ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. பல திறமையான இளம் வீரர்களை வெளி உலகத்திற்கு காட்டுவதற்கு உதவுகிறது இந்த ஐபிஎல் தொடர்.
பொதுவாக ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து வீரர்களும் சிக்ஸர் மழை பொழிவார்கள். எனவேதான் ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளையும் காண ரசிகர்கள் ஆவலுடன் மைதானத்திற்கு வருகின்றனர். இவ்வாறு ஒரே ஓவரில் 30 ரன்களுக்கு மேல் அடித்து அதிரடி காட்டிய பேட்ஸ்மேன்களை பற்றி இங்கு காண்போம்.
#1) சுரேஷ் ரெய்னா ( 33 ரன்கள் )
ஐபிஎல் தொடரின் நம்பர்-1 அணியாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ரெய்னா. மைதானத்திற்கு வந்தவுடன் தனது அதிரடியை காட்ட ஆரம்பித்து விடுவார் இவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல வெற்றிகளில் இவரது சிறப்பான விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் பஞ்சாப் அணியின் பவுலர் அவானா, சுரேஷ் ரெய்னாவிற்கு பந்து வீசினார். அவரது ஓவரை வெளுத்து வாங்கிய சுரேஷ் ரெய்னா அனைத்து பந்துகளிலும் பவுண்டரி அடித்து 33 ரன்களை குவித்தார். இந்த ஓவரில் 2 சிக்சர்களையும் 5 பவுண்டரிகளையும் விளாசினார். அந்த பவுலர் கிரீஸ் நோபால் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) சேவாக் ( 30 ரன்கள் )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சேவாக். சேவாக் பேட்டிங் செய்வதை ரசிப்பதற்கு என பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் அவுட் ஆகாமல் களத்தில் நிற்கும் வரை பவுண்டரிக்கு பஞ்சம் இருக்காது. தனது அதிரடியின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இவர் 2008ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார். அப்போது ஒரு போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. அந்த போட்டியில் ஐதராபாத் அணியின் பவுலர் ஒருவரின் ஓவரை வெளுத்து வாங்கிய சேவாக் 30 ரன்களை விளாசினார். அந்த பவுலர் வீசிய 6 பந்துகளில், 3 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) விராட் கோலி
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட ஏலத்தில் விடப்பட்டது இல்லை. 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பெங்களூர் அணிக்காக மட்டும்தான் விராட் கோலி விளையாடி வருகிறார். தற்போது சர்வதேச போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் மிகச்சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார் விராட் கோலி.
ஆனால் பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் தொடரில் ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதின. அந்த போட்டியில் குஜராத் அணியின் பவுலர் ஒருவரின் ஓவரை வெளுத்து வாங்கி 30 ரன்களை விளாசினார். அந்த ஓவரில் விராட் கோலி நான்கு சிக்சர்களையும், ஒரு பவுண்டரியும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.