சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை பல வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். அதுவும் குறிப்பாக ஓய்வு பெற்ற பல கிரிக்கெட் வீரர்கள் பல சாதனைகளை படைத்து விட்டு சென்றுள்ளனர்.
அந்த சாதனைகளை தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்கள் அந்த சாதனைகளை படிப்படியாக முறியடித்து கொண்டே வருகின்றனர். இவ்வாறு ஒரு வீரர் படைத்த சாதனையை மற்றொரு கிரிக்கெட் வீரரால் முறியடிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் ஒரு சில வீரர்கள் படைத்த சாதனை, மிக கடினமான சாதனையாக கருதப்பட்டு வருகிறது. அந்த வீரர்களைப் பற்றியும், அவர்கள் படைத்த அந்த கடினமான சாதனைகளைப் பற்றியும் இங்கு காண்போம்.
#1) முத்தையா முரளிதரன்
இவர் கிரிக்கெட் உலகின் மிக முக்கியமான ஜாம்பவான்களில் ஒருவர் ஆவார். தனது சுழலின் மூலம் எதிரணியின் பேட்ஸ்மென்களை அச்சுறுத்தக் கூடிய திறமை படைத்தவர். இலங்கை அணியின் மூத்த வீரர்களில் மிக முக்கியமானவர் இவர் தான். இவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகப்பெரிய உலக சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
அது மட்டுமின்றி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 534 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் உலகில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பவுலர் என்ற மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். இவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1347 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது இந்த சாதனை மிகக் கடினமான சாதனையாக கருதப்பட்டு வருகிறது.
#2) ரோகித் சர்மா
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா. இவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். அதுவும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் சாதனை நாயகனாக திகழ்கிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவர்தான். இவர் ஒருநாள் போட்டிகளில் ஒரே இன்னிங்சில் 264 ரன்களை விளாசினார். இவரது இந்த சாதனை சர்வதேச கிரிக்கெட் உலகின் மிகக் கடினமான சாதனையாக கருதப்பட்டு வருகிறது.
#3) ஏபி டி வில்லியர்ஸ்
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஏபி டிவில்லியர்ஸ். இவர் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர் அடிக்க கூடிய திறமை படைத்தவர். அதனால் இவர் MR.360° என்று அனைத்து கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே வீரர் இவர்தான். தனது அதிரடியின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், வெறும் 35 பந்துகளில் சதம் விளாசினார். ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவர்தான். இவரது இந்த சாதனையை முறியடிக்க நெடுநாள் ஆகும் என்பதே கிரிக்கெட் வல்லுனர்களின் கருத்து.