து நிறுத்தினார். இவர் மொத்தமாக 119 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 111 ரன்களை குவித்து இறுதி போட்டிக்கு நேரடியாக இந்திய அணியை அழைத்துச் சென்றார். அத்துடன் இந்திய அணி 10 ஓவர்கள் மீதமிருந்த நிலையிலேயே 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சரியாக வீசப்பட்ட பந்தை பயன்படுத்தி துவம்சம் செய்தார் ரோகித். சற்று நெருக்கடி அளிக்கும் விதமாக வீசப்பட்ட பந்தை தடுத்து நிறுத்தி விளையாடினார். இப்போட்டியில் தவறான ஷாட் தேர்வை ரோகித் தேர்வு செய்யவில்லை. இவர் வழிநடத்திய இந்திய அணி 2018 ஆசிய கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் அத்தொடரில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் 105 சராசரியுடன் முதலிடத்தை பிடித்தார்.