சில பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவர். இன்னும் சிலர் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒருசில லெஜன்ட்ரி பேட்ஸ்மேன்கள் மட்டுமே மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ஒரே மாதிரியான ஆட்டத்தை சீராக வெளிப்படுத்தி சிறப்பான பேட்ஸ்மேன்ளாக திகழ்வார்கள்.
1971 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடப்பட்டு வந்ததால் கிரிக்கெட் மீது ரசிகர்களுக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. அதனால் இந்த விளையாட்டானது வளர்ச்சி பாதைக்கு செல்லவில்லை. ஒருநாள் கிரிக்கெட் தோன்றிய பின் அதிகப்படியான நாடுகள் கிரிக்கெட் விளையாட முன்வந்தனர். அத்துடன் பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதேசமயம் ஒரு குறுகிய போட்டியாக ஒருநாள் தொடர் இருப்பதனால் சில பேட்ஸ்மேன்களால் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர். இதனால் அத்தகைய வீரர்கள் அணியிலிருந்து வெளியேற்றப் படுகின்றனர்.
வருடம் முழுவதும் ஒரு வீரரால் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சீரான ஆட்டத்தை வெளிபடுத்துவது என்பது மிகவும் கடினமான நிகழ்வாக உள்ளது. ஒரு சில வீரர்கள் அபூர்வமாக ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரும் பங்களிப்பை தங்கள் நாட்டிற்காக அளித்து வருகின்றனர்.
டி20 கிரிக்கெட் சர்வதேச தொடராக மாற்றப்பட்ட போது கிரிக்கெட் வீரர்களுக்கு மேன்மேலும் வேலைப்பளூ அதிகரித்தது. ஆனால் இந்த டி20 மூலம் பல வீரர்களை அடையாளம் காண உதவியது. அத்துடன் ஒரு பேட்ஸ்மேனால் சிற்ப்பாக ரன் குவிப்பில் ஈடுபட முடிந்தது. இதனால் பத்தாண்டுகளில் ஒரு பேட்ஸ்மேன் அதிக ரன் குவிப்பது ஆச்சரியப்படுவதிர்கில்லை. மேலும் பத்து ஆண்டுகளில் அதிக ரன்களை குவித்துள்ள டாப் 8 பேட்ஸ்மேன்கள் கடந்த இரு பத்தாண்டுகளில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் விராட் கோலி 10 ஆண்டுகளில் 20,000ற்கும் மேற்பட்ட சர்வதேச ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.
நாம் இங்கு 10 ஆண்டுகளில் அதிக சர்வதேச ரன்களை குவித்துள்ள 3 பேட்ஸ்மேன்களைப் பற்றி காண்போம்.
#4 ஜாக் காலீஸ் - 2000 ஆம் ஆண்டு முதல் 16,777 ரன்கள்
ஜாக் காலீஸ் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர். தென்னாப்பிரிக்கா ஆல்-ரவுண்டரான இவர் மிடில் ஆர்டரில் களமிறங்கி போட்டியை தன்வசம் மாற்றும் திறன் உடையவர். மிகப்பெரிய ஹீட்டிங் ஷாட்களை பெரிதும் விரும்பாத காலீஸ் அதிக ரன்களை ரன் ஓட்டத்தின் மூலமே எடுத்து எதிரணிக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்துவார்.
காலீஸின் நிலையான பேட்டிங் மற்றும் சீரான ஆட்டம் மூலமாக தென்னாப்பிரிக்கா அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தார். இவரது சீரான ஆட்டத்தின் மூலம் 2000 ஆம் ஆண்டு முதல் 2010 வரலயிலான காலங்களில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 16,777 ரன்களை விளாசித் தள்ளினார்.
டெஸ்ட், டி20, ஓடிஐ என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 52-க்கும் அதிகமான சராசரியுடன் மொத்தமாக 38 சதங்கள் மற்றும் 102 அரைசதங்களை விளாசியுள்ளார். இவர் தனது தாய் நாடான தென்னாப்பிரிக்கா, ஆப்பிரிக்கா XI, உலக XI ஆகிய அணிகளில் விளையாடி பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய உச்சியை அடைந்துள்ளார். இவரது பேட்டிங்கை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள்.
#2 ரிக்கி பாண்டிங் - 2000ஆம் ஆண்டு முதல் 18,962 ரன்கள்
கிரிக்கெட் வரலாற்றில் ரிக்கி பாண்டிங் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக திகழ்ந்துள்ளார்.
முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான இவருக்கு 2000ஆம் ஆண்டு முதல் சிறப்பான ஆண்டாக அமைந்தது. அணிக்கும் சரி அவருக்கும் சரி சிறந்த காலமாக இந்த பத்து ஆண்டுகள் இருந்தது. 2003 மற்றும் 2007 உலகக்கோப்பை தொடரில் ஒரு தோல்வியை கூட தழுவாமல் சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
மேலும் ஒரு பேட்ஸ்மேனாக ரிக்கி பாண்டிங்கிற்கு சிறந்த காலமாக 2000 ஆண்டு முதல் திகழ்ந்தது. தனி ஒருவராக ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் வல்லவராக இருந்தவர் ரிக்கி பாண்டிங். இவரது கிரிக்கெட் வாழ்வில் சிறப்பான அதிரடி ஆட்டம் 2003 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் வந்தது. இந்தப் போட்டியில் 140 ரன்களை ரிக்கி பாண்டிங் விளாசினார்.
2000 ஆம் ஆண்டு முதல் 2009 வரை 55 சதங்கள் மற்றும் 98 அரைசதங்களை மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ரக்கி பாண்டிங் அடித்துள்ளார். இந்த பத்து ஆண்டுகளில் இவர் 50 சராசரியுடன் 18,962 ரன்களை குவித்துள்ளார்.
#1 விராட் கோலி - 2010 முதல் தற்போது வரை 20,018 ரன்கள்
விராட் கோலி தற்காலத்தின் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். தற்கால தலைமுறையின் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி உள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலி ஒவ்வொரு தொடரிலும் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி நிறுபித்துள்ளார். எதிரணி பௌலர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்வதில் கெட்டிக்காரர் விராட் கோலி. இவரது பேட்டிங் சராசரி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 50+ இருப்பதை காணும் போதே, விராட் கோலியின் சீரான ஆட்டத்திறனைப் பற்றி நமக்கு தெரிய வருகிறது.
விராட் கோலி சமீபத்தில் 10 வருடங்களில் 20,000ற்கும் மேலான சர்வதேச ரன்களை குவித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். இந்த பத்து ஆண்டுகளில் விராட் கோலி 57 சராசரிகுக்கும் அதிகமாக 67 சதங்கள் மற்றும் 92 அரைசதங்களை விளாசியுள்ளார்.
மேலும் இன்னும் 2019ல் நிறைய கிரிக்கெட் உள்ள நிலையில், விராட் கோலி மேலும் ரன்களை உயர்த்தி எவராலும் முறியடிக்காத வகையில் உச்சத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
.