ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் சிறந்த 10 இன்னிங்ஸ்கள்

South Africa v India - ICC Cricket World Cup 2019
South Africa v India - ICC Cricket World Cup 2019

#1 173 பந்துகளில் 264 ரன்கள் vs இலங்கை, கொல்கத்தா, 2014

Rohit Sharma 264 v Sri Lanka
Rohit Sharma 264 v Sri Lanka

ரோகித் சர்மா தனது அதிரடி பேட்டிங் மூலம் ஒரு சிறப்பான சாதனையை படைத்துள்ளார். இவரது அசத்தலான பேட்டிங் மூலம் இலங்கை பௌலர்களின் பந்துவீச்சை சேதப்படுத்தினார். இது இவரது கிரிக்கெட் வாழ்வில் மிகச்சிறந்த கிரிக்கெட் இன்னிங்ஸாகும்.

ரோகித் சர்மா மிகவும் மெதுவாக விளையாடி 72 பந்துகளில் 50 ரன்களை குவித்திருந்தார்‌. இதற்கு பின் இப்போட்டியில் நடந்ததே வேறு. அவரது முழு ருத்ரதாண்டவ ஆட்டத்திறன் முழுவதும் இப்போட்டியில் வெளிபட்டு சாதனை பக்கத்தின் முதன்மை பக்கத்தில் இடம்பெறும் அளவிற்கு இவரது ஆட்டத்திறன் இருந்தது.

முதல் தர போட்டியில் இரண்டாவது அதிக ரன்களையும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆல்-டைம் அதிக ரன்களையும் இப்போட்டியில் குவித்தார்‌. இப்போட்டியின் இறுதி பந்தில் ரோகித் சர்மா தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அதற்கு முன்பாக 33 பவுண்டரிகள் மற்றும் 9 சிகஸர்களை விளாசி 264 ரன்களை தனி ஒருவராக விளாசினார்‌. ஒருநாள் கிரிக்கெட்டில் தனி ஒருவராக 33 பவுண்டரிகளை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 250ற்கும் மேலான ரன்னை தனி ஒருவராக விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையையும் இப்போட்டியில் படைத்தார்.

இந்த சாதனை இனிவரும் காலங்களில் முறியடிக்கப்படுமா என்றால் கண்டிப்பாக மிகவும் கஷ்டமான நிகழ்வாகும். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு சிறந்த அதிரடி மன்னனாக வலம் வர இந்த இன்னிங்ஸ் ரோகித் சர்மாவிற்கு மிகவும் முக்கியமாக அமைந்தது. இந்த சாதனையை கண்டு முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாயடைத்து போனார்கள்.

Quick Links

App download animated image Get the free App now