உலக கோப்பை தொடரில், ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் விளாசிய டாப் – 2 பேட்ஸ்மேன்கள்!!

Martin Guptill And Chris Gayle
Martin Guptill And Chris Gayle

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலகக் கோப்பை தொடரானது, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடத்தப்படும். கடைசியாக உலக கோப்பை தொடரானது, கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு உலக கோப்பை தொடரானது, வருகின்ற மே மாதத்தின் இறுதியில் இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது. எனவே அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த உலக கோப்பை தொடரில் ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.

#1) மார்டின் கப்தில் ( 237 ரன்கள் )

Martin Guptill
Martin Guptill

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், நியூசிலாந்து அணியை சேர்ந்த மார்ட்டின் கப்தில். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலில் இரட்டை சதம் விளாசிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில், மேற்கிந்திய தீவுகள் அணியும், நியூசிலாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிக்சர் மழை பொழிந்த மார்ட்டின் கப்தில், 163 பந்துகளில் 237 ரன்கள் விளாசினார்.

இதில் 24 பவுண்டரிகளும், 11 சிக்சர்களும் அடங்கும். இவரது அதிரடியால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 393 ரன்கள் குவித்தது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்த கடினமான இலக்கை சேஸ் செய்ய முடியாமல், வெறும் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டது. எனவே நியூசிலாந்து அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

#2) கிறிஸ் கெயில் ( 215 ரன்கள் )

Chris Gayle
Chris Gayle

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த, கிறிஸ் கெயில். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. நின்ற இடத்தில் இருந்து எளிதாக சிக்சர் அடிக்க கூடியதில் வல்லவர். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், மேற்கிந்திய தீவுகள் அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதியது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வெளுத்து வாங்கிய கிறிஸ் கெயில், 147 பந்துகளில் 215 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரிகளும், 16 சிக்சர்களும் அடங்கும். இவரது அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களின் முடிவில் 372 ரன்கள் குவித்தது. ஆனால் ஜிம்பாப்வே அணி இந்த கடினமான இலக்கை செஸ் செய்ய முடியாமல், வெறும் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி விட்டது. எனவே மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Quick Links

Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications