#2.ஜேம்ஸ் ஆன்டர்சன்
வெவ்வேறு நாடுகளின் மண்ணில் இங்கிலாந்தின் வெற்றிக்கு முழு காரணமாக இருப்பவர் இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆன்டர்சன். ஸ்விங் பௌலிங்கின் அரசன் என்று அழைக்கப்படும் இவர் இங்கிலாந்து சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26.93 சராசரி மற்றும் 56.20 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 575 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் பௌலிங்கில் இவர்தான் ராஜா. சொந்த மண்ணில் மொத்தமாக 368 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது ஸ்விங் பௌலிங் சொந்த மண்ணில் சிறப்பாக எடுபடும் .
அந்நிய மண்ணில் இவரது பௌலிங் மிகச் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு மண்ணில் மொத்தமாக 207 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2010 ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வென்றது . அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் ஜேம்ஸ் ஆன்டர்சன். 2012 இந்தியாவிற்கு எதிரான தொடரை வெல்ல முழு காரணமாக இருந்தவர் ஜேம்ஸ் ஆன்டர்சன் ஆவார் .
இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை தனது மாயாஜால ஸ்விங்கால் எளிதாக வீழ்த்தி 28 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் இங்கிலாந்து தொடரை வெல்ல காரணமாக இருந்தார் ஆன்டர்சன். ஜேம்ஸ் ஆன்டர்சன் பௌலிங் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போது பெரும்பாலும் ஆன்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார்.