மற்ற விளையாட்டை ஒப்பிடுகையில் கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளத்தின் தன்மை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மைதானத்தின் தன்மை மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை அனைத்தும் கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டியின் முடிவையும் தீர்மானிக்ககிறது.
ஒவ்வொரு நாட்டிலும் தட்பவெப்பம் மற்றும் ஆடுகளதன்மை பேட்டிங் மற்றும் பௌலிங்கில் வெவ்வேறு மாதிரியாக உள்ளது. இந்திய அணிக்கு பொருத்த வரை ஆசிய கண்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும் , வெளிநாட்டு கண்டங்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும் இருக்கிறது.
இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஆடுகளங்கள் மெதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்குள் ஏற்ற ஆடுகளமாகும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஆடுகளங்கள் பவுண்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.
கிரிக்கெட் வீரர்கள் அனைத்து இடங்களிலும் விளையாடும் வகையில் ஆட்டத்திறனை வளர்த்து வைத்திருப்பர். ஒவ்வொரு கிரிக்கெட் அணியும் தங்களது சொந்த மண்ணிலும் சரி வெளிநாட்டு மண்ணிலும் சரி பேட்டிங் நுணுக்கங்கள் மற்றும் பௌலிங் நுட்பங்களை சில வீரர்கள் சரியாக கணித்து வைத்திருப்பர்.
இவ்வாறு அனைத்து இடங்களிலும் தங்களது ஆட்டத்தை ஒரே மாதிரியாக வெளிப்படுத்தும் திறைமையுள்ள வீரர்கள் மிகவும் குறைவாகவே இருப்பர். நாம் இங்கு அனைத்து இடங்களிலும் தங்களது ஆட்டத்தை சரியாக வெளிப்படுத்தக்கூடிய தற்போதைய 3 வீரர்களை பற்றி காண்போம்.
#1.விராட் கோலி
விராட் கோலி தற்போதைய பேட்ஸ்மேன்களில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். டெஸ்ட் மற்றும் ஓடிஐ பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை வகிக்கிறார். அத்துடன் உலகின் அனைத்து இடங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறைமையுள்ளவர்.
டெஸ்ட் போட்டிகளில் வங்கதேசத்தை தவிர்த்து அனைத்து நாடுகளிலும் சதம் விளாசியுள்ளார். ஏனெனில் வங்கதேசத்தில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அந்நிய மண்ணில் இவரது முதல் சதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அடிலெய்டில் வந்தது. அந்நிய மண்ணில் இவரது சராசரி 46.77 ஆகவும் இந்திய மண்ணில் 64.69ஆகவும் உள்ளது.
கோலியின் கிரிக்கெட் வாழ்வில் மிக மோசமான தொடர் என்றால் அது 2014 லில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான தொடரே ஆகும். இவர் 10 இன்னிங்ஸில் விளையாடி 134 ரன்களை மட்டுமே அடித்தார். ஆனால் கடந்த அண்டில் நடைபெற்ற இங்கிலாந்து எதிரான தொடரில் இங்கிலாந்து மண்ணில் 2 சதங்களுடன் 593 ரன்களை விளாசினார். முற்கால சிறந்த இந்திய பேட்ஸ்மேன்களின் தனித்திறமை இவரிடம் உள்ளது. உலக கிரிக்கெட்டில் இவரது பேட்டிங்கை கண்டு அஞ்சாத பந்துவீச்சாளர்களே இல்லை என்றே சொல்லலாம். முற்கால இந்திய பேட்ஸ்மேன்களின் சாதனைகள் அனைத்தையும் தனது இளம் வயதிலேயே விராட் கோலி முறியடித்து விட்டார். தற்போது புது புது சாதனைகளை படைத்து வருகிறார்.
சுழற்பந்து வீச்சிற்கு சாதகமான இந்திய மண்ணிலும் , ஸ்விங் பௌலிங்கிற்கு சாதகமான இங்கிலாந்து மண்ணிலும் , பவுண்ஸிற்கு சாதகமான ஆஸ்திரேலியாவிலும் , வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான தென்னாப்பிரிக்கா ஆகிய அனைத்து நாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர் விராட் கோலி..
#2.ஜேம்ஸ் ஆன்டர்சன்
வெவ்வேறு நாடுகளின் மண்ணில் இங்கிலாந்தின் வெற்றிக்கு முழு காரணமாக இருப்பவர் இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆன்டர்சன். ஸ்விங் பௌலிங்கின் அரசன் என்று அழைக்கப்படும் இவர் இங்கிலாந்து சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26.93 சராசரி மற்றும் 56.20 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 575 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் பௌலிங்கில் இவர்தான் ராஜா. சொந்த மண்ணில் மொத்தமாக 368 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது ஸ்விங் பௌலிங் சொந்த மண்ணில் சிறப்பாக எடுபடும் .
அந்நிய மண்ணில் இவரது பௌலிங் மிகச் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு மண்ணில் மொத்தமாக 207 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2010 ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வென்றது . அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் ஜேம்ஸ் ஆன்டர்சன். 2012 இந்தியாவிற்கு எதிரான தொடரை வெல்ல முழு காரணமாக இருந்தவர் ஜேம்ஸ் ஆன்டர்சன் ஆவார் .
இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை தனது மாயாஜால ஸ்விங்கால் எளிதாக வீழ்த்தி 28 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் இங்கிலாந்து தொடரை வெல்ல காரணமாக இருந்தார் ஆன்டர்சன். ஜேம்ஸ் ஆன்டர்சன் பௌலிங் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போது பெரும்பாலும் ஆன்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார்.
#3.ஸ்டீவன் ஸ்மித்
தற்போதைய நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் திகழ்கிறார். இவரது பேட்டிங் அனைத்து இடங்களிலும் ரன்களை குவிக்கும் வகையில் சிறப்பாக இருக்கும்.
ஒவ்வொரு மண்ணிலும் இவரது பேட்டிங் வெவ்வேறு வகையில் இருக்கும். இவரது முதல் சதம் இங்கிலாந்து மைதானத்தில் வந்தது. ஆன்டர்சன் மற்றும் பிராடின் ஸ்விங் பந்துவீச்சை சிறப்பான முறையில் எதிர்கொண்டு விளையாடுபவர் ஸ்டீவன் ஸ்மித். வேகப்பந்து வீச்சு , சுழற்பந்து வீச்சு என இரண்டையும் சரியாக கணித்து விளையாடும் திறமை இவருக்கு உண்டு .
ஆஸ்திரேலிய மண்ணில் இவரது சராசரி 77.25ஆகவும் , அந்நிய மண்ணில் 50.97ஆகவும் உள்ளது. 2017ல் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான தொடரில் இவரது பேட்டிங் அதிரடியாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகன இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பௌத்தர்களுக்கு மிகுந்த நெருக்கடியை அளித்தனர். புனேவில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஒரு போட்டியில் இவரது பேட்டிங் மிகவும் அதிரடியாக இருந்தது. இந்திய மண்ணில் வெளிநாட்டு வீரர் ஒருவரின் சிறப்பான பேட்டிங் இதுவாகும். முற்கால ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை விட இவரது பேட்டிங் திறமை தனிச்சிறப்பான முறையில் உள்ளது. பசுமையான ஆடுகளாமாக இருந்தாலும் சரி , பழுப்பு நிற மண் ஆடுகளமாக இருந்தாலும் இவரது பேட்டிங் திறமை அற்புதமான முறையில் உள்ளது.