இந்திய அணி விளையாடும் போது ரசிகர்கள் ஒன்று கூடுவதும் அதுவே ஐபிஎல் துவங்கிய பின் சென்னை, மும்பை என சண்டையிட்டுக் கொள்வதும் வழக்கம். இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் வீரர்களுக்கும் பொருந்தும். போட்டிகளில் நடைபெறும் சிறிய வாய்த் தகறாறு பெரிய சண்டையில் போய் முடிகிறது. பொலார்ட் - ஸ்டார்க், காம்பீர் - விராத்கோலி என மைதனாத்திற்குள் வைத்தே வீரர்கள் சண்டையிடுவதை நாம் கண்டதுண்டு. அந்தவகையில் நடைபெற்ற மூன்று மிகப்பெரிய சண்டைகளைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1) விராத்கோலி - கவுதம் காம்பீர் (2013 ஐபிஎல் )
ஐபிஎல் தொடரில் 12 வருடங்களும் ஒரே அணிக்காக விளையாடி வரும் ஒரே வீரர் விராத்கோலி. இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகளிலே இவரின் ஆக்ரோஷமான கேப்டன் தன்மை நாம் அறிந்ததே. எளிதில் கோபமடைந்து விடும் வீரர் இவர். மறுமுனையில் இந்தியாவின் கோபக்கார வீரர் என்றாலே அனைவரின் நியாபகத்துக்கு வருபவர் கவுதம் காம்பீர். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே யாரிடமாவது கண்டிப்பாக சண்டைக்கு சென்று விடுவார் இவர். இவர்கள் இருவரும் 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டியில் அணியின் கேப்டனாக வழிநடத்தினர். அந்த போட்டியில் களத்தில் அதிரடியாக ஆடிய விராத்கோலி கொல்கத்தா பந்து வீச்சாளர் ப்ரதீப் ஷங்வான் வீசிய ஓவரில் வரிசையாக அடுத்தடுத்த இரண்டு பந்துகளிலும் சிக்சர் அடித்து அசத்துவார். அதே வேகத்தில் மூன்றாவது பந்திலும் சிக்சர் அடிக்க முயன்ற கோலி துர்தஷ்டவசமாக தனது விக்கெட்டை இழந்து விடுவார். அப்போது அங்கிருந்த கொல்கத்தா அணி வீரர்கள் அனைவரும் இந்த விக்கெட்டை கொண்டாடுவார்கள். அந்த வேளையில் காம்பீர் விராத் கோலி-யை நோக்கி சத்தமாக கத்துவார். இதனைக் கண்ட கோலி அவரிடம் சண்டைக்கு செல்வார். அப்போது அங்கிருந்து சக வீரர்கள் இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விடுவர்.
#2) பொலார்ட் - மிட்சில் ஸ்டார்க் ( ஐபிஎல் 2014 )
இந்தியாவிலுள்ள இரண்டு வீரர்களுக்கிடையேயான சண்டையினைப் பற்றி பார்த்தோம். தற்போது நாம் பார்க்கவிருப்பது வெளிநாட்டு வீரர்களுக்கு இடையேயான சண்டையைப் பற்றி. ஐபிஎல் தொடரில் ஏற்ப்பட்ட இந்த. சண்டைக் காட்சி வீடியோவை நம் அனைவரும் கண்டிப்பாக பார்த்திருப்போம். 2014 ஆம் ஆண்டு மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய இந்த போட்டியில் தான் அந்த சம்பவம் அரங்கேறியது. பொலார்ட்-க்கு ஆஸ்திரேலிய வீரர்களை வம்பிழுப்பதில் அலாதி பிரியம். ஏற்கனவே ஷேன் வார்னே உடன் ஆறாவது ஐபிஎல் சீசனில் சண்டையிட்டுள்ளார். அந்தவகையில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பொலார்ட் களத்தில் நிற்கும் போது 17வது ஓவரை ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரான மிட்சில் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரில் பொலார்ட் தயாராவதுக்கு முன்னறே ஸ்டார்க் பந்தினை வீசி விடுவார். இதனால் கடும் கோபமான பொலார்ட் அவரை நோக்கி தன் கையிலிருந்த பேட்டை தூக்கி வீசுவார். பின் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். இந்த சம்பவம் அந்த சீசனிலேயே மிகப்பெரிய அளவில் பார்க்கப்பட்டது.
#1) ஹர்பஜன் சிங் - ஶ்ரீசாந்த் ( ஐபிஎல் 2008 )
ஒரு காலத்தில் இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக விளங்கிய ஶ்ரீசாந்த் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அந்த தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுவிடும். இதனால் கோபமடைந்த ஹர்பஜன் சிங், அங்கிருந்த ஶ்ரீசாந்தின் கண்ணத்தில் அறைந்து விடுவார். இந்த பிரச்சினை அந்த சீசனில் மிகப் பெரிய அளவில் பார்க்கப்பட்டது. இதனால் ஹர்பஜன் சிங் ஆடுத்து சில போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டார்.