ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் சிறந்த 10 இன்னிங்ஸ்கள்

South Africa v India - ICC Cricket World Cup 2019
South Africa v India - ICC Cricket World Cup 2019

#5 123 பந்துகளில் 141 ரன்கள் vs ஆஸ்திரேலியா, ஜெய்ப்பூர், 2013

Rohit Sharma had a top run in 2017
Rohit Sharma had a top run in 2017

ஆஸ்திரேலிய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 360 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் 176 ரன்களை முதல் விக்கெட்டிற்கு குவித்தனர். பின்னர் களமிறங்கிய விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் இனைந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

ரோகித் சர்மா தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை சிறந்த தொடக்க ஆட்டக்காரராக உலகிற்கு அறிவித்தார். இவர் இப்போட்டியில் 17 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசி 6 ஓவர்கள் மீதமிருந்த நிலையிலேயே இந்திய அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

இந்த சிறப்பான இன்னிங்ஸ் தான் ரோகித் சர்மா தற்போது சிறந்த தொடக்க ஆட்டக்காரராக வலம் வர மிகுந்த துனை புரிந்தது.


#4 158 பந்துகளில் 208 ரன்கள் vs ஆஸ்திரேலியா, பெங்களூரு, 2013

Rohit celebrates
Rohit celebrates

சற்று தடுமாற்றத்தை அளிக்கும் சின்னசாமி மைதானத்தில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் செய்தது. இப்போட்டி அதிக நெருக்கடி அளிக்கும் போட்டியாக இரு அணிகளுக்கும் இருந்தது. ஏனெனில் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது. இப்போட்டியில் இந்தியா வென்றால் முதல் முறையாக 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வென்ற அணி என்ற சாதனை பெரும்‌.

வழக்கமாக ரோகித் தனது அரைசதத்தை 70 பந்துகளில் விளாசினார். அடுத்த 8 ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கி சதம் குவித்தார்.

அதன்பின் அடுத்த 6 ஓவர்களில் ஒருநாள் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தினை விளாசினார். மெக்கே வீசிய ஓவரை சிறப்பாக பயன்படுத்தி இரட்டை சதத்தில் கடைசி 100 ரன்தளை 42 பந்துகளில் அடைந்து சாதனை படைத்தார்.

இறுதியாக ரோகித் சர்மா 158 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகள் மற்றும் 16 சிகஸர்களுடன் 208 ரன்களை எடுத்தார். இதன் மூலம் இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Quick Links