ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் சிறந்த 10 இன்னிங்ஸ்கள்

South Africa v India - ICC Cricket World Cup 2019
South Africa v India - ICC Cricket World Cup 2019

#3 126 பந்துகளில் 136 ரன்கள் vs வங்கதேசம், மெல்போர்ன், 2015

India v Bangladesh: Quarter Final - 2015 ICC Cricket World Cup
India v Bangladesh: Quarter Final - 2015 ICC Cricket World Cup

இந்திய அணி 2015 உலகக் கோப்பை தொடரில் காலிறுதிக்கு தகுதி பெற்று வங்கதேசத்தை எதிர்த்து மோதியது. ஆரம்பத்தில் இந்திய அணி 28 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மாவுடன் இனைந்து அடுத்த 15 ஓவர்களில் 122 ரன்கள் பார்டனர் ஷீப் செய்து விளையாடினார்.

இக்கட்டான சூழ்நிலையில் ரோகித் சர்மா தனது 7வது ஒருநாள் சதத்தினை விளாசினார். வங்கதேசத்தின் பந்துவீச்சிற்கு அந்த ஆடுகளம் நன்றாக உதவியது. மிகவும் சிறந்த ஆட்டத்தை வங்கதேசம் வெளிபடுத்தி இந்திய அணியை ஒவ்வொரு ரன் எடுக்கவும் கஷ்டப்பட செய்தது. யாரவது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ரன்களை உயர்த்த தேவைப்பட்டனர். அப்போது ரோகித்தின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்தியா 302 ரன்களை வங்கதேசத்திற்கு இலக்காக நிர்ணயிக்க உதவியது. வங்கதேசத்தின் சொதப்பலான பேட்டிங் மூலம் இந்தியா வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.


#2 144 பந்துகளில் 122* ரன்கள் vs தென்னாப்பிரிக்கா, சவுத்தாம்டன், 2019

South Africa v India - ICC Cricket World Cup 2019
South Africa v India - ICC Cricket World Cup 2019

சிறந்த அதிரடி ஹிட்டிங், எவ்வித அனல் பறக்கும் பேட்டிங்கும் இன்றி ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்வில் வந்த மிகவும் மெதுவான சதம் இதுவாகும். இருப்பினும் இவர் விளையாடிய சிறந்த ஆட்டங்களுள் இதுவும் ஒன்று. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ரபாடா மற்றும் கிறிஸ் மோரிஸ் அதிரடி தொடக்க பௌலிங்கை வெளிபடுத்தினர்‌. இம்மைதானம் இரண்டாவதாக பேட் செய்பவர்களுக்கு ஆரம்பத்தில் சாதகமாக இருக்காது. இதன் விளைவாக ஷீகார் தவான் மற்றும் விராட் கோலி ஆரம்பத்திலே தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இந்திய அணிக்கே ஒரு பொறுப்பான ஆட்டத்ம் தேவைப்பட்டது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் மகேந்திர சிங் தோனியுடன் பார்ட்னர் ஷிப் செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது இவரது கிரிக்கெட் வாழ்வில் மிகச்சிறந்த பொறுப்பான ஆட்டமாகும்‌. உலகக் கோப்பையின் தொடக்க போட்டியிலேயே தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்தார்.

இப்போட்டியில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் மட்டுமே விளாசினார். இதன் மூலமே ரோகித் எவ்வளவு பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது நமக்கு தெரியும். இந்த பொறுப்பான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்க நிர்ணயித்த இலக்கை அடைந்து வெற்றி பாதைக்கு இந்திய அணியை அழைத்துச் சென்றார் ரோகித் சர்மா.

Quick Links

App download animated image Get the free App now