ஐபிஎல் 2019: ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் வலிமையாக விளங்கும் 3 அணிகள்

CSK did not have the best of bowling attacks last year but it's experienced batsmen made up for a weak bowling attack.
CSK did not have the best of bowling attacks last year but it's experienced batsmen made up for a weak bowling attack.

#1 சென்னை சூப்பர் கிங்ஸ்

Chennai super kings Opening Player Watso
Chennai super kings Opening Player Watson

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உலகின் தலைசிறந்த டி20 கிரிக்கெட் அணியாக திகழ்கிறது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்த முதலே சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தி வந்த சென்னை அணி இடையே ஏற்பட்ட சில புகாரினால் மீண்டு வந்து தனது மூன்றாவது ஐபிஎல் கோப்பையை கடந்த சீசனில் வென்றது. அம்பாத்தி ராயுடு, ஷேன் வாட்சன், எம்.எஸ்.தோனி அந்த அணியின் வலிமையான பேட்டிங்காக திகழ்கின்றனர். சுரேஷ் ரெய்னா, டுயுபிளஸ்ஸி, ஷாம் பில்லிங்ஸ் மற்றும் டுவைன் பிராவோ போன்றோர் சென்னை அணியின் கூடுதல் பலமாக திகழ்கின்றனர்.

சென்னை அணியில் கடந்த சீசனில் களமிறங்கிய பேட்டிங் வரிசையுடனே 2019 ஐபிஎல் தொடரிலும் களமிறங்க உள்ளது. ஷேன் வாட்சன் தற்போது நடந்து வரும் பாகிஸ்தான் பிரிமியர் லீக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறார். தோனியும் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளார். இலங்கைக்கு எதிரான ஓடிஐ தொடரில் அதிரடி ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறார் டுயுபிளஸ்ஸி. ஷாம் பில்லிங்ஸ் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 வது டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

சுரேஷ் ரெய்னா, அம்பாத்தி ராயுடு ஆகியோரின் ஐபிஎல் அணுபவம் சென்னை அணியின் கூடுதல் பலமாகும். கேதார் ஜாதவும் சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்குகிறார். இந்த அருமையான பேட்டிங் வலிமையால் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.